ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

வட மாவட்டங்களிலும் வலுப் பெறுகிறது புதிய தமிழகம்





புதிய தமிழகம் கட்சி 1997ம் ஆண்டு துவக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை, மிக மிக பின் தங்கிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு பெற்ற கட்சியாகும் குறிப்பாக தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற கட்சி புதிய தமிழகம் கட்சி.
 அண்மைகாலமாக வடக்கு மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சாரை, சாரையாக புதிய தமிழகம் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
சென்னையில் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள்,திமுக,காங்கிரஸ் போன்ற இயக்கங்களில் இருந்து விலகிய எண்ணற்றோர் புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் பலர் இணைந்தனர். இதன் தொடர்ச்சியாக 12.02.2011ம் தேதியில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி திரு.தலித் முருகன் 500க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தொண்டர்களுடன் புதிய தமிழகம் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
      இந்த விழா சென்னை ஹேமாமாலினி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொது வாழ்வில் 30 ஆண்டுகள் இருக்கும் திரு.தலித் முருகன் 15 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியில் பணியாற்றியவர்.
       சென்னை உட்பட வடக்கு மாவட்டங்கள் பட்டியலின மக்கள் ஒன்று சேர்வது புதிய தமிழகம் கட்சிக்கு வலு சேர்ப்பதோடு வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கும் மிகப் பெரிய பலமாக அமையும். எண்ணற்றோர் தினமும் இதே போன்று புதிய தமிழகம் கடசியில் இணைந்து ருகிறார்கள். இதனால் புதியதமிழகம் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக