ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 13 செப்டம்பர், 2014

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு....


கோவில்பட்டியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தியாகி இம்மானுவேல் சேகரன்தியாகி இம்மானுவேல் சேகரனின் 57–வது நினைவு நாளை முன்னிட்டு, கோவில்பட்டி புது ரோடு அம்பேத்கார் சிலை அருகே அவரது உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. உருவ படத்துக்கு புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் பி.அன்புராஜ் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட பொறுப்பாளர் கே.கருப்பசாமி, மாநில தொண்டர் அணி செயலாளர் பூவானி லட்சுமண பாண்டியன், ஒன்றிய தலைவர் கே.கனகராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் எம்.மாடசாமி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு திட்டங்குளம்கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தில், தியாகி இம்மானுவேல் சேகரனின் உருவச்சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் ஆனி முத்துராஜ், தொகுதி செயலாளர்கள் பாஸ்கரன், மகேசுவரன், நகர செயலாளர்கள் முத்து கணேஷ், ராமசெல்வம், கிளை செயலாளர் செந்தூர்பாண்டியன், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மாடத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மகளிர் அணி தலைவி ரஞ்சிதமணி தலைமையில், தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக