ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள்


சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கார் சிலை அருகே இன்று நடைபெற்றது. தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார்.
 
இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு சுந்தரலிங்கம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு ஏழை பெண்கள் 15 பேருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கினார்.
 
சுந்தரலிங்கம் பிறந்த நாளை முன்னிட்டு பாளை மார்க்கெட் மற்றும் சமாதான புரம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.அதன் திறப்பு விழா மாநகர் மாவட்ட தலைவர் அந்தோணி அன்பரசன் தலைமையில் நடந்தது. இந்த தண்ணீர் பந்தல்களை ஜான்பாண்டியன் திறந்து வைத்தார்.
 
இந்த விழாக்களில் நாங்குநேரி யூனியன் சேர்மன் லெக்கன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், கொள்கை பரப்பு செயலாளர் எட்வின், மாவட்ட இணைச்செயலாளர் கண்ணன், இளைஞர் அணி கணேஷ் பண்ணையார், கிங் தேவேந்திரன், துரைப் பாண்டியன், வரதன், பெருமாள்பாண்டியன், முத்து, தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக