.....கோவை: ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தேர்தல் கமிஷனின் செயல்பாடு அ.தி.மு.க.வின் கிளைபோல் இருந்தது’ என்று கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்தார். கோவையில் நேற்று நிருபர்களிடம், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியது: கோவையில் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒரு தேர்தலாக கருத முடியாது. அதிமுக கட்சியின் தேர்தல் கிளை போன்று தேர்தல் கமிஷனின் செயல்பாடு இருந்தது. திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் துவக்கத்தினை, அனைத்து அரசியல் கட்சியினரையும் அழைத்து பெரிய விழாவாக நடத்தாமல், வீடியோ கான்பரன்சிங் மூலமாக செய்தது ஏற்புடையதாக இல்லை. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்திட ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக