செந்தில் மள்ளர் அவர்களின் படைப்பான இந்த நூலை வாங்கும் போது என்னிடம் இருந்த கேள்விகள். இந்த நூல் இதற்கு முன்பு வந்த மள்ளரிய நூல்களில் இருந்து எந்த வகையில் வேறுபட்டு இருக்கும். பாண்டியர் யார்? என்று ஏற்கனவே மள்ளரிய நூல்கள் நிறுவியிருக்கும் போது இந்த நூல் எந்த விதத்தில் அமைந்திருக்கும் என்ற பல கேள்விகள் என்னுள் இருந்தது.
ஆனால் இந்த நூலின் சிறப்பு முந்தயை மள்ளரிய நூல்களில் இருந்த சில கேள்விகளுக்கு பதில் கொடுத்து. மேலும் ஆதாரங்களை குவித்து இருக்கின்றது.
உதாரணமாக மல்லர்-மள்ளர்-பள்ளர்-தேவேந்திர
பள்=உழவு, பள்ளர்=உழவர் என்று விளக்கி, பாண்டியர்=உழவர். எனவே பள்ளர்=பாண்டியர் என்று தெளிவுபடுத்தி இருக்கின்றது.
செந்தில் மள்ளரின் ” பள்ளர் என்பது பேச்சு வழக்கு, மள்ளர் என்பது இலக்கிய வழக்கு “ என்ற கோட்பாடு பல கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருக்கின்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு இருந்த ஒரு சந்தேகம் தமிழகத்தில் நாயக்கர் பள்ளர் என்ற சொல்லை பரப்பினார்கள் என்றால் அப்போது ஈழத்திலும் பள்ளர் என்றே அழைக்கப்பட என்ன காரணம். இந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.
மேலும் மள்ளரிய ஆய்வில் குறைகளாக விளங்கிய கள ஆய்வுகள், சேர நாட்டில் பள்ளர்களின் ஆய்வு, ஈழ நாட்டில் பள்ளர்களின் ஆய்வு ஆகியவற்றை செய்து மள்ளரிய ஆய்வில் இமயத்தை தொட்டு இருக்கின்றார் செந்தில் மள்ளர்.
இந்த நூலில் நான் வியந்த ஒரு கட்டம் “ உலக புகழ் பெற்ற உத்திரமேருர் கல்வெட்டு நம்முடைய குடும்பு முறையை பற்றியது என்று”. மேலும் தமிழகத்தின் மிக பிரபலமான செப்பேடுகளும், கல்வெட்டுகளும் பள்ளரை பற்றியது என்பதை கண்டு வியந்தேன்.
கள ஆய்வில் செந்தில் மள்ளர் ஒரு பெரிய சாதனையாளர், கள ஆய்வு “வேந்தன்” என்றே அவரை நாம் அழைக்கலாம். மல்லர் கோயில், புலயர், பாண்டி கோயில், பழங்காநத்தம், பள்ளர் மடங்கள் போன்ற எண்ணற்ற கள ஆய்வுகள்.
இந்த புத்தகம் ஒரு பொக்கிசம். பள்ளர் தான் பாண்டியர் என்று பச்சை குத்திவிட்டார் செந்தில் மள்ளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக