ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 13 ஜூன், 2015

தமிழர் நலனுக்காக விஜயகாந்த்தை சந்தித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி!

 Image result for தமிழர் நலனுக்காக விஜயகாந்த்தை சந்தித்தாராம் டாக்டர் கிருஷ்ணசாமிதேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, தமிழர் நலன் தொடர்பாக சந்தித்துப் பேசினேன். அரசியல் தொடர்பாக சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. தமிழகத்தில் இது தலைவர்கள் சந்தித்துக் கொள்ளும் காலமாக உள்ளது. யாராவது யாரையாவது தினசரி சந்திப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். இதை ஆரம்பித்து வைத்தவர் விஜயகாந்த். திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல தலைவர்களை காலை முதல் மாலை வரை நேரில் போய்ப் பார்த்து பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது தம்பி மகன் கல்யாண அழைப்பிதழைக் கொடுக்க தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளன் தனது கட்சியின் கூட்டம் ஒன்றுக்காக பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்துப் பேசினார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது. ஒரு மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வெளியே வந்த டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர் நலன் காக்க, உரிமைகளை மீட்டெடுக்க ஒருமித்த கருத்துக்களை உருவாக்க கடந்த 2 மாத காலமாக பல அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறேன். திமுக தலைவர் கருணாநிதி, ஜி.கே.வாசன், வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விட்டேன். இன்று தேமுதிக தலைவரை சந்தித்துள்ளேன். அவரோடு பல்வேறு விஷயங்கள் பேசினேன். அவரும் உற்சாகமாக பேசினார். முல்லைப் பெரியாறு பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி பேசினேன். வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் புதிய தமிழகம் கட்சியின் 6 வது மாநில மாநாடு நடக்க இருக்கிறது. அதில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்தை கலந்து கொள்ளும்படி அழைத்தேன். அது குறித்து பின்னர் தெரிவிப்பதாக கூறினார். ஈழத் தமிழர் பிரச்சனை, காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் கட்சிகளுக்கு இடையேயான இறுக்கங்கள் குறையும். முதல் முறை அனைவரையும் சந்தித்து விட்டேன். தேவைப்பட்டால் மீண்டும் அனைவரையும் சந்திப்பேன். இது தமிழர் நலன் காக்க நடத்தப்படும் பேச்சுவார்த்தை தேர்தல் கூட்டணி குறித்து அல்ல. முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவும் நிச்சயம் நேரம் கேட்பேன். நேரம் ஒதுக்கினால் அவரையும் சந்திப்பேன் என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக