ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

தேவேந்திர குலத்தின் போர் வாள் தளபதி ஜான்பாண்டியன்

தேவேந்திர குலத்தின் போர் வாள் தளபதி ஜான்பாண்டியன் விடுதலையானார்!


தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் இன்று காலை சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆனார். பின்னர் அவர் திரளான தொண்டர்களுடன் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், 8 ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்ப்பந்தத்தால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் மேம்பாட்டிற்கு உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன். தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது? தனித்து போட்டியிடுவதா? என கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் அறிவிப்பேன் என்றார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக