ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி- 10,000 போலீசார் குவிப்பு ..

பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி பரமக்குடியில் 10,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தின விழா இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சந்தைப்பேட்டை அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்த அரசு நேரம் ஒதுக்கியது. அதன்படி காலை 7 மணிக்கு விழா துவங்கியவுடன் அவரது சொந்த ஊரான செல்லூர் மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் சேதுராமன் தலைமையில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு தேவேந்திர பண்பாட்டுக் கழகம் தலைவர் அழகர்சாமி தலைமையில் வந்தவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் கார்மேகம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முனியசாமி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம் பிரபு, மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட செயலாளர் ரங்கநாதன் மற்றும் முத்துசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகவேல், திசைவீரன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், நகர செயலாளர் சேதுகருணாநிதி, நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகர், இளைஞர் அணி துரைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பழனி ஆகியோரும், மக்கள் விடுதலை கட்சி சார்பில் தலைவர் முருகவேல் ராஜன், மதிமுக சார்பில் எம்.பி.கணேசமூர்த்தி மற்றும் இமானுவேல்சேகரன் மகள்கள் மேரி வசந்தாராணி, பாபின் விஜயராணி, சுந்தரி பிரபாராணி, ஜான்சிராணி ஆகியோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இவர்கள் தவிர ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். கடந்த ஆண்டு நினைவு நாள் அன்று கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,000 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய தெருக்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதட்டமான இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர். 10 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தி அஞ்சலி செலுத்த வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக