ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 16 ஜூன், 2015

‘ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கான அரசியல் நிலை இங்கு இல்லை’: புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வருத்தம்...


 

கிருஷ்ணசாமி | கோப்புப் படம்

`மத்தியிலும், மாநிலத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமநிலை வளர்ச் சிக்கான அரசியல் நிலையோ, நிரந் தரத் தீர்வு காணக்கூடிய திட்டங் களோ இல்லை’ என்று புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார். `தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி?
தற்போதும், 2016 சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி.
பாமக அன்புமணியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துள்ளதே? அது போல உங்கள் கட்சியில்...?
ஜனநாயகத்தை பல்வேறு கட்சி கள் கோமாளித்தனம் ஆக்குகின்றன. அதில் இதுவும் ஒன்று. நாங்கள் மக்கள் பரிகாசத்துக்கு ஆளாக மாட்டோம்.
முதல்வர் வேட்பாளர் என்று அறி விக்கும் அளவுக்கு, தலித் கட்சித் தலைவர்களை, தமிழகத்தில் உள்ள அனைத்து தலித் மக்களும் இன்னமும் ஏற்காததற்கு என்ன காரணம்?
இங்குள்ள சூழல்தான். உலகம் முழுவதும் விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கியதான அரசியல்தான் நடக்கிறது. அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு உள்ளடக்கியதாகவே உள்ளது. ஆனால் மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் நிலை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் சமநிலை வளர்ச்சிக்கானதாக இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு காணக்கூடிய திட்டங்களும் இங்கு இல்லை.
உங்களுக்கான தளம் தென்காசி மட்டும்தானா? அங்கு மட்டுமே போட்டியிடுகிறீர்கள், வெல்கிறீர்கள்?
அப்படியில்லை. ஒரு தளத்தை அவ்வளவு சுலபமாக இங்கே உருவாக்கிக் கொள்ள முடியாது. உருவான தளத்தை தக்க வைப்பதும், அது தோல்வியில் முடியும்போது, அதிலுள்ள குறைகளைக் களைவதும் அரசியலில் மிக முக்கியமானது. அதை புதிய தமிழகம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.
விரல்விட்டு எண்ணக்கூடிய தலித் தலைவர்களே இயக்கரீதியாக வெற்றியடைந்துள்ளார்கள். ஆனால் ஆதிக்க சமூக கட்சிகள் சமீப காலமாக பெருகி வருகின்றனவே?
இதை ஓர் அபாயகரமான போக்காகவே பார்க்கிறோம். ஜாதீயக் கட்சிகள் பெருகுவதன் பிரதிபலிப்புகளில் ஒன்றுதான் இன்றைக்கு ஐஐடியில் பெரியாருடைய பெயரே கூடாது என்பது. ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் துணைபுரியாத எந்த ஒரு கட்சியும், இயக்கமும், தனிநபரின் குழுவும் எளிதில் பட்டுப்போய்விடும்.
உங்கள் கட்சிக்கான ஓட்டு வங்கி எவ்வளவு... சொல்ல முடியுமா?
பணப் பட்டுவாடா செய்யாமல், விளம்பரங்கள் செய்யாமல், அவர்களுக்கென திரும்பின பக்கமெல்லாம் ஊடக ஆதரவு இல்லாமல் மற்ற கட்சிகள் இயங்குமானால் எங்களால் தமிழகத்தில் 10 சதவீத வாக்குகளை பெறமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக