ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 9 ஜூன், 2015

அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்ட தடை நீக்கம் வரவேற்கத்தக்கது:டாக்டர் . கிருஷ்ணசாமி பேட்டி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டத்திற்கான தடை ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் அந்த இருவரின் வாழ்வு முறைகளை தெரிந்துகொள்ள வேண்டும். அது அரசியல் வாசகர் வட்டமாக அல்லாமல் சமூக வாசகர் வட்டமாக இருக்க வேண்டும். அம்பேத்கார் பெரியார் வாசக வட்டங்களை கல்லூரிகளில் மட்டுமல்லாமல், சமூக வட்டத்திலும் கொண்டு வருவதற்கு புதிய தமிழகம் முடிவு செய்துள்ளது. இன்னும் ஓராண்டில் 100 வாசகர் வட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டுவர இருக்கிறோம்.
கட்சியின் 17–ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி 6–வது மாநில மாநாடு நடத்த உள்ளோம். இதில் தேசிய தலைவர்கள், சர்வதேச தலைவர்கள்,பங்கேற்க உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு பணி நியமனத்தில் மோசடி நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெற்ற பள்ளிக்கூட ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வில் வெளிப்படை தன்மை இல்லாமல் இருந்தால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம். தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கூலிப்படைகளுக்கு அரசியல்வாதிகள் பின்புலம் இருப்பதால் பல கொலை–கொள்ளைகள் நடக்கின்றன. 
வருங்காலத்தில் இது பெரும் பிரச்சனையாக இருக்கும். இந்த கலாசாரத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காலத்திலேயே இது நடந்திருப்பதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக