ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

காலச்சுவடுகள் ..(29/07/2013).....தூத்துக்குடி....விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கவில்லை: டாக்டர் .க .கிருஷ்ணசாமி ...M .D .M .L .A அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

காலச்சுவடுகள் ..(29/07/2013).....தூத்துக்குடி....விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கவில்லை: டாக்டர் .க .கிருஷ்ணசாமி ...M .D .M .L .A அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு................................................................புதிய தமிழகம் கட்சி நிறுவனரும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமாரிடம், தன் தொகுதி விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்று விவசாயிகளுடன் வந்து மனு கொடுத்துள்ளார்.
பின்னர், நிருபர்களிடம் பேசும்போது, ‘‘தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், எட்டையபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் கம்பு, சோளம், மிளகாய் போன்ற மானாவாரி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆனால், இதில் ஐந்தில் ஒரு பகுதி கூட விளைச்சல் அளிக்கவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளில் தலையாரிகள், வி.ஏ.ஓ.க்கள் பதிவேட்டில் விவசாயம் செய்த நிலங்களையும் தரிசு நிலங்களாக குறித்துள்ளனர்.
இதனால், சுமார் பத்து ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிக்கு வறட்சி நிதியாக 100 முதல் 500 ரூபாய் வரையே கிடைத்துள்ளது. ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் பரிவல்லிக்கோட்டை ஓனமாகுளம், அயிரவன்பட்டி, கொல்லங்கிணறு ஆகிய 40 கிராம விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
சில கிராமங்களில் வறட்சி நிவாரணம் வழங்க வி.ஏ.ஓ.க்கள் லஞ்சம் கேட்கிறார்கள். வறட்சி நிவாரணம் பெறாத விவசாயிகளுக்கு விரைவில் வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும். அதேபோல், லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஓ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள பல கிராமங்களில் சுமார் 40 சதவீதத்திற்கும் மேல் தேவேந்திர குல மக்கள் வாழ்கின்றனர். அந்த பகுதிகளில் கிராம சாலைகள் நீண்ட காலமாக பழுதாகி உள்ளது. இதனால், பேருந்துகள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவதில்லை. எனவே பாரத் நிர்மாண் திட்டம் அல்லது மாவட்ட ஆட்சியரின் பொது நிதியில் இருந்து சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆட்சியரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக