தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் பதவிக்கு 50
வருடங்களுக்கு பிறகு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருவரை ஆளுங்கட்சியின்
சார்பாக முன் மொழிந்து இருப்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன்.
தமிழகத்தில்
உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த
மாணவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் இலவச கல்வி அளிக்கும் திட்டத்தை 2012
ஆம்
ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இன்றைய அரசு அறிவித்தது.அதற்காக ரூபாய் 115
கோடியும் ஒதுக்கியது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 6
மதங்கள் நிறைவு பெற்றிருப்பினும் இது
முறையாக இன்னும் அமலாக்கப்படவில்லை. சுயநிதி பொறியியல் கல்லூரிகள்,கலை மற்றும்
பாலிடெக்னிக், மருத்துவ கல்விகளுக்கு மாணவர்களுக்கான அனைத்து வித கல்வி
கட்டணங்களையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று நேரடி உத்தரவு பிறப்பிக்கபடாததால்
தனியார் நிர்வாகங்கள் அத்திட்டத்தை அமலாக்க தயக்கம் காட்டுகின்றன.
எனவே மாணவர்
சேர்க்கையின் போதே அந்தந்த கல்லூரி நிர்வாகங்களுக்கு மாணவர்களுக்கான கல்வி
கட்டணத்தை தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் வாயிலாக நேரடியாக செலுத்திடும் வழிமுறையை
கையாள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த
வழிமுறையின் வாயிலாக மட்டுமே தேவையற்ற காலதாமதங்களுக்கு இடமின்றி மாணவர்களுக்கான
அரசு நிதி உதவி முறையாக சென்று அடையும்.எனவே மாணவர் சேர்க்கையும் கட்டண
காசோலைகளும் ஒரு சேர சென்றடையும் வழிமுறையை அமலாக்க வலியுறுத்துகிறேன்.
பட்டியல்
இன மக்களில் பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, மூப்பன்,தேவேந்திரகுலத்தான் என
பல்வேறு பெயர்களில் அழைக்கப்படக் கூடிய மக்கள் தமிழகத்தில் பரவலாக இருப்பினும்
தென் தமிழகத்தை மையமாக வத்து திரளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்களில்
பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்களாக இன்றும் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து
வருகின்றனர். அரசின் திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு பெரும்பாலான மக்களுக்கு
சென்றடையவில்லை. இந்திய சமுதாயத்தில் விழிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களுடைய
முன்னேற்றத்திற்கு அந்த சமுதாயங்களின் அடையாள மீட்புகளும் முக்கிய காரணிகளாக
அமைகின்றன.
எனவே அம்மக்கள் தங்களை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என அழைத்திட வேண்டுமென
தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.தேர்தல் நேரங்களில் கட்சிகள் வாக்குறுதி
கொடுப்பதும் அதன் பின் அதை மறந்து விடுகின்ற போக்குகளும் தொடர்ந்து நிலவுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக