ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உழவர்
பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர் சேர்க்கையை டாக்டர்
கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய
உறுப்பினர்கள் சேர்க்கை தொடக்க விழா, புதூர்பாண்டியாபுரம் கிராமத்தில்
நடந்தது. விழாவுக்கு ஓட்டபிடாரம் தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமை
தாங்கினார். புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி முன்னிலை
வகித்தார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.
கலந்து கொண்டு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள்
சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–உதவித்தொகை
ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியில் 2.50 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் உடைய குறு விவசாயிகள் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களாக பெயர் சேர்த்துக் கொள்ள வேண்டும். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக சேரலாம்.
உறுப்பினர்களின் குழந்தைகள் திருமணத்துக்கு ஆண் என்றால் ரூ.8 ஆயிரமும், பெண் என்றால் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். உறுப்பினர்கள் குழந்தைகளின் படிப்புக்கு உதவி தொகையாக ரூ.1,250 முதல் ரூ.6,750 வரை கொடுக்கப்படுகிறது. உறுப்பினருக்கு விபத்து ஏற்பட்டால் ரூ.1 லட்சமும், இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
இதனால் குறு விவசாயிகள் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களாக சேர வேண்டும்.
இவ்வாறு கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
ஆய்வு
பின்பு புதூர்பாண்டியாபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அரசு அறிவித்துள்ள உணவு வகைகள் சரியாக வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
புதூர்பாண்டியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புராஜ், புதிய தமிழகம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் பட்டவராயன், மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பூவானி லட்சுமண பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் கருப்பசாமி, ஓட்டபிடாரம் தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக