ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 11 ஜூலை, 2013

"தேசிய மாநாடு.....புதிய தமிழகம்


தருமபுரியில் கடந்த ஆண்டு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞனும், வன்னிய சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்து சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட நாள் முதல் இளவரசன் மரணம் அடைந்த தருணம் வரை தமிழகத்தில் நடந்து வரக்கூடிய பல்வேறு சமூக சிக்கல்கள் குறித்து கலந்தாலோசிக்க சமூக ஆர்வலர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் 9.7.2013 அன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் சமூக சமத்துவ படை கட்சியின் தலைவர் திருமதி.ப.சிவகாமி இ.அ.ப. (ஓய்வு), அருந்ததி மக்கள் கட்சியின் தலைவர் வலசை ரவிச்சந்திரன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பாவண்ணன், முற்போக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், மக்கள் சிவில் உரிமைக் கலகத்ஹ்டின் தமிழ்நாடு-புதுச்சேரி தலைவர் பேரா.சரஸ்வதி, மனித உரிமை ஆர்வலர் பேரா.அ.மார்க்ஸ், வழக்கறிஞர் திரு.அ.சரவணன், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா.கல்விமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1)தமிழகத்தில் அண்மைக்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகள், அண்மையில் தருமபுரியில் நடந்த இளவரசன்-திவ்யா காதல் திருமணம் உள்ளிட்டு சாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் மற்றும் கவுரவக் கொலைகள் ஆகியவை குறித்து
சனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் ஆழ்ந்த கவலை கொள்கின்றன. இந்த வன்கொடுமைகளை ஆதரித்து ஆதிக்க சாதி சக்திகளை ஒன்றிணைத்து தமிழத்தில் சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

2)இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் தனிமனித உரிமையாகிய காதல் திருமணங்கள், சாதிகடந்த திருமணங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, வன்முறையைத் தூண்டியும், ஏழுகோடி தமிழ் மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் மேற்குறிப்பட்ட சமூகக் கொடுமைகளை ப்பட்டது.அறவே தடுத்து நிறுத்தும் பொருட்டு தமிழக அரசு, கவுரவக் கொலைகளைத் தடுக்கும் அவசர சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.

3)மேற்குறிப்பிட்ட கோரிக்கையை, மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தும் பொருட்டு வருகின்ற 31.07.2013 அன்று (காலை பிரதிநிதிகள் மாநாடு, மாலை பொதுமக்கள் மாநாடு) அனைத்துக் கட்சித் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்கும் "தேசிய மாநாடு" நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக