ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 27 அக்டோபர், 2010

சுந்தரலிங்க தேவேந்திரர்

சுந்தரலிங்கம் தேவேந்திரர் (Sundaralingam Devendrar) தமிழகத்தின் கடைகோடியான திருநெல்வேலி மாவட்டத்தில் கவர்னகிரி என்னும் ஊரில் பிறந்த விடுதலை போராட்ட வீரர். இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் வீராக சேர்ந்து பின்னாளில் துணை தளபதியாகவும், தளபதியாகவும் மாறினார். கும்பினி (ஆங்கிலயேர்) எதிரகாக நடந்த போரில் வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றோர்களுடன் பங்கு பெற்று தனது இன்னுயிரை வீரர்களோடு மாய்ந்தவர். தமிழக அரசு இவரின் பெருமையெய் போற்றி இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் எடுத்துள்ளது. இவரின் நினைவை போற்றி முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிற்பம் (சிலை) வைக்கப்பட்டுள்ளது.
] வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வருவது போன்ற வரலாறு உண்மையில் இல்லை. கட்டபொம்மன் வரி கட்டுவதற்காக சாக்சன் (Jackson) னிடம் இராமநாதபுரத்தில் இருந்து குற்றாலம், சிவகிரி என பல இடங்களுக்கு அலைய வைக்கப்பட்டது பலருக்கு அறிந்து இருக்க வாய்ப்பில்லை. மேலும் கும்பினியர் கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களை கொன்றபின், அவ்விடத்தில் இருந்த ஆவணங்களை அழிந்து விட்டதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். அப்போர் நடந்த பல ஆண்டுகளுக்கு கழிந்து, போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும், கூத்துகளும் இயற்றப்பட்டன. இப்படியாக இயற்றப்பட்ட பாடல்களில், கூத்துகளில் தனது குமுகத்தை சேர்ந்தவரை பற்றி பெருமையாக இட்டுகட்டி கூறப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் விளம்புகின்றனர். வானமாமலை இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டு புற பாடல்களை தொகுத்துள்ளார். இதனின் ஊடாகவே இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.

கட்டபொம்மன் மூன்று ஆண்டுகளாக வரி கட்டவில்லை என்றும், அவ்வரியெய் விரைவில் கட்டுமாறு, சாக்சன் மூன்று மடல்களை கட்டபொம்மனுக்கு அனுப்புகிறார். நான்காவது மடலில் நாங்கள் அனுப்பிய மடல்களுக்கு விடை அனுப்பாமலும், வரியெய் ஒழுங்காக செலுத்தாதற்கும் நாங்கள் போர்தொடுக்க முடிவு செய்யுள்ளதாக தெரிவிக்கிறார். இதனால் தனது வீரர்களோடு கட்டபொம்மன் இராமநாதபுரம் சென்று, சாக்சனை பார்க்க விரும்புவதாக தெரிவிக்கிறார். சாக்சனோ தான் குற்றாலம் செல்வதாக தகவல் தந்து , குற்றாலம் செல்கிறார். கட்டபொம்மனும் தனது பரிவாரங்களோடு குற்றாலம் சென்று சாக்சனை சந்திக்க விரும்புகிறார். சாக்சனோ சிவகிரியில் சந்திப்பதாக சொல்லி, அவ்விடத்திலும் சந்திக்காமல் செல்கிறார். இறுதியாக அலைகழிக்கப்பட்டு இராமநாதபுரத்தில் சாக்சன், கட்டபொம்மனை பார்த்து பேசுகிறார். சந்திப்பின் போது, கட்டபொம்மனை ஒரு மன்னன் என கருதாமல், நிற்க வைத்து பேசுகிறார். இதனால் சினம் அடைந்த கட்டபொம்மன் கோபமாக வெளியேறும்பொழுது, ஒரு வெள்ளையர் தடுக்கிறார். இதனை பார்த்த கட்டபொம்மனின் வீரர் ஒருவர் வெள்ளையரை வெட்டி சாய்ந்து அவ்விடத்தில் இருந்து கட்டபொம்மனை மீட்டு கோட்டைக்கு செல்கிறது.

கோட்டை சென்ற கட்டபொம்மன், அன்றைய சென்னையில் உள்ள செயலர்க்கு விரிவாக மேல நடந்த நிகழ்வை பற்றி மடல் எழுதுகிறார். பின்னாளில் உசாவல் குழு சாக்சனிடம் தவறு உள்ளதென்றும், ஆனால் இறந்த வெள்ளையரின் மனைவிக்கு கட்டபொம்மன் திங்கள்தோறும் (மாதம்) உதவி பணம் கொடுக்க வேண்டுமென்று கட்டளை இடுகிறது. கட்டபொம்மன் அதை அப்படியே ஏற்றுகொள்கிறார். சில மாதங்களில் சாக்சன் மாற்றப்பட்டு அவ்விடத்திற்கு ஆலன் யூம் வருகிறார்.

இவ்வேளையில் கட்டபொம்மனின் படை தளபதி தானாதிபதி தனது மகளின் திருமணத்திற்க்காக அருகில உள்ள பாளையங்களில் நெற் களஞ்சியங்களை கொள்ளை அடிக்கும் பொழுது, இரு காவலர்கள் கொல்லப்படுகின்றனர். இந் நிகழ்வுகாகவும், வரி செலுத்தாமைக்ககாகவும் கட்டபொம்மனின் மீது போர்தொடுப்பதாக கும்பினியர் அறிவிக்கிறார்கள். இப்போரின் போது கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு, ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னாளில் ஊமைத்துரை கட்டபொம்மனின் வீரர்களால் விடுவிக்கப்பட்டு ஏழு நாளில் பழைய இடந்தில் மண்சுவரில் ஒரு கோட்டை எழுப்படுகிறது.

பின்னாளில் நடக்கும் சண்டையில் ஊமைத்துரையின் கோட்டை அழிக்கப்படுகிறது. அவர் அவ்விடத்தில் தப்பி மருதுபாண்டியர்களின் உதவியெய் நாடுவது வரலாறு. பின்னாளில் மருதுபாண்டியர்கள் தோற்கடிக்கப்படும் பொழுது, ஊமைத்துரை தப்பி பழனிக்கு அருகில் உள்ள விருப்பாச்சி மலையில் நடக்கும் சண்டையில் பிடிபட்டு, மற்றவரோடு தூக்கிலிடப்படுகிறார்.

[] சுந்தரலிங்கத்தின் பங்கு
வெள்ளையர்களின் ஆவணப்படி கட்டபொம்மன் , ஊமைத்துரை, தானாதிபதி இவர்களை பற்றித்தான் அறியப்படுகிறது. மற்றவர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நாட்டுபுற பாடல்கள் மூலம்தான் தெரியவருகிறது.

சுந்தரலிங்கம் தனது ஊரில் உள்ள கண்மாயெய் (குளம்) பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்து கட்டும்பொழுது ஏற்படும் சண்டையில், சுந்தரலிங்கம் மிக திறமையாக போரிடுவதால் அம்முயற்சி தடுக்கப்படுகிறது. இப்போரை அறிந்த கட்டபொம்மன் தனது படைபிரிவில் முக்கிய இடத்தை அளிக்கிறார். பின்னாளில் இராமநாதபுரத்தில் ஏற்படும் கலவரத்தில் சுந்தரலிங்கமே ஒரு வெள்ளையரை வீழ்த்தி கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட இழுக்குகளை நீக்குவதாக தமிழவேள் என்னும் ஆய்வாளர் நாட்டுபுற பாடல்களை கொண்டு உறுதி செய்கிறார். மேலும் பல ஆய்வாளர்கள் தானாதிபதிதான் வெள்ளையரை கொன்றார் என்றும், மேலும் பல ஆய்வாளர்கள் மற்றவர் (வெள்ளையன்) என்பதால் குழப்பநிலை உள்ளது.

இதன்பின் தான் சுந்தரலிங்கம் துணை படை தளபதியாக கட்டபொம்மனால் நியமிக்கபடுவதாக தமிழவேள் தனது ஆய்வு மூலம் கூறுகிறார்.

ஊமைதுரையெய் பாளையங்கோட்டை சிறையில் இருந்து மீட்பதற்கு சுந்தரலிங்கமும், முத்தன், கந்தன் பகடைகள் ஈடுபட்டதாகவும், மேலும் ஏழு நாளில் கோட்டையேய் கட்டி முடித்ததாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இறுதியாக நடக்கும் விருப்பாச்சி மலையில் நடக்கும் போரில் ஊமைதுரையோடு சுந்தரலிங்கம் பிடிக்கப்பட்டு தூக்கிலிடபடுவதாக தமிழவேள் தனது ஆய்வின் மூலம் தெரிவிக்கறார். மேலும் சில ஆய்வாளர்களோ சுந்தரலிங்கமும் தனது மனைவியுமான வடிவு வோடு , கும்பினியாரின் வெடிமருந்து கிடங்குகளை ஒரு தற்கொலை முகவர்களாக சென்று அழிந்தாக சொல்லப்படுகிறது

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள்

சமூக உரிமை போராளி மள்ளர் குல சிங்கம் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் செப் 11 பரமக்குடியில் மிக மிக அமைதியாக நடந்து முடிந்தது. வேறெந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மள்ளர் குல சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நினைவு நாள் அன்று ஒவ்வொரு மள்ளர் இன இளைகர்களின் முகத்தில் தோன்றிய சந்தோசம் அளவில்லாதது. அவர்கள் முகத்தில் தோன்றிய சிரிப்பு "நான் மள்ளர் இனத்தவன்" என்ற உரிமையை எனக்கு எடுத்து காட்டுவதாக எனக்கு தோன்றியது. வழி நெடிகிலும் அய்யா இம்மானுவேல் படம் போட்ட பேனர்கள் இருந்தன. கூட்டத்தில் ஒவ்வொரு மள்ளர் இன இளைகனும் ஆடி பாடி நினைவு நாளை விமரிசையாக கொண்டாடினர். நானும் ஆடி பாடி கொண்டிருக்கையிலே கூட்டத்தில் ஒரு சகோதரன் கேட்டான் "ஏன் பாசு இவ்வளோ பேரு இருக்காங்களே அப்புறம் ஏன் நம்ம கட்சி தேர்தல்ல ஜெயிக்க மாட்டேங்குது. அவன் கேட்ட அந்த கேள்வி எனக்குள் என்னமோ மாதிரி பண்ணியது.அவன் கேட்ட கேள்வியிலே எந்த வித குறையும் இல்லை. அப்படிஎன்றால் யார் மீது குறை ?அவன் கேட்ட கேள்வியால் அங்கு இருக்க முடியாமல் அய்யாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தி விட்டு அதற்கு விடை தேடி கொண்டே என் ஊருக்கு நடை பயணமானேன். அதற்கு விடை எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரியுமா

வியாழன், 21 அக்டோபர், 2010

தேவேந்திரர்மறுமலர்ச்சி பேரவைசோழமண்டலம்

தேவேந்திரர்மறுமலர்ச்சி ஒரு நாள் பயிலரங்கம்
நாள். 24.10.2010 place.tamilnadu hotel (near bsnl office)நாகப்பட்டினம் மாவட்டம்

சனி, 16 அக்டோபர், 2010

தியாகி

தியாகி












இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை


"செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்

தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்"

"நாங்கள் தளர்ந்தவர்கள் அல்லர்.நாங்கள் என்றுமே தன்னம்பிக்கையை இழந்தவர்கள் அல்லர்

எவருடைய உழைப்பும் இங்கு வீணாக்கப்படுவதில்லை

இந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்"

கொள்கை

கொள்கை

பயனுள்ள கொள்கையானால்

ஓரு கொள்கை நல்ல கொள்கை என்றால், அதற்கு இரண்டு சக்திகள் இருக்க வேண்டும். முதலாவது அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதோடு கூடவே அக் கொள்கை எல்லா மக்களாலும், எவ்வித நிர்ப்பந்தமின்றி தாமாகவே பின்பற்றித் தீர வேண்டியதாகவும் இருக்க வேண்டும்.

பொறுமை

பொறுமை

த‌ண்ணிரையும் ச‌ல்ல‌டையில் அள்ள‌லாம் !!!

பனிக்க‌ட்டியாக‌ உறையும் வ‌ரை பொறுமையாக‌‌ இருத்தால் !!

பகுத்தறிவு

பகுத்தறிவு


பகுத்தறிவின் பலம்

நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகி விடுவோமேயானால், நம் மனிதத்தன்மை வளர்ச்சி மட்டுமல்ல சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும். மனித சமுதாயத்தில் ஒழுக்கமும் நாணயமும் ஏற்படும்.

முயற்சி

பரிகார முயற்சி


எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடை பெறுகின்றதோ அங்கு தான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறு கொண்டு எழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.

புரட்சி

புரட்சி என்பது


ஒரு விசயம் அதன் பழக்க வழக்க நிலையிலிருந்து மாற்றமடைவதும்,

அதிலும் அது தலை கீழ் நிலை அடையும்படி மாற்றமடைவதுமேதான்

புரட்சி என்று சொல்லப்படுவதாகும்.

குரல்

                                                                                     





ஓங்கிநாம் எழுப்பும் குரல்

நிச்சயம் விடிவின்

எல்லையைத் தொடும்.

உரிமைக்குரல்!

உரிமைக்குரல்!




கலவரம் கொள்ளாதே நிலவரம்


நிச்சயமாய் தலை கீழாய் மாறுமடா...!






இந்த உலகம் உனக்கு சிறையல்ல


நீதான் கைதியாய் வாழ்கிறாய்






விடியல் வர காலங்கள் பல ஆகலாம்


ஆனால்


விடியல் நிச்சயம் வரும் மனதை சிதறவிடாதே!






'எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து


மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,


அவனால்


நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது!"!






'தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது


நிறைய இருக்கிறது!"






சலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே!


உனதுரிமையைக் கேள்!


சலுகை நிரந்தரமானதல்ல!


உரிமை மட்டுமே நிரந்தரமானது!






போராட்டமானது ஒவ்வொருவராலும்


ஒவ்வொரு வீட்டிலும் ஆரம்பிக்கப்படவேண்டும்....

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

ஒரு புரட்சியாளரை உருவாக்கிய வீடு

மாவீரர் தியாகி இம்மானுவேல் சேகரனின் 86வது பிறந்த நாளில் அவர் ஆற்றிய சமுதாய பணி.தனி ஒரு மனிதனால் ஏற்படுத்தபட்ட மாற்றங்கள் .தேவேந்திர சொந்தங்களே தேவேந்திர குல வேளாளர் என்ற சமுதாயம் ஏதோ! நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல அது இந்த உலகம் தோன்றிய போதே தோன்றியது .கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய குடி தமிழ் குடி என்பார்கள். தமிழ் குடியில் முதல் குடி (பள்ளு) குடி என்பர். இந்த சமுதாயத்தை பல்வேறு பெயர்களின் மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். முற்காலத்தில் இந்த நாட்டை ஆண்ட சமுதாயம் பின்பு படிப்படியாக ஜாதி வெறியாலும் குறு நில மன்னர்களாளும் அவர்களின் எடுபிடிகளாலும் தேவேந்திர குல வேளாளர் மக்களை விவசாய கூலிகளாகவும் பயன்படுத்தி நாளைடைவில் தாழ்த்தப்பட்டவர்களாக்கி ஆளுகின்ற அரசியல்வாதிகளின் அதிகாரத்தின் துணையோடு தீண்டத்தகாதவர்களின் பட்டியலில் சேர்த்தார்கள். தேவேந்திர குல மக்கள் இந்த நாட்டில் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ முடியாத சூழ்நிலை பல நூறு வருடங்களாக நிலவி வந்தது. இராமநாதபுரம் மாவட்டத்தின் காங்கிரஸ் கூட்டங்களை எல்லாம் 'தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களாக' மாற்றிய பெருமை இம்மானுவேலைச் சாரும். மாவீரன் இம்மானுவேல் மேடைகளில் பேசினால் அனல்பறக்கும். கேட்பவர் இரத்தம் கொதிக்கும்; அந்த அளவிற்கு மேடைப் பேச்சிலேயே வீரஉணர்வூட்டுவார்.'நாய்கள் கூட குளத்தில் சுதந்திரமாக தண்ணீர் குடிக்கிறது. ஆனால்/ தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் குடிக்க முடிவதில்லை. இந்த இழிநிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது' என்று வீரமுழக்கமிட்டார்.அவர் காலத்தில் இருந்த அரசியல்வாதிகளைப் போல வார்த்தைஜாலங்களாலும் வெற்று ஆரவாரத்தாலும் பாமர மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடவில்லை. எதையும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுகின்ற நெஞ்சுறுதி அவரிடம் இருந்தது. அதே நேரத்தில் பிறரை அநாகரீகமாகவோ/ தரக்குறைவாகவோ பேசியதுமில்லை.இவருடன் எப்போதும் இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்; கிராமங்களில் கூட்டம் நடத்தும் போது அவருடன் பல கிராமங்களுக்குச் சென்று வருவார்கள். குறிப்பாக அவருடன் பல ஊர்களில் மக்கள் பணி செய்தவர்கள். இம்மானுவேல் காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றமுடையவர். எளிமையான வாழ்க்கையும்/ இனிய சுபாவமும் அவரை மக்களுடன் நெருக்கமாக பிணைத்தது. கணீரென்று சத்தமாகத்தான் எப்போதும் பேசுவார். எதற்கும் அஞ்சாதவர்/ பிரச்சனைகளை துணிச்சலுடன் அணுகும் மனோதிடம் அவரிடம் இயல்பிலேயே இருந்தது. குற்றமிழைத்தவர்கள் யாரானாலும் நேருக்கு நேர் சந்தித்து தவறை சுட்டிக் காட்டும் அஞ்சாநெஞ்சமுள்ளவர். 1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது. இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர். "என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். இம்மானுவேல் சேகரனார் வாழ்ந்த வீடு இன்றளவும் பாழ் அடைந்த நிலையில் தான் மணல் மேடாக காட்சி அளிக்கிறது. அவரின் மறைவுக்குப் பிறகு யாரும் அந்த வீடு பக்கமே செல்லவில்லை. தேர்தல் நேரத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் ஓட்டுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பெயரளவில் மட்டுமே இம்மானுவேல் சேகரனாரின் பெயரையும் உருவ படங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் சுமார் நூறுக்கும் மேற்ப்பட்ட தேவேந்திர குல சமுதாய அமைப்புகள் பல்வேறு தலைவர்களின் தலைமையின் கீழ் இயங்குகிறது. ஒரு கோடிக்கும் மேல் தேவேந்திரர்கள் இருந்தும் அவர் மறைந்து 53வருடங்களாகியும் அவர் வாழ்ந்த சிறு வீட்டை கூட நம்மால் பேணி நினைவுச் சின்னமாக பாதுகாக்க முடியவில்லை. அவரது பெயரையும் உருவப் படத்தையும் பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் பணம் சம்பாதிப்பதற்காகவும் மக்கள் மத்தியில் ஆதரவு பெறுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.சுய நல நோக்கத்தில் அரசியல் லாபத்திற்காக இந்த புரட்சியாளரைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். தேவேந்திர குல சமுதாய மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்து விழிப்படைய செய்ய வேண்டும். சுய நல சமுதாய போலி தலைவர்களை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு இன்றைய இளைஞர்களின் கையில் தான் உள்ளது. தமிழகத்திலேயே பயமறியா இளைஞர்களை கொண்ட சமுதாயம் நம் சமுதாயம். ஆகவே நம்மால் அனைத்தும் சாத்தியமே. மாற்று அரசியல் கட்சிகளுக்கும் சுய நல அமைப்புகளுக்கும் பின்னால் அணி திரள்வதை விட்டு விட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சமுதாய உணர்வாளர்களையும் இளைஞகர்ளையும் ஒரு குடையின் கீழ் ஒற்றூமையாக அணி திரட்டி சமுதாய தியாகிகளின் கனவுகளை நினைவாக்குவோம். பல்வேறு சமுதாய தலைவர்கள் வாழ்ந்த வீடுகளை எல்லாம் அதை சார்ந்தவர்கள் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வரும் போது நமக்காக போராடி உயிர் நீத்த புரட்சியாளர் இமமானுவேல் சேகரனாரின் வீடு மட்டும் இன்றும் மணல் மேடாக செல்லூரில் காட்சியளிக்கிறது. இது ஒட்டு மொத்த தேவேந்திரர்களுக்கும் அவமானச் சின்னம். புரட்சியாளரின் வீட்டைக் கட்டி எழுப்பி அதை நினைவு இல்லமாக பாதுகாக்கவும் வருங்கால சந்ததியினருக்கு இவரின் வரலாற்றை அறியவும் வழி வகை செய்ய வேண்டும். தியாகி பிறந்த புனித இல்லத்தை ஒரு அழியா வரலாற்றுச் சின்னமாக கட்டி எழுப்ப வேண்டியது ஒவ்வொறு தேவேந்திரகளின் கடமை ஆகும். எதையும் தாங்கும் நெஞ்சழுத்தம்… அலட்டிக்கொள்ளாத ஆழம்… அலை, அலையாய் புரட்சிகர பிடிவாதம்… ஏறி அடிக்கையில் எதிரியை மிச்சம் வைக்காத போர்க்குணம்… தனக்கென துரும்பளவும் வாழாத தூய்மை… கொண்டாடுவோம் மாவீரர் தியாகி இம்மானுவேல் சேகரனின் 86வது பிறந்த பிறந்தநாளை.....

புதன், 6 அக்டோபர், 2010

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் திருவாரூர்

திருவாரூர்  மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புசார்பில் மனித உரிமை மீறல்கள் எதிர்த்து குரல் கொடுத்த காரணத்துக்காக, கடந்த 1957-ல் பரமகுடியில் கொலையுண்ட தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்டவேண்டும்என்று வலியுறுத்தி ஜூன் 06அன்று  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்   நடைபெற்றது

தேவேந்திரர்மறுமலர்ச்சிபேரவை பயிலரங்ககாட்சிகள் நாகப்பட்டினம்

தேவேந்திரர்மறுமலர்ச்சிபேரவை பயிலரங்ககாட்சிகள்திருத்துறைப்பூண்டி

தேவேந்திரர்மறுமலர்ச்சிபேரவை பயிலரங்ககாட்சிகள்தலைஞாயிறு

வெள்ளி, 1 அக்டோபர், 2010

டாக்டர் கிருஷ்ணசாமி, உமாசங்கர் ஐ.ஏ.எஸ். -சிறப்புமிக்க சந்திப்பு

சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களும் சந்தித்தனர். இரண்டு மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் பல விசயங்கள் பற்றி விவாதித்தனர். தேவேந்நிரர்களின் அரசியல் எழுச்சிபற்றியும், புதிய தமிழகம் கட்சி முன்னெடுக்கின்ற தற்போதைய அரசியல் கூட்டணி பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் பசுபதி பாண்டியன் அகிய மூவரும் ஓரணியில் இணைந்து வருகின்ற சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே தேவேந்திரர்களின் ஆசை என்று உமாசங்கர் ஐ.ஏ.எஸ். தெரிவித்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. குறிப்பாக இச்சந்திப்பு தேவேந்திர அரசு ஊழியர்கள் மத்தியில் புதிய தாக்கத்தை உண்டாக்கும். சென்னையில் செப்டம்பர் 28ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களும் சந்தித்தனர்