ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 25 ஜூலை, 2011

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவுதினம்: நெல்லை தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கட்சியினர் மலர்தூவிஅஞ்சலி; டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ- ஜான்பாண்டியன் தலைமையில் பேரணி






கூலிஉயர்வு கேட்டு கடந்த 1999-ம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நெல்லை யில் ஊர்வலம் நடத்தினர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் தாமிர பரணி ஆற்றில் மூழ்கி 17 தொழிலாளர்கள் இறந் தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ந்தேதி நடைபெறும். பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது. அஞ்சலி செலுத்த ஒவ்வொரு கட்சியினருக்கும் வெவ்வேறு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரரத்தில் நெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு வந்து மலர்தூவியும், மலத் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்கள். புதிய தமிழகம் கட்சியினர் நெல்லை சந்திப்பில் இருந்து ஊர்வலமாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநகர் மாவட்ட செயலாளர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அரவிந்தராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதன் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் பாளை சமாதானபுரத்தில் இருந்து பல வாகனங்களில் ஊர்வலமாக வண்ணார்பேட்டைக்கு வந்தனர். பின்பு அங்கிருந்து நடந்து தாமிரபரணி ஆற்றுக்கு ஊர்வலமாக வந்து ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அமைப்பு செயலாளர் கண்மணி மாவீரன், மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலாளர் ஜெயகுமார், இன்பராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், சிவா, சிங் தேவேந்திரன், கணேஷ், அருண், வாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் துணைத்தலைவர் சப்பாணி, நெல்லை சிவா, பாஸ்கர், ஆனந்த், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பொன்பாண்டியன் தலைமையில் காசிவிஸ்வநாதன், ராமலிங்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மள்ளர் மீட்பு களம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பொன்ராவணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பையா, தலைமை நிலைய செயலாளர் குபேரமள்ளர், தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். பா.ஜ.க. சார்பில் அதன் எஸ்.சி¢.எஸ்.டி. பிரிவு முருகதாஸ் தலைமையில் பாலசுப்பிரமணியன், சுரேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் விவசாய அணி ஆறுமுகம் தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மள்ளர் இலக்கிய கழகம் சார்பில் மாநில பொருளாளர் பழனிவேல்ராஜன் தலைமை யில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநில விவசாய அணி செயலாளர் தண்டாயுதபாணி நெல்லை பாலா, மகேஷ், நாங்குநேரிசக்திவேல், சேந்திமங்கலம் சுரேஷ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், முனியசாமி, கோபி மற்றும் பலர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக