ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 28 ஜூன், 2015

உஞ்சனை போராளிகளுக்கு புதிய தமிழகத்தின் வீர வணக்கம்

சிவகங்கை, ஜூன் 28-சிவகங்கை மாவட்டம் உஞ்சனை கிராமத்தில், உரிமைகளுக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவிடத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது.
சிவகங்கை மாவட்டம் உஞ்சனையில் உள்ள கழனி பெரிய அய்யனார் கோவிலில், ஆதிக்கசாதியினர் மட்டுமே புரவியெடுப்பு விழாவை நடத்துவது வழக்கமாக இருந்தது. 1960களில், பறையடித்தல், கோவிலை சுத்தம் செய்தல் போன்றஇலவச உழைப்பு மற்றும் இழி தொழில்களை செய்ய தாழ்த்தப்பட்ட மக்கள் மறுத்தனர். அவர்கள் மீது ஆதிக்க சாதிய சக்திகள் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து, 13 ஆண்டுகள் புரவி யெடுப்பு விழா நடக்கவில்லை.
மாவட்ட நிர்வாகம் தலையிட்ட பிறகு, 1979ஆம் ஆண்டு இரு தரப்பி னரும் தனித்தனியாக திருவிழா நடத்த முடிவாகியது. முதலில் ஆதிக்க சாதியினர் விழாவை நடத் தினர்.
அடுத்ததாக, தாழ்த்தப்பட்ட மக்கள் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடு களை செய்தபோது ஆதிக்க சாதியசக்திகள் இடையூறுகள் செய்தனர். ஜூன் 28ஆம் தேதியன்று, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கினர். தேவேந்திர குல   சமுகத் தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 27 பேர்படுகாயம் அடைந்தனர்.
செ.தேரடியான், அ.குழந்தையன், வெ.வீராச் சாமி, கழ.பெரியய்யா, சாத்தையா ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். உஞ்சனை நாட்டிற்குள் தான் சர்ச்சைக்குரிய கண்டதேவியும் உள் ளது. கோவில் திருவிழாவை நடத்து வதற்கு தங்களுக்கும் உரிமை உண்டு என்று போராடி உயிர் நீத்த ஐந்து தியாகிகளுக்கும் நினைவிடம் எழுப்பி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 28ஆம் தேதியை எழுச்சி நாளாக உஞ்சனை தேவேந்திர குல   மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக