ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 31 அக்டோபர், 2013

பரமக்குடி துப்பாக்கி சூடு அறிக்கைக்கு எதிர்ப்பு கிருஷ்ணசாமி வெளிநடப்பு

சென்னை: பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்தி ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்கவில்லை. நடவடிக்கைகள் பயனில்லாமல் போனதால் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிடப்பட்டது.


வன்முறையை தடுக்க துப்பாக்கிச்சூடு அவசியமாக இருந்தது என விசாரணை ஆணையம் கருதுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருந்திருந்தால் தென் மாவட்டங்களுக்கு வன்முறை பரவியிருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக