ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 29 டிசம்பர், 2014

விருதுநகர் ..டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

தமிழகத்தில் மொத்தம் 16 சிமெண்ட் ஆலைகள் உள்ளன.அரியலூரிலும்,ஆலங்குளத்திலும் உள்ள ஆலைகள் அரசுக்கு சொந்தமானவை.தொடக்கத்தில் 2000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பினை தந்தது இந்த ஆலை.இது தொடங்கப்பட்டது முதல் நவீனப்படுத்தப்படாமல் உள்ளது.பழைய இயந்திரங்களால் தான் ஆலைக்கு நஷ்டம் ஏற்படுகிறது.உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் மழை குறைவு.விவசாயம் குறைவாகத்தான் உள்ளது.இது போன்ற தொழிலை நம்பித்தான் தொழிலாளர்கள் உள்ளனர்.அரசு இந்த ஆலையை நவீனப்படுத்தாமல் மூடினால் மாவட்டம் முழுவதும் தொழிலாளர்களை திரட்டி புதிய தமிழகம் போராட்டம் நடத்தும்.டாக்டர் க.கிருஷ்ணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக