ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 4 டிசம்பர், 2010

கோவை கொலை வழக்கில் தளபதி ஜான்பாண்டியன் விடுதலை

கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தேவேந்திர குல வேளாளர்களின் முக்கிய தலைவர் தளபதி ஜான் பாண்டியனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 1993ம் ஆண்டு கோவையில் நடந்த கொலை தொடர்பாக மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தளபதி ஜான்பாண்டியன் கடந்த 2003ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து ஜான்பாண்டியன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீபுர்கார், ஸ்ரீயாத் ஜோசப் கொண்ட அமர்வு தளபதி ஜான் பாண்டியன் உள்பட 5 பேரை விடுவித்து உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக