புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் பருவ மழை பொய்த்துள்ளதால், டெல்டா மாவட்டங்களை போல, தென் மாவாட்டங்களிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்ட விவசாயிகளுக்கும் ரூ.13 ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, 18-ந்தேதிக்கு பின் போராட்டம் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு 8 மணி நேரமாவது மின்சாரம் வழங்க வேண்டும்.
ஏழைகளுக்கு இலவச பொங்கல் பொருள் ரூ.110 அடக்கத்தில் வழங்குகின்றனர். அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.3000 வரை வழங்குகின்றனர். இந்த பாகுபாட்டை நீக்க வேண்டும். பட்டியல் இனத்தில் உள்ளவர்களில், அருந்ததியினருக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கியது கண்டிக்கத்தக்கது. 5 ஜாதிகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்ககோரி பிப்ரவரி 6-ந்தேதி திருநெல்வேலியில் போராட்டம் நடத்தப் படும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அரசியலில் உச்சத்திற்கு சென்றார். தற்போது கீழே இறங்கி, மீண்டும் ஜாதி என்ற பாலர் பாடம் படிக்கிறார். தலித் மக்களுக்கு எதிராக, மற்ற ஜாதியினரை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை, மாற்றி அமைக்க வேண்டும் என வருகிற 24-ந்தேதி ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ளார்.
இதற்கு போலீசார் அனுமதித்தால், தலித் அமைப்புகள் சார்பில் அதே இடத்தில், அதே நாளில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக