ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 15 டிசம்பர், 2010

இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களை சந்திபேன்-சேலத்தில் ஜான்பாண்டியன் பேட்டி

இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களை சந்திபேன்-சேலத்தில் ஜான்பாண்டியன் பேட்டி






தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் இன்று காலை சேலம் மத்திய ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார். பின்னர் அவர் திரளான தொண்டர்களுடன் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ஜான்பாண்டியன் இன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை ஆவார் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என திரளானோர் இன்று அதிகாலை சேலம் மத்திய சிறை முன்பு திரண்டனர்.



நெல்லை, தூத்துக்குடி, கோவை , மதுரை, ராமநாதபுரம், தேனி, கடலூர், உள்பட பல ஊர்களில் இருந்தும் தொண்டர்கள் கார், வேன்களில் வந்து அவரை வரவேற்க காத்து இருந்தனர். ஜான்பாண்டியன் விடுதலை ஆனதைத் தொடர்ந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணி வித்தும் வரவேற்றனர்.



இதனால் சேலம்- ஏற்காடு ரோட்டில் போக்குவரத்து பாதித்தது.சேலத்தில் இருந்து அஸ்தம்பட்டி, கோரிமேடு, அடிவாரம் செல்லும் பஸ்களும், அடிவாரத்தில் இருந்து வந்த பஸ்களும் கன்னங்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டன.



இதையொட்டி சேலம் போலீஸ் கமிஷனரும், ஐ.ஜியுமான சுனில் குமார்சிங் உத்தரவின் பேரில் ஜெயில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இதன் பின்னர் அவர் கூறியதாவது:-



8ஆண்டுகளுக்கு பின்னர் சிறையில் இருந்து விடுதலை ஆகி உள்ளேன். சில அரசியல் நிர்ப்பந்தத்தால் நான் பழி வாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.



இனி கிராமம், கிராமமாக சென்று தேவேந்திர குல மக்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் மேம்பாட்டிற்கு உழைப்பேன். அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவேன்.



தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது? தனித்து போட்டியிடுவதா? என கட்சி நிர்வாகிகளிடம் கலந்து பேசி விரைவில் அறிவிப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக