ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் உரையாற்ற அனுமதிக்ககூடாது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செப்படம்பர் 23 ஆம்தேதி அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கிவிட்ட நிலையில், அதற்கு ஒத்துழைக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்தது. இவ்விசாரணைக்கு ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு அளிக்கும்படி ராஜபக்சேவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்தார். அதே நாளில் வெளிநாட்டு செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த ராஜபக்சே,‘‘எந்த விசாரணையையும் ஏற்க முடியாது. ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்’’ என்று கூறியிருக்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்த திமிர் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் அதன் முடிவையும், அதன் துணை அமைப்புகளின் முடிவையும் ஏற்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு பிடிவாதம் பிடிக்கிறது; இலங்கையின் இத்தகைய செயல்பாடுகள் ஐ.நா. அமைப்புக்கு மட்டுமின்றி, அதில் உறுப்பினர்களாக உள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும்.
இத்தகைய சூழலில் அடுத்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற ராஜபக்சே அழைக்கப்பட்டிருக்கிறார். கூட்டத்தின் முதல் நாளிலேயே பிற்பகல் அமர்வில் முதல் ஆளாக பேச அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. அமைப்பையும், அதன் பொதுச் செயலாளர் பான்.கி.மூன், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோரையும் அவமதித்த இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் சரியானதாக இருக்கும். அதைவிடுத்து ராஜபக்சேவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்து ஐ.நா. அவையில் பேச அனுமதிப்பது போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஊக்குவிக்கும் செயலாக அமையும்.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், ஐ.நா. மற்றும் அதன் துணை அமைப்புகளின் மதிப்பை காப்பாற்றும் வகையிலும் ஐ.நா. பொது அவையில் உரையாற்ற ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும்; ராஜபக்சேவை ஐ.நா.மன்றத்தில் உரையாற்ற அனுமதிக்ககூடாது. என்பதனை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செப்படம்பர் 23 ஆம் திகதி அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தலைவர் தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்கள் சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனஉரையாற்றுகிறர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக