ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

திங்கள், 13 ஏப்ரல், 2015

நாகையில் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து,நாகையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்கள் குடுபத்திற்கும் நிவாரணமாக தலா 20 லட்சம் ரூபாய் வழங்க ÷வண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.வழக்கை சி.பி.ஐ.,வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,நாகை கலெக்டர் அலுவலகம் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட தலைவர் சூர்யா தலைமை வகித்தார்.நகர செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.25 க்கும் ÷
மற்பட்டோர் கலந்து கொண்டு,ஆந்திர அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக