ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 3 ஏப்ரல், 2013

ஐ.நா துணை அலுவலகம் முற்றுகை - டாக்டர். கிருஷ்ணசாமி உட்பட பலர் கைது!

UNஐ.நா துணை அலுவலகம்  முன்பு முற்றுகையிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி MD MLA., அவர்களுடன் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"தனிஈழம் அமைத்திட ஐ.நா மேற்பார்வையில் ஈழதமிழ் மக்கள் மற்றும் புலபெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு உட்பட, கடந்த 60 வருடங்களாக ஈழ தமிழ் மக்கள் மீதும்,மலையகத் தமிழர்கள் மீதும் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய மனிதஉரிமை மீறல்கள்,போர் விதிமுறை மீறல்கள் அனைத்தும் இனஒழிப்பு நடவடிக்கைகளே. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை விசாரிக்க அனைத்துலக சுதந்திரமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது ஐ.நா-வில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் கடந்த ஆண்டைப் போலவே நீர்த்துப் போய்விட்டது.
இதே சரத்துக்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஈழ தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது.
எனவே இலங்கை அரசுக்கெதிராக அமெரிக்க தீர்மானத்தில் உரிய திருத்தத்துடன் வலுவான தீர்மானம் கொண்டு வர இந்திய அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும்.
மாநில அரசு இன்னும் கூடுதலாக அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக நடந்தேறியுள்ள கொடிய போர்முறை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமுதாயம் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்ககூடாது என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக இன்று 20.03.2013 காலை 10.30 மணி அளவில் சென்னையிலுள்ள ஐ.நா துணை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி MD MLA ., அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இப்போராட்டத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான புதிய தமிழகம் கட்சியினர் காவல்துறையினரின் தடையை மீறி ஐ.நா துணை அலுவலகத்தை முற்றிகையிட்டு, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதானார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more about ஐ.நா துணை அலுவலகம் முற்றுகை - டாக்டர். கிருஷ்ணசாமி உட்பட பலர் கைது! [9818] | தமிழக செய்திகள் | செய்தி at www.inneram.comஐ.நா துணை அலுவலகம் முற்றுகை - டாக்டர். கிருஷ்ணசாமி உட்பட பலர் கைது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக