ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் ..டாக்டர் கிருஷ்ணசாமி

கோவை: மின் கட்டண உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரி விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர்  கிருஷ்ணசாமி தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியது: 2011ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்புக்கு  வந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா, மின் கட்டணத்தை உயர்த்தினார். தற்போது, ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி 15 சதவீதம் மின் கட்டணத்தை  உயர்த்தியது கண்டனத்திற்கு உரியது. இந்த கட்டண உயர்வால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கும். 500 யூனிட் வரை மின் மானியம் என்பது கண் துடைப்பு.  இதில் வெறும் 15 சதவீதம் பேர் மட்டுமே பயனடைவார்கள். 35 சதவீதம் பேர் கடுமையாக பாதிக்கப்படுவர்.

முந்தைய திமுக ஆட்சியில் இருந்த மின் திட்டத்தையும் சீர்படுத்தவில்லை. புதிய மின்திட்டம் எதையும் கொண்டு வரவில்லை. மின் வாரியத்தில் கடுமையான நிர்வாக  சீர்கேடும், மெகா ஊழலும் நடக்கிறது. மின்வாரியத்தின் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கட்டண உயர்வை  முழுமையாக வாபஸ் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில், விழுப்புரத்தில் வரும் 19ம் தேதி காலை எனது தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக