ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 30 ஏப்ரல், 2015

புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து

புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து
கால நேர எதுவுமின்றி விலங்கினும் மோசமான நிலையில் உழைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டு வந்த உழைப்பாளிகளுக்கு 8 மணி நேரம் வேலை நேரம் என்பதை உதிரம் சிந்தி உறுதி செய்த நாளே மே தினம் ஆகும்!இந்நாள் உலக உழைப்பாளர்களின் விலங்கொடித்த தினம் ஆகும்.எனினும் இந்திய உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் இது எட்டாக்கனியாகவே இருக்கிறது.ஆண்டுக்கு ஒரு நாள் விடுமுறை மட்டுமே மே தினத்தின் நோக்கத்தை நிறைவேற்றாது! அனைத்து உழைக்கும் மக்களுக்கும் உண்ண உணவு ,உடை ,உறையுள் ,போதிய ஓய்வு என அனைத்தும் நிறைவடையும் பொழுதே மே தினத்தின் நோக்கம் நிறைவேறியதாகும் அதை நிறைவேற்றிட தமிழ் உழைப்பாளி மக்கள் ஒன்றுபடுவோம் !
புதிய உலகம் படைக்க சபதம் ஏற்போம்.
அன்புடன் ,
டாக்டர் .க .கிருஷ்ணசாமி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக