சென்னை : ""தொகுதிகளில், மக்கள் நல திட்டப் பணிகளை சென்று பார்ப்பதற்கு
வசதியாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு, வாகனம் வழங்க வேண்டும்,'' என, புதிய
தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது: மதுரையில், கிரானைட் முறைகேடு செய்த ஜாம்பவானை, தமிழக அரசு கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழக அரசு, பல்வேறு இலவச திட்டங்களை அமல்படுத்துகிறது. இத்திட்ட விழாக்களில், எம்.எல்.ஏ.,க்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மக்கள் நல திட்டப் பணிகளை, தொகுதி முழுவதும் சென்று பார்வையிடுவதற்கு வசதியாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு, தமிழக அரசு வாகனம் வழங்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில், எம்.எல்.ஏ.,க்களுக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டும். இப்படி செய்தால், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றதும், உடனுக்குடன் கலெக்டரை சந்தித்து, குறைகளைத் தீர்ப்பதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு கிருஷ்ணசாமி பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக