ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

நிலத்தடி நீர் விற்பனை ஐகோர்ட் தடையை விலக்கக்கோரி டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் மனுத்தாக்கல்




ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலத்திலிருந்து தண்ணீர் எடுத்து தனியார்தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கோட்டாட்சியர் விதித்த தடை உத்தரவுக்குஎதிராக ஐகோர்ட் கிளை விதித்துள்ள தடையாணையை விலக்கக்கோரி டாக்டர்கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலங்களில் ராட்சத போர்வெல்அமைத்து தண்ணீர் எடுத்துதனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதற்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் தடை விதித்தார்.
 இந்தத் தடையை எதிர்த்து கல்மேடு வடக்கு பகுதியை சேர்ந்த பால்ராஜ் உட்பட 12 பேர்,ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்மனுக்களை நீதிபதி அருணா ஜெகதீசன்விசாரித்துதண்ணீர் விற்பனைக்குத் தடை விதித்து கோவில்பட்டி கோட்டாட்சியர்பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில்இந்த தடையை விலக்கக்கோரி ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவும்புதிய தமிழகம் கட்சியின்தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்இந்த மனுவைவக்கீல் பாஸ்கர் மதுரம் தாக்கல் செய்தார்அதில் கூறியிருப்பதாவது:
ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலங்களில் 800 அடி ஆழத்திற்கு போர்வெல் அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.இதனால்இப்பகுதி நிலங்கள் கட்சி வறட்சிக்குள்ளாகி வருகின்றனபொதுமக்கள் கிராமங்களைக் காலி செய்துவேலைக்காக வெளியூர் சென்று வருகின்றனர்சிலர் விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புப் பெற்றுதண்ணீர்எடுத்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்நிலத்தடி நீரைச் சுரண்டுவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறதுஇதைத் தடுக்க நான் கோட்டாட்சியரிடம் மனுக் கொடுத்தேன்அந்த மனுவை ஏற்றுவிவசாய நிலங்களில்இருந்து தண்ணீர் எடுத்துதொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கோவில்பட்டி கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார்.
ஏற்கனவே ஓட்டப்பிடாரம் பகுதியில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்குச் சென்று விட்டதால் குடிநீர் பஞ்சம்தலைவிரித்தாடுகிறதுபொதுமக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்குகின்றனர்எனவேகோட்டாட்சியர்உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்இந்த வழக்கில் என்னை எதிர்மனுதாரராகச் சேர்க்கஅனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளதுஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக