ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூலுக்கு தடை எதிர்த்த மனுவுக்கு அரசு பதிலளிக்க உத்தரவு..



  
சென்னை:"மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூலுக்கு, விதிக்கப்பட்ட தடையை, ரத்து செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மள்ளர் இனம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்த, செந்தில் மள்ளர் என்பவர், தாக்கல் செய்த மனு:
மள்ளர் மீட்புக் களத்தின் நிறுவனராக உள்ளேன். "மள்ளர்' இனத்தின் வேர்களை அறியும் விதத்தில், சமூக ஆய்வில் ஈடுபட்டேன். ஏழு ஆண்டு ஆய்வுக்குப் பின், மள்ளர் வரலாற்றை கண்டுபிடித்தேன். இதற்காக, கல்வெட்டுகள், தாமிர பட்டயங்கள், பல்வேறு ஆவணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்துள்ளேன்.
நான் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' எனும் நூல், கடந்த ஆண்டு, மே மாதம் வெளியிடப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதி, விற்பனையாகி உள்ளன. நூல் வெளியீட்டுக்குப் பின், மள்ளர் சமூகத்தினருக்கும், மற்ற சமூகத்தினருக்கும் இடையே, எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. எந்த சமூகத்தையும் விரோதிக்கும் நோக்கம் கிடையாது.
என் நூலில், "பாண்டிய மன்னர்களின் வாரிசுகள் தான், மள்ளர்கள்' என, கூறியுள்ளேன். என் நூலை, தடை செய்து, கடந்த, மே மாதம், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நூலை வைத்திருந்ததற்காக, என் 
உறவினர் பெருமாள்சாமியை, சாத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். அரசு 
உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் தனபாலன், சுப்பையா, சி.டி.செல்வம் ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜரானார். "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
பாதுகாப்பு
அரசு தரப்புக்கு, "நோட்டீஸ்' கொடுத்து, இவ்வழக்கை விசாரிக்க வேண்டும். அரசு தரப்பில் பதில் அளிக்க, அவகாசம் கோரப்பட்டது. நூல் வெளியீட்டாளர், பிரிண்டர், அரசு அதிகாரிகளால் குறி வைக்கப்படுவதாக, மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, அரசிடம் நிலைமையை விளக்கி, சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்.
இம்மனு மீதான விசாரணை, இம்மாதம், 18ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு, "பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக