தியாகி இமானுவேல்சேகரனார் 57 ம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தலில் இன்று பரமக்குடியில் தியாகியின் நினைவிடத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழினவேந்தர்பெ.ஜான்பாண்டியன் அவர்களின் ஆணையேற்று கழகத்தின் பொதுச் செயலாளர் ஜா.பிரிசில்லாபாண்டியன் அவர்கள் வீரவணக்க அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது...............................................
" இந்த வரலாற்று சிறப்பு நாளில் இங்கு கூடியுள்ள தோழர்களே தலைவர் தமிழினவேந்தரின் பாசத்திற்குரிய சகோதரர்களே! தலைவர் தமிழினவேந்தர் இன்று இந்த நிகழ்வில் தவிர்க்க முடியாத சூழலில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் என்னை இங்கே அனுப்பியுள்ளார். அவரது ஆணையையேற்று இங்கே ஐயா தியகி இமானுவேல் செகரனாருக்கு வீரவணக்க மரியாதை கட்சியின் சார்பில் செய்யப்பட்டது.
தியாகி ஐயா இமானுவேல்சேகரனார் சமூகங்களிடையே உள்ள சாதி முரண்பாடுகளை வேரறுத்து சமநிலைச் சமுதாயம் அமைய வேண்டும் என்று போராடிய , முழக்கமிட்ட மாபெரும் தலைவர். அவர் விட்டு சென்ற அப்போராட்ட களத்தை சமுக தளத்திலும் , அரசியல் தளத்திலும் அவர் வழியில் தலைமையேற்று முன்னெடுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் நம் தலைவர் தமிழினவேந்தர். அன்று தொடங்கி இன்று வரை நெடுங்காலமாக நாம் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அரசு சார்பில் விழா எடுத்து மரியாதை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்னெடுக்கிறோம். ஆனால் அரசியல் களம் ஒன்றே நாம் அக்கோரிக்கையை வென்றெடுக்கும் அதிகாரத்தை நமக்கு அளிக்கும் என்பதனை அறியாது இருந்தால் எப்படி நமக்கு வெற்றி கிடைக்கும் எனவே நாம் அரசியல் களத்தில் அணிதிரள வேண்டும் தலைவர் தமிழினவேந்தர் உங்களை அரசியல் களம் நோக்கி அழைக்கிறார் ..........அணிதிரள்வீர்....என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக