ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 22 அக்டோபர், 2012

ஓட்டப்பிடாரம், கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்கிறது கிருஷ்ணசாமி எம்எல்ஏ புகார்

தூத்துக்குடி, : ஓட்டப்பிடாரம் மற்றும் கருங்குளம் பகுதிகளில் நிலத்தடி நீர் கடத்தல் தொடர்வதாக கிருஷ்ணசாமி எம்எல்ஏ கலெக்டரிடம் மனு அளித்தார்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது  புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் ஆஷிஷ்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 386 ஊராட்சிகளில் 160 ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மோசமான நிலையில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கருங்குளம், புதுக்கோட்டை, புதியம்புத்தூர், பகுதிகளில் நிலத்தடி நீரை லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதுகுறித்து போராட் டம் நடத்தியபோது லாரிகளில் தண்ணீர் கொண்டு செல்ல வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்தார். ஆனால், நிலத்தடி நீர் கடத்தப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரி டம் மனு கொடுத்துள் ளோம்.
மனுவை பரிசீலித்த கலெக்டர், லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக