ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 20 ஜூன், 2015

பள்ளர்களே பாண்டியர்கள் என்பதற்கு ஆதாரங்கள்....

"கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் அடையாளம் தெரியாமல் மறந்து விட்டனர். நாயக்க மன்னர்களும் இப்பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றவில்லை. அடுத்திருந்த திருவிதாங்கூர் மன்னர்கள் திருநெல்வேலிச் சீமையின் தென்பகுதியை ஆண்டனர். இதற்கான ஆவணம் திருச்செந்தோர்க் கோயிலில் உள்ளது" எனக் குறிப்பிடுகிறார் கால்டுவெல். (பேராசிரியர் ந.கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு, ப.8 )
ஆனால் பாண்டிய மன்னர்களும், அவர் தம் வழி வந்த மரபினரும், மரபினரும் திட்டமிட்டு அடையாளம் தெரியாமல் ஆக்கப் பட்டுள்ளனர். திருச்செந்தூர்க் கோயிலின் மேற்க்குக் கோபுர வாயில் அடைக்கப்பதர்க்கான காரண காரியங்களை ஆய்ந்து ஆராய்வோமானால் பாண்டிய மரபினரை எளிதாக் கண்டறிய முடியும்.
திருச்செந்தூர்க் கோயிலுக்கு நேரடி உறவும், உரிமையும் உள்ள ஊர் 'திருச்செந்தூர்பட்டி'. இவ்வூர் திருவைகுண்டம் வட்டம், ஆழ்வார்கற்குளம் ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இவ்வூர் 'திருச்செந்தூர்ப் பச்சேரி' எனவும் வழங்கப்படுகிறது. பொருநை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள பள்ளர்கள் மட்டுமே வாழக்கூடிய இச்சிற்றூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊராகும். வயல் சூழ்ந்த இவ்வூரைச் சுற்றி 35 கோட்டை விதைப்பாடு நிலம் உள்ளது. கோயில் தோன்றிய காலந்தொட்டு பன்னெடுங்காலமாக 'நாள் பூசை' செய்வதற்குப் பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளர் குல மக்கள் பொருநை ஆற்றில் புனித நீராடி, நெல் குத்தி அரிசி கொண்டு சென்றுள்ளனர். இவ்வரிசியின் மதிப்பு '3 1 /2 கோட்டை' எனக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1947 க்கு முன் திருச்செந்தூர்ப் பட்டியிலிருந்து திருச்செந்தூர்க் கோயிலுக்கு 'நாட்கதிர்' கொண்டு செல்லும் மரபு இருந்துள்ளது. 'நாட்கதிர்' கொண்டு செல்லத் திருச்செந்தூரில் இருந்து கோயில் யானை திருச்செந்தூற்பட்டிக்கு வந்து 'நாட்கதிரை' எடுத்துக் கொண்டு சென்று நான்கு வீதிகளில் வளம் வந்து மேற்கு வாயில் வழியாகக் கருவறைக்குள் சென்று நாட்கதிரைக் கசக்கி அதனை அரிசியாக்கி அதில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துக் கோயிலில் உள்ள அரிசியோடு போட்டுப் பொங்கல் வைப்பார். யானையுடன் நாட்கதிரைக் கொண்டு செல்லக் கூடிய பள்ளர்களின் செலவுத் தொகையைக் கோயில் குடும்புவே ஏற்றுக் கொள்ளும். தமிழ்க் கடவுள் முருகனுக்குப் படைத்த அப்பம், தேங்காய், பழம் ஆகிய பண்டங்களைக் கோயிலுக்குச் சென்றவர்கள் பெற்றுக் கொண்டு வந்து திருச்செந்தூர்பட்டியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் முறைப்படி வழங்குவர். பிற்காலங்களில் சீட்டுக் குலுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட இருவர் 'நாட்கதிரைக்' கொண்டு சென்று கோயிலின் மேற்கு வாயில் வழியாக மண்டபத்தில் வைத்து, அதனை அரிசியாக்கிப் பொங்கலிடுவர். இதற்காகக் கோயில் குடும்பில் இருந்து ரூபாய் 500 செலவுத் தொகையாகக் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு முறை சீட்டுக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் பட்ட விவரமறியாத இருவர் நாட்கதிர் கொண்டு செல்ல அங்கே மேலாண்மை செய்ய வந்த வெள்ளையர்கள் நாட்கதிர் கொண்டு சென்ற பள்ளர்களைப் பற்றி கேட்டபோது கோயிலில் ஆதிக்கம் செலுத்தி வந்த வந்தேறி ஆரியப் பிராமணர்கள், "கோயிலுக்கும், பள்ளர்களுக்கும் இனி எந்த உறவும், வரவும் இல்லை" என ஏமாற்றிக் கையொப்பம் வாங்கிக் கொண்டு, 500 ரூபாயும், அப்பமும், தேங்காய், பலமும் கொடுக்காமல் அனுப்பி விட்டனர். அத்தோடு கோயில் குடும்பிற்க்கும், பள்ளர்களுக்குமான நிருவாக உறவுகள் நிறைவுற்றது.
பின்னாளில் பள்ளர் குளத்தில் பிறந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாத்தூர், சின்ன ஓடைப்பட்டியைச் சேர்ந்த கோ.சங்கிலி என்பவர் திருச்செந்தூர் கோயிலின் அறங்காவல் குழுவில் இருந்தார். அதன் பின்னர் கோயில் நிர்வாகத்திற்கும், பள்ளர்களுக்குமான உறவுகள் முற்றிலும் அறுந்துப் போய் விட்டது. இருப்பினும் வரலாற்றுத் தொடர்புகள் சில உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முருகனுக்குப் பிடிக்கப்படும் வெண்கொற்றக் குடையும், இரண்டு சேவல் கொடியும் திருச்ன்சென்தூர்க் கோயிலில் இருந்து தெருச்செந்தூர் பட்டிக்கு கொடுத்து விடப்படும். அவ்வாறு இறுதியாகக் கொடுத்து விடப்பட்ட வெண்கொற்றக் குடையிலுள்ள வெண்கல கலசமும், இரண்டு சேவை கொடியும் திருச்செந்தூர் பட்டியிலுள்ள அம்மன் கோயிலில் தான் இன்றும் உள்ளது. உடையார் குளம், வடக்குக் காரசேரி, ஒனாகுளம், சிங்கத்தாங்குறிச்சி, ஆலந்தா, வல்லநாடு, நாணல்காடு, முத்தாலங்குறிச்சி, முறப்பநாடு, படுகையூர், காசிலிங்காபுரம், அனைவரதநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து பள்ளர்கள் காவடி கட்டித் திருச்செந்தூர்பட்டியில் ஒன்று கூடி அங்கிருந்து திருச்செந்தூர் சென்று மேற்கு வாயில் வழியாகச் சென்று முருகனை வழிபட்டு வந்தனர். அதன் பின்னர்தான் மேற்கு வாயில் அடைக்கப் பட்டது.
"பழம்பெரும் கோயில்களின் மேற்கு வாயில்,பாண்டிய மன்னர்களும் அவர் தம் மரபினரும் வருகின்ற வழியாதலால் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்த போது கோயில்களின் மேற்கு வாயில்கள் மூடப் பட்டன. அதிகாரத்தை இழந்ததால் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கும் கோயில் நுழைவு மறுக்கப் பட்டது" என்ற வரலாற்று அறிஞர் இரா.தேவ ஆசீர்வாதத்தின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இக்கோயில் வரலாற்றால் உறுதி செய்யப் படுகிறது.
திருச்செந்தூர்க் கோயிலின் மேலக் கோபுர வாயிலும் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வந்தபோது இழுத்து மூடப் பட்டுள்ளது. மேற்கு வாயில் பகுதியில் உள்ள தூண்களில் குடும்பன் பெயர் தாங்கிய பல கல்வெட்டுப் பொறிப்புகள் காணப்படுகின்றன. மேலக் கோபுர வாயிலில் அமைந்துள்ள தெருவிக்குக் கோட்டைத் தெரு என்று பெயர். இத்தெருவில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப் பட்ட பத்து பழம் பெரும் மடங்கள் அமைந்துள்ளன. திருச்செந்தூர்ப் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளர் குலத்தாரின் கிளைப் பிரிவினர் ஒவ்வொருவருக்கும் ஒரு மடம் என்ற கணக்கில் பத்து பெருமடங்கள் உள்ளன. கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து கோட்டைத் தெரு வழியாக வரும் போது முதலாவதாக 'அஞஞாப் பள்ளர்' மேடம் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வாதிரியப் பள்ளர்' மடமும், 'சோழியப் பள்ளர்' மடமும் சேர்ந்தார்ப் போல் உள்ளது. அதன் கீழ்ப்புறம் 'வங்கப்பள்ளர்' மடம் உள்ளது. அடுத்ததாக 'அளத்துப் பள்ளர்' மடமும், அதன் கீழ்ப்புறம் 'கொற்கை நாட்டார்( பள்ளர்)' மடமும் உள்ளது. அதற்க்கடுத்ததாகப் 'பருத்தி கோட்டை நாட்டார் (பள்ளர்)' மடமும், 'சீவந்திவள நாட்டார் (பள்ளர்)' மடமும், 'வீரவள நாட்டார் (பள்ளர்)' மடமும் உள்ளன. ஒவ்வொரு மடமும் அரைக்குறுக்கத்திற்கு மேல் பரப்புக் கொண்டதாகச் சுற்றுசுவர் கட்டப் பட்டுள்ளது. இவற்றில் ஐந்து மடங்கள் பயன்பாட்டிலும், நான்கு மடங்கள் பாழடைந்த நிலையிலும் இருக்கின்றன. வீரவள நாட்டுப் பள்ளர் மடத்திற்கு வடபுறம் அருகே இருந்த ஒரு பள்ளர் மடம் மற்றவர்களுக்கு விற்கப் பட்டு மடம் இருந்த சுவடு தெரியாமல் அவ்விடம் வீடுகளாகிப் போயின.நன்றிVeera Vala Naattar Balan.

4 கருத்துகள்:

  1. நாட்டார்கள் என்றால் நாடார்கள். 1930 க்கு பிறகே நாடார்கள் என்று அழைக்க படுகிறோம்.... தேவர்கள் தான் மற்ற ஜாதி பட்டத்தை தனது என்று குறிக்கொண்டு அலைகிறார்கள் என்றால் நீங்களுமா......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பெயர் முதலில் சானார் பிறகு அரசியல் பலத்தால் எதையும் நாடாதவர் என்னும் பொருள் வரும் மாதிரி நாடார் என்று மாற்றி கொண்டீர்கள்

      நீக்கு
  2. தமிழன் வரலாறு -------------------------------------"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி".. உலகின் முதல் மனிதன் தமிழன். உலகின் முதல் மொழி நம் தமிழ் மொழி. உலகின் முதல் மதம் தமிழ் மதம். தமிழ் மதத்திலிருந்து தோன்றியதே இந்து மதம். முதன் முதலில் உழவுத் தொழிலை செய்தவன் மருத நிலத்தில் வாழ்ந்த தமிழன். அம்மருத நிலத்தில் வாழ்ந்த தமிழர்களிடம் இருந்து தான் உலகின் முதல் அரசர்களாகிய பாண்டியர்கள் சோழர்கள் வந்தனர். அவர்கள் உலகம் முழுவதும் பயனித்து, தாங்கள் உருவாக்கிய உழவுத் தொழிலை அனைவருக்கும் கற்றுத் தந்தனர். அவ்வாறு உலகம் முழுவதும் பயனித்த அந்த தமிழர்கள்,அரசர்கள், பாண்டியர்கள் யார்? அவர்கள் தான் மருதநில மக்களாகிய பள்ளர்கள்,மள்ளர்கள், தேவேந்திர குல வேளாளர்கள்... சோழர் பாண்டியர்களாகிய மள்ளர் குடி மக்களே உலகம் முழுவதும் பயனித்து உலகிற்கு உழவுத் தொழில் கற்றுத் தந்தனர்... அமைதியான நேரத்தில உழவர்களாகவும்(பள்ளர்கள்), பிற நாட்டினர் படையெடுத்து தன் நாட்டை தாக்க வந்தால் போர் வீரர்களாகவும்(மள்ளர்கள்) இருந்து வந்துள்ளனர் பாண்டிய மக்கள்.அவ்வாறு வாழ்ந்த பாண்டிய மள்ளர்கள் கி.பி. 1200 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, நாயக்கர்களின் படை எடுப்பின் போது, பாலை நில மக்களின் சூழ்ச்சியால், துரோகத்தால் தங்கள் நாட்டை இழந்தனர். பாண்டியர்களை காட்டிக்கொடுத்து அவர்களை வீழ்த்த உதவியதற்காக, நாயக்கர்கள் பாலை நிலத்து துரோகிகளுக்கு தாங்கள் கைப்பற்றிய பாண்டிய நாட்டின் சில பகுதிகளை பரிசாக அளித்தனர்.அதன் பின் பாண்டியர்களாகிய பள்ளர்களின் நிலம், செல்வம் பறிக்கப்பட்டு தங்கள் நாட்டிலேயே தனிமை படுத்தப்பட்டனர். அவர்களின் வரலாற்றைக் கூறும் அவர்கள் கட்டிய பல கோயில்களிலுள்ள ஓவியங்கள் அழிக்கப்பட்டன. பிறகு வந்தவர்கள் எல்லாம் தங்களை பாண்டியர்கள் என்றனர்(உதாரணமாக வந்தேறி தெலுங்கராகிய கெட்டி பொம்மு நாயக்கர், தன்னை வீர பாண்டிய கட்ட பொம்மன் என்று மாற்றிக் கொண்டதைப் போல)ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட தாங்கள் தான் பாண்டியர்கள் என்று ஒரு சமூகத்தினர் (பாலை நிலத்தவர்கள்)கொல்லம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் இறுதியில் நீதிமன்றம், பள்ளர்களே பாண்டியர்கள் என்று தீர்ப்பளித்தது. நாயக்கர் ஆட்சிக்கு முன் தமிழகத்தை ஆண்டவர்களே மருதநிலத்தில் வந்த சோழர்கள் பாண்டியர்கள் ஆவர். மள்ளர்களே பாண்டிய வம்சத்தினர், அவர்களே உலகம் முழுவதும் பயனித்து பிற நாட்டு மக்களுக்கு உழவுத் தொழிலை கற்றுத் தந்தனர் என்பதற்கு ஆதாரமாக, அமேரிக்கா, பிரான்ஸ், இட்டாலி, ஜெர்மனி, நார்வே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் 3000 இடங்களின், ஊர்களின் பெயர் பள்ளர்,மள்ளர்,பாண்டியர் என்றே உள்ளது. இதனை உலகின் தலைசிறந்த ஆராய்சியாளரான ஒரிசா பாலு அவர்கள் கூறியுள்ளார் (யூ டியூப் இணையத்தில் orissa Balu அவர்களின் கூற்றினை காணலாம்). பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் உள்ள செப்புப் பட்டயத்தில், பாண்டியர்களாகிய பள்ளர்களே அதனை கட்டியவர்கள் என்று உள்ளது. மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக ஆண்டு தோறும் இக்கோயில்களின் திருவிழாவின் போது, மள்ளர் மக்களுக்கே முதல் மரியாதை பரிவட்டம் வழங்கப்படும். இதனை மறுப்பவர்கள் இக்கோவில்களில் பணிபுரியும் பிராமண பூசாரிகளிடம் கேட்டால், பள்ளர்கள் மள்ளர்கள் தேவேந்திர குல வேளாளர்களே பாண்டிய மன்னர் வம்சத்தினர் என்பதை தெரிந்து கொள்ளலாம். தங்களை சோழர், பாண்டியர்கள் என்று கூற உரிமை உள்ள தமிழ் இனம் பள்ளர்களும், பள்ளியர்களும்( பள்ளர்களிடத்தில் இருந்து பிரிந்து சென்ற இன்றைய வன்னியர்கள்) மட்டுமே...

    பதிலளிநீக்கு