ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 15 டிசம்பர், 2010

நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்! சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி!

நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்! சிறை மீண்ட ஜான் பாண்டியன் நெத்தியடி!

தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை, கோவை விவேக் கொலை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்துள்ளது. எட்டு வருட சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை!







சிறை வாசலைவிட்டு வெளியே வந்த தன் கணவருக்கு இனிப்பை ஊட்டி சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார் பிரிஸில்லா பாண்டியன். அதன் பின், தொண்டர்கள் காரில் அணிவகுக்க, வழியெங்கும் ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுக்க, மனைவியோடு காரில் நெல்லைக்குப் புறப்பட்டார் ஜான் பாண்டியன். ஜூ.வி-க்காக அவர் அளித்த பிரத்தியேகப் பேட்டி இது...







''எட்டு வருட சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?''



''என்னதான் இருந்தாலும், சிறைதானே. சிறைக்குள் பலர் இருந்தாலும், அவங்களை நண்பர்கள்னு எப்படி ஏத்துக்க முடியும்? சிறையில் இருந்தப்ப, கைதிகள் பலரிடமும் பேசி இருக்கேன். 75 சதவிகிதம் பேர் பொய் வழக்குகள் போடப்பட்டு, செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கிறவங்கதான். இதோ... சுப்ரீம் கோர்ட், இப்போ என் மீது தப்பு இல்லைன்னு சொல்லி விடுதலை செஞ்சிருக்கு. அப்போ இந்த எட்டு வருஷம் நான் அனுபவிச்ச தண்டனைக்கு யார் பொறுப்பு? உள்ளே இருந்த காலத்தில் முடங்கிப்போன எனது உழைப்புக்கு யார் பொறுப்பு? இந்தக் கால விரயத்துக்கு யார் பொறுப்பு? சும்மா தண்டனை தருவது மட்டும்தான் சட்டத்தின் வேலையா? இதற்கும் சட்டம்தான் பதில் சொல் லணும்!



ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம். ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது உண்மையானால்... நித்தமும் தண்டிக்கப்படும் நிரபராதிகளுக்கு என்ன பரிகாரம்? இந்தக் கேள்விகளோடதான் சிறையில் இருந்து வந்திருக்கேன்.''



''உங்க பார்வையில் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்குது?''



''தி.மு.க. அரசின் செயல்பாடுகள் அத்தனையும் நான் ஜெயிலுக்குள் இருந்து பேப்பர்லதான் படிச்சிட்டு இருந்தேன். அதை மட்டும்வெச்சு, ஒரு முடிவுக்கு வந்துட முடியாது. இப்போதானே வெளியே வந்திருக்கேன். இனிதான் நாட்டுல என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கணும். அதுக்குப் பிறகு கச்சேரியை வெச்சுக்கிறேன்!''



''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்... ஆ.ராசா ஒரு தலித் என்பதால்தான் பழிவாங்கப் படறார்னு சிலர் கொதிக்கிறாங்க... நீங்க என்ன சொல்றீங்க?''



''தலித் என்கிற வார்த்தையே முதல்ல எனக்குப் பிடிக்காது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டும்தான் கண்டவனும் ஒரு பேரை வெச்சுக்கிட்டு இருக்கான். நாங்க தலித் இல்லை... தேவேந்திர குலம்!



எங்களைப்போன்ற தாழ்த்தப்பட்ட மக்களை எல்லா ஆட்சியிலுமே பழிவாங்கத்தான் செய்றாங்க. இப்போ ராசாவை மட்டும் பழிவாங்குறாங்கன்னு எப்படி சொல்ல முடியும்? பிரச்னைன்னு வரும்போதுதான், இப்படி இனத்தோட பேரைச் சொல்லி அனுதாபம் தேடிக்கப் பார்ப்பது தப்பு. அரசியல் அதிகாரத்தில் இருக்கிறவங்க செய்யும் சூழ்ச்சியில், தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வர்றாங்க என்பது மட்டும்தான் உண்மை.''



''ஜெயலலிதா யாரோட கூட்டணி வெச்சுக்கிறது சரியா இருக்கும்னு நினைக்கிறீங்க?''



''ஜெயலலிதாவோ, கருணாநிதியோ... யாருடன் கூட்டணி என்பது அவங்களோட விருப்பம். இனிமே, நான் என்ன பண்ணப்போறேன்கிறதை என் மக்களைக் கேட்டுத்தான் முடிவு செய்வேன்.''



''உங்க எதிர்காலத் திட்டம் என்ன..?''



''என்னோட மக்களுக்கு எதுவும் செய்ய முடியாம, இப்படிப் பொய் வழக்குப் போட்டு ஜெயில்ல தள்ளிட் டாங்களேங்கற வருத்தம் மட்டும்தான் இதுவரைக்கும் எனக்கு இருந்தது. இந்த ஒரு விஷயத்தைத்தான் நான் யோசிச்சுட்டு இருந்தேன். அதைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்கவே இல்ல. இன்னிக்கு நான் வெளி யில வர்றேன்னு தெரிஞ்சதும், எட்டு வருஷமா தலைவர் இல்லாமத் தவிச்ச என் தேவேந்திர குல மக்கள் துடிச்சு எழுந்து இருக்காங்க. அவங்க பட்ட வேதனைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியவங்க, சொல்லியே ஆகணும்!



தலித் என்ற பேரைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களை நிறையப் பேரு இப்போ ஏமாத்திட்டு இருக்காங்க. நான் வெளியில வந்ததைப் பார்த்து, அவங்க மிரண்டு போயிருக்காங்க. தமிழகம் முழுக்க மாவட்டவாரியாப் போய் மக்களைச் சந்தித்து, அவங்க மனசுல இருக்கிறதைக் கேட்டுத் தெரிஞ்சுப்பேன். ஆனா ஒண்ணு மட்டும் உறுதி... என்னோட அரசியல் பணி முன்பைவிட இன்னும் வேகமாத் தொடரும்.



இன்னும் உங்ககிட்டப் பேச வேண்டியது நிறைய இருக்கு. அதுக்குக் காலமும் நேரமும் கூடிய சீக்கிரமே வரும். மக்களை ஏமாத்தும் அத்தனை பேரோட முகத்திரைகளையும் அப்போ கிழிப்பான் இந்த ஜான் பாண்டியன்!''



நெல்லையை நோக்கிச் சீறுது கார்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக