கீழ்வெண்மணிப் படுகொலை என்பது 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் நாகப்பட்டினம்மாவட்டத்தில் கீழ்வேளூர் தாலுகாவில்,கீழவெண்மணிக்குள் நுழைகிற இடத்தில்இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். இதன் போது 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் தங்கள் குடிசைகளில் வைத்து எரித்து கொல்லப்பட்டனர். வேளாண் தொழிலாளிகளான இவ்வூர் தேவேந்திர சமுதாய மக்கள், தாங்கள் அறுவடை செய்யும் வயல்வேலைகளுக்கு கூலியாக தரும் ஒரு படி நெல்லில் இருந்து இரு படி நெல் தரவேண்டும் என வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கிழார்கள் இப்போராட்டத்தை ஒடுக்க, அடியாட்களை ஏவினர். அவர்கள் கீழ்வெண்மணிக்கு சென்று கலவரங்களில் ஈடுபட்டனர். கலவரத்தின் போது, பாதுகாப்பு தேடி ஒரு குடிசையில் ஒளிந்த இருபது பெண்களும், 19 குழந்தைகளும் குடிசைக்குத் தீவைத்து எரித்து கொல்லப்பட்டனர். இந்நிகழ்வின் போது தி.மு.க வை சேர்ந்த அண்ணா ஆட்சியில் இருந்தார். இந்நிகழ்வு இந்தியா முழுவதிலும் மட்டுமின்றி, உலகளவிலும் சீன ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டது. இவ்வழக்குக்கு அறமன்ற நடுவராக இருந்த நடுவர் செ. மு. குப்பண்ணன் நிலக்கிழார்கள் குற்றம் இழைத்தார்கள் என தீர்ப்பு வழங்கினார்[4]. இதற்குப் பின்னர் நடந்த எதிர்ப்பு போராட்டங்களுக்கு பொதுவுடைமை கட்சிகள் தலைமை தாங்கின. மிகையாக பங்குகொண்ட கலப்பாளை சேர்ந்த குப்புசாமி தேவேந்திரர் என்பவரை நஞ்சு கொண்டு சிறையில் கொன்ற நிகழ்வும், எரிப்பு நிகழ்வு நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், சித்தமல்லி முருகையன் தேவேந்திரர் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெட்டி கொல்லப்பட்ட நிகழ்வும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. மள்ளர் மீட்பு களம். திருவாரூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக