"மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மள்ளர் நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தேனி கே.ஏ.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகம் தடை செய்யப்பட்டது கருத்து மற்றும் படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது. இதனால் ஒரு படைப்பாளி சுதந்திரமாக திரைப் படத்தையோ அல்லது புத்தகத்தையோ வெளியிட முடியாத நிலை உள்ளது.
எனவே மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க அரசு முன்வரவேண்டும் என்று அந்த அறிக்கையில் கே.ஏ.மோகன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக