ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 17 ஜூலை, 2015

தி இந்து தமிழ்' நாளிதழ் இருட்டடிப்பு செய்த டாக்டர் . க . கிருஷ்ணசாமி M . D .M .L .A ., அவர்களின் .சிறப்புப் பேட்டி

..இப்போது திமுக கூட்டணியில் இருக்கிறீர்கள். உங்கள் இலக்கு என்ன?
எண்ணிக்கையை வைத்து நாங்கள் ஒரு கூட்டணியில் அங்கம் பெறுவது இல்லை. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான குறிக்கோளை அடைவதற்காகவே கூட்டணி வைக்கிறோம். ஒரு அரசின் செயல்பாடுகளை வைத்துத் தான் அடுத்த தேர்தலில் கூட்டணியை முடிவு செய்கிறோம். எங்களுக்கு கூடுதலாக சீட் கொடுத்தால், மற்ற சாதிக்காரர்கள் கோபித்துக் கொள்வார்களே என்ற தயக்கம் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் வந்துவிடுகிறது. பட்டியல் சமுக மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று சொன்னால் மட்டும் போதாது, எங்களுக்கு அதிமான வாய்ப்பு தருவதில் தான் அவர்கள் உண்மையிலேயே பெரியார், அம்பேத்கர்வாதிகளா என்பது தெரியவரும்.
-கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்துடன் திருமாவளவன் அணி திரட்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளாரே? ஈகோவை விட்டுவிட்டு அதில் இணைவீர்களா?
அவரது செயல் தும்பைவிட்டுவிட்டு வாலைப்பிடிப்பது போல் இருக்கிறது. தமிழக மக்கள் தொகையில் பட்டியல் சமுக மக்கள் 22 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இவர்களோடு 14 சதவிகித சிறுபான்மையினரையும், முக்குலத்தோர், கவுண்டர், வன்னியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களையும் ஓரணியில் திரட்டினால், ஆட்சியையே பிடிக்க முடியும். இதைத் தான் உத்திரப்பிரதேசத்தில் கன்சிராம் செய்து காட்டினார். ஆனால், தமிழகத்தில் குறைந்தபட்சம் பட்டியல் சமுக மக்களிடையே கூட ஒற்றுமையை ஏற்படுத்தாமல், ஆட்சியில் பங்கு கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. வெறும் ராமதாஸ் 5 மாவட்டத்தில் உள்ள தன் சாதியினரை வைத்துக் கொண்டு, முதல்வர் வேட்பாளரையே ராமதாஸ் அறிவிக்கிறார். தமிழகத்தின் 30 மாவட்டங்களிலும் பரந்துகிடக்கும் பட்டியல் சமுக மக்களை ஒன்றிணைத்து அரசியல் செய்யாமல் விட்டது தவறு. பட்டியல் சமுக மக்களின் ஒற்றுமை தான் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கும்.
தர்மபுரி கலவரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ராமதாஸ், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை எல்லாம் பட்டியல் சமுக மக்களுக்கு எதிராக அணி திரட்டினார். அப்போது பட்டியல் சமுக மக்களை ஓரணியில் திரட்டும் முயற்சியில் நான் இறங்கினேன். அந்த கூட்டத்திற்கு வர மறுத்த திருமாவளவன், வேறு சில தலைவர்களையும் வரவிடாமல் தடுத்துவிட்டார். பிரச்சினைகள் அடிப்படையில் சேர்ந்து செயல்படாமல் இருந்துவிட்டு வெறும் கோஷங்களை மட்டும் எழுப்புவது பலன் தராது. இனியாவது பட்டியல் சமுக மக்களை ஓரணியில் திரண்டும் முயற்சியில் அவர் என்னோடு இணைந்து செயல்பட வேண்டும். அதைவிட்டுவிட்டு கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தோடு என்னை சந்திக்க வந்தால், அதற்கு உடன்பட நான் தயாரில்லை.
-தென்மாவட்டங்கள் என்றாலே தொழில்நிறுவனங்கள் பின்வாங்குவதற்கு சாதிக்கட்சிகளின் ஆதிக்கமும் ஒரு காரணம் என்கிறார்கள். தென்தமிழக வளர்ச்சிக்காக குரல் கொடுத்துள்ளீர்களா?
தொழில் தொடங்குவதற்கு ஏற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தென்மாவட்டங்களில் இல்லை. அதைச் செய்து கொடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய வளர்ச்சியை தென்மாவட்டங்கள் பெற வேண்டும் என்றால், ஆண்டிற்கு ஒன்றிரண்டு முறையாவது சட்டசபை கூட்டத் தொடரை மதுரையில் கூட்ட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அப்போது தான் தென்மாவட்ட பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படும், தீர்வும் கிடைக்கும். மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் மட்டும் சட்டசபை கூட்டத் தொடர் நடப்பது கிடையாது, நாக்பூரிலும் நடத்துகிறார்கள். வேறு சில மாநிலங்களிலும் இதுபோல் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக