சாத்தூர் அருகே இருக்கன்குடியில் நத்தத்துப்பட்டி மற்றும் இருக்கன் குடி பஞ்சாயத்துகளுக் கிடையே கோவில் இருக்கும் பகுதியில் வரிவசூல் செய்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் கோவில் பகுதியில் வரி வசூல் செய்யப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து இரு கிராமத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதில் 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று போலீஸ் தடியடியைக் கண்டித்தும், வரி வசூல் தொடர்பான மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பிரச்சினைக்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இருக்கன்குடி பகுதியில் உள்ள 200 கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து இருக்கன்குடி மேட்டுப் பகுதியில் இருக்கன்குடியைச் சேர்ந்த சுமார் 200 பெண்கள் உள்பட 400 பேர் தங்கள் கோரிக்கையினை வலியுறுத்தி தொடர் உண்ணா விரத போராட்டத்தை தொடங்கினர். வருவாய் துறை அதிகாரிகள் உண்ணா விரதம் இருந்து வரும் கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து 2-வது நாளாக உண்ணாவிரதத்தில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக