ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

பாளை அருகே 2 பேர் கொலை: பெண் உள்பட 4 பேர் கைது..

பாளை அருகே உள்ள கொமந்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது28). மள்ளர் நாடு அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். இவர் அந்த பகுதியில் பல்வேறு பிரச்சினைகளிலும் தலையிட்டு சமரசம் செய்து வந்தார். இது அந்த பகுதியில் உள்ள மற்றொரு பிரிவினருக்கு பிடிக்கவில்லை.
இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற மகேசை பர்கிட் மாநகர் அருகே ஒரு கும்பல் வழிமறித்து சரமாரி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை நடந்து 2 மணி நேரத்தில் மேலப்பாட்டத்தை சேர்ந்த மாரிமுத்து (22) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் அடுத்தடுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் சீவலப்பேரி, மேலப்பாட்டம் பகுதியில் பெரும் பரபரப்பு–பதட்டம் ஏற்பட்டது.
பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொலை செய்யப்பட்ட மகேஷ், மாரிமுத்து ஆகிய 2 பேரது உடல்களும் மருத்துவ பரிசோதனை முடிந்து நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முயன்றனர். ஆனால் அவர்கள் உடல்களை பெற உறவினர்கள் மறுத்து விட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக மள்ளர்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, தேவேந்திர குல கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி கண்மணி மாவீரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரண்டு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கொலை செய்யப்பட்ட 2 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, எதிரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை வலியுறுத்தி இன்று 2–வது நாளாகவும் அவர்கள் உடல்களை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகளை கைது செய்ய தாழையூத்து டி.எஸ்.பி. மலைசாமி, பாளை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இதில் மகேசை கொலை செய்த வழக்கில் அவனாப்பேரியை சேர்ந்த பட்டன் மகன் லட்சுமணன் (24) என்பவரையும் மருதூரை சேர்ந்த ஆண்டி என்ற செல்லபாண்டி மனைவி செல்லம்மாள் (35) என்பவரையும் இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இது போல மாரிமுத்து கொலையில் மணக்காடு பகுதியை சேர்ந்த முத்துராஜ் (21), முருகையா (48) ஆகிய 2 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மகேஷ் கொலை வழக்கில் மருதூரை சேர்ந்த ரமேஷ், லட்சுமணன் உள்பட 5 பேர்களையும் தேடி வருகிறார்கள்.
மாரிமுத்து கொலையில் மணக்கரையை சேர்ந்த பாலு, ஆறுமுகம் உள்பட மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக