ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 10 ஜூலை, 2014

மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து பேச அனுமதி மறுப்பு: சட்டசபையில் இருந்து 7 கட்சிகள் வெளிநடப்பு ..



தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று (10.07.2014) துவங்கியது. சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் தே.மு.தி.க., தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்தது குறித்து பேச அனுமதி கோரினார்கள்.

சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எழுந்து நின்று, மவுலிவாக்கம் கட்டிட விபத்து குறித்து கொடுக்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மானம் பற்றி பேச அனுமதி கேட்டார்.

சபாநாயகர் தனபாலன், அந்த பிரச்சினை குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன், புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அது பற்றி இங்கு விவாதிக்க அனுமதி கிடையாது என்றார்.

இதையடுத்து திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மமக, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக