ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 25 ஜூலை, 2014

சட்டப்பேரவையிலிருந்து தி.மு.க. வெளியேற்றம்: புதிய தமிழகம், மமக, தே.மு.தி.க வெளிநடப்பு! -


8தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, தே.மு.தி.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் உதயகுமார், சுனாமி நிவாரண திட்டத்தை தி.மு.க ஆட்சியில் முறையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு சென்று முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், வறட்சி தொடர்பான பதிலுரையில் அமைச்சர் உதயகுமார் தவறான தகவல்களை அளிக்கிறார் என்று கூறினார்.
மேலும், தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் சபாநாயகர் செயல்படுகிறார் என்றும், சபாநாயகர் சர்வாதிகாரிபோல செயல்படுகிறார் என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, வறட்சி தொடர்பாக அமைச்சர் உதயகுமார் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், ரிஷிவந்தயம் தொகுதியில் பாலம் அமைக்க கோரி தே.மு.தி.க வினர் நடத்திய போராட்டம் பற்றி அமைச்சர் மோகன் விமர்சனம் செய்தார்.
மேலும், தே.மு.தி.க.வின் போராட்டத்தை நாடகம் என்று அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த கூட்டத் தொடரில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் 3வது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக