திருச்சி: காங்கிரஸ்காரர்கள் பொய் சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்தால் ஊருக்குள் விடாதீர்கள் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் ''அதிகாரத்தை நோக்கி" என்ற தலைப்பில் இளைஞர்கள் மாவட்ட எழுச்சி மாநாட்டை நடத்தினர். அக்கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், பொதுச்செயலாளரும், சட்ட ஆலோசகருமான பிரிசில்லா பாண்டியனும், அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்ட பலரும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே பேசினர். நிச்சயம் நமது கணக்கை துவங்கி, டெல்லி செங்கோட்டைக்கு தலைவரை அனுப்புவோம் என சூளுரைத்தனர்
இறுதியாக பேசிய ஜான்பாண்டியன், ''கடந்த எட்டு வருடங்களாக என்னை சிறையில் தள்ளியது திராவிட என்கிற பெயரை கொண்டு மக்களை ஏமாற்றிய கட்சிகள்தான். அந்த கட்சிக்கு பாடம் புகட்டாமல் விடமாட்டேன்.
நடந்து முடிந்த 4 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி விழுந்துள்ளது. தற்போது, மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு செய்த துரோகத்துக்கும், தமிழகத்தில் மீனவர்களுக்கு செய்த துரோகத்துக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஒரு தொகுதியில் கூட காங்கிரசால் வெற்றி பெற முடியாது.
புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டையும், ஊழல், கற்பழிப்பு குற்றங்களையும் பொதுமக்கள் சகித்துகொள்ள தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது. காங்கிரஸ்காரர்கள் பொய் சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்தால் ஊருக்குள்ளயே விடாதீர்கள். நல்லவர்கள் போல் நடப்பார்கள் நம்பாதீர்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் கட்சிதான் என்பதை மறந்துவிடாதீர்கள். சிதம்பரமும், ஜி.கே.வாசனும் இனி தனியாளாய் நிற்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
கூலியை உயர்த்திகேட்ட குற்றத்திற்காக கீழவெண்மனியில் 44 பேரை எரித்துக்கொன்ற சம்பவத்திலும், தியாகி இமானுவேல் கொலை செய்யப்பட்டபோதும் சரி, பரமக்குடி துப்பாக்கி சூட்டில் ஆறுபேர் சுட்டு கொன்றபோதும் சரி விசாரணைக்காக அமைக்கப்பட்ட நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன்கள் அனைத்தும் நம் மக்களுக்கு எதிராகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. நீதி மறுக்கப்பட்ட சமூகமாக நாம் இருக்கிறோம். நமக்கு துரோகம் செய்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக