ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 3 ஜூலை, 2013

மீண்டெழும் பாண்டியர் வரலாறு’....தடை செய்யப்பட்ட மள்ளர் வரலாறு நூல் குறித்து – அ.மார்க்ஸ்



ஏன் இந்தத் தடையை எதிர்க்கிறோம்…
செந்தில் மள்ளர் என்பவர் எழுதிய ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு” எனும் நூலைத் தமிழக அரசு தடை செய்துள்ளது (G.O. Ms. No. 525, Public (S.C), 30th May 2013).  அது மட்டுமல்ல அந்த நூல் ஆசிரியர் செந்தில் மள்ளர் மீது தேசத் துரோகச் சட்டம் (124 ஏ) உட்படப் பல பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்து அவரைத் தேடியும் வருகிறது. அவரது மாமனார் பெருமாள் சாமி என்பவரும் இன்று இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமூக ஒற்றுமையைக் குலைத்து, சாதிகளுக்கிடையே மோதலைத் தோற்றுவிக்கும் உள்ளடக்கம் கொண்டிருப்பதால் இந்ந்நூல் தடை செய்யப்பட்டுள்ளது என்பதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நூலின் கருத்துக்களிலும் அவை சொல்லப்படும் விதங்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆயினும் இந்தத் தடையை வன்மையாகக் கண்டித்துள்ளேன்னேன் எனக்கு ஏன் உடன்பாடில்லை என்பது குறித்து இறுதியாக எழுதுவேன்.
‘பள்ளர்’ எனப் பட்டியல் சாதிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவோர் உண்மையில் ‘மள்ளர்கள்’, ‘தேவேந்திரகுல வேளாளர்கள்’ என அழைக்கப்பட வேண்டியவர்கள். ‘பள்’ எனும் வேர்ச் சொல்லிலிருந்து கிளைத்ததே “பாண்டியர்” எனும் அரச குல மரபுப் பெயர். ஆக பள்ளத்தில் வேளாமை செய்து வாழ்ந்திருந்த வேளாண் மக்களே நாங்கள். எங்களிலிருந்து கிளைத்ததே வெள்ளாளர் முதலான அனைத்துத் “தமிழ்ச் சாதி”யினரும்.. என்கிற கருத்தை முன்மொழிந்து செல்லும் நூல் இது..
இந்தக் கருத்துக்கள் சரியா தவறா என்பதல்ல இங்கு பிரச்சினை. அதைத் தீர்மானிக்க வேண்டியது புலமையாளர்கள் (academic community). புலமையாளர்களின் தீர்ப்பு தவறானால் அது குறித்து முடிவு செய்ய இன்று ஏராளமான வழிமுறைகள் உண்டு.
ஆனால் இடையில் அரசு தலையிட்டு இம்மாதிரியான முடிவை எடுக்க வேண்டிய அவசியமென்ன?
இப் புத்தகம் வெளியிடப்பட்டு சுமார் ஓராண்டு ஆகிவிட்டது. சுமார் 5000 பிரதிகளை இந்நூலாசிரியர் விற்றுள்ளார் என ஒரு தகவல் எங்களுக்கும் வந்துள்ளது.
‘விசுவரூபம்’ திரைப்படத்திற்கு வந்தது போல பெரிய பிரச்சினைகள் ஏதும் இங்கு “பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து” வரவுமில்லை. ‘பாதிக்கப்பட்டவர்களாக’ இங்கு யாரும் பிரச்சினை செய்யவில்லை. தவிரவும் ஒரு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஊடக அதிகாரமிக்க கமலஹாசன் போன்ற ஒரு அதிகாரமிக்க உயர் சாதி நபர் தொடர்ந்து ஒரு சிறுபான்மைச் சமூகத்தைப் பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அம்மக்களின் அன்றாடவாழ்வேயே கேள்விக்குறியாகும் பிரச்சினையும் அல்ல இது. இது ஒரு அடித்தளச் சாதி தன்னை உறுதி செய்து கொள்ளும் முயற்சி.
பின் ஏன் இந்தத் தடை?
இம்மாதிரியான எத்தனையோ புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன. ‘ஏசு நாதர் அல்ல, அது ஏசு நாடார்” என ஒரு அபத்தப் புத்தகம் வந்துள்ளது. ராஜராஜ சோழன் வேறு யருமில்லை, இபிறவியில் அது நான்தான் எனக் கும்பகோணத் தொழிலதிபரும், பார்ப்பன சங்கத் தலைவராக இருந்தவருமான ஒரு ‘ராமன்’  “அருளுடைச் சோழ மண்டலம்” என ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இவற்றை எல்லாம் தடை செய்யாமல் இந்தப் புத்தகத்தை மட்டும் தடை செய்ததன் பொருளென்ன?
எல்லா சாதிக்காரர்கள் பெயர்களிலும் போக்குவரத்துக் கழகங்கள் தொடங்கப்பட்டிருந்தபோது பள்ளர்களின் போற்றற்குரிய திரு உருவாக உருப்பெற்றிருந்த “வீரன் சுந்தரலிங்கத்தின்” பெயரில் ஒரு போக்குவரத்துக் கழகம் தோன்றியபோது ஏன் இந்த எதிர்ப்பு?
தேவர், அதுதான் முத்துராமலிஙகத் தேவரின் பெயரால் குரு பூஜை நடத்தலாம். ஆனால் பள்ளர் குலத் திரு உரு இம்மானுவேல் சேகரனின் பெயரால் “குரு பூஜை” நடத்தக் கூடாது எனவும், மீறி நடத்த முயற்சித்ததற்காகப் பிரச்சினைகள் எழுந்ததும், இறுதியில் அவ்வாறு முயன்ற சாதியினரில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப் பட்டதும்.. இரண்டாண்டுகளுக்கு முன் ஜெயா ஆட்சியில் நடந்ததில்லையா?
1990க்குப் பின் இங்கே அடையாள அரசியல் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. ஆதிக்க சாதியினர் எல்லோருக்கும் இங்கே பொது வெளிகளில் தலைவர்கள், திரு உருக்கள் இருந்தனர் ஒடுக்கப்பட்ட சாதிகளின் திரு உருக்கள் பொது வெளிகளில் இடம் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதேபோல பழமையில் தாங்கள் கோலோச்சிய காலம் ஒன்றிருந்தது என ஒரு வரலாற்றையும் அவர்கள் கட்டமைக்க வேண்டிய ஒரு அவசியமும்  எல்லோருக்கும் இருந்தது, குறிப்பாக  வரலாறு மறுக்கப்பட்டிருந்த அடித்தட்டு மக்களுக்கு இது தேவையாக இருந்தது. இம்மக்களில் பொருளாதார ரீதியாகவும், ஆதிக்க ரீதியாகவும் மேம்பட்டிருந்த குருசாமி சித்தர் போன்றோர் தம் பொருளியல் செல்வாக்கின் அடிப்படையில் “மள்ளர் வரலாறுகளை” எழுதத் தொடங்கினர்.
எத்தனை குறைபாடுகள், பிரச்சினைகள் இருந்தபோதும் இதை ஓரு வகையில் ஜனநாயகத்தின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆதிக்க சாதிகளிடமிருந்து இத்தகு முயற்சிகளுக்குக் கடுமையான எதிர்ப்புகள் வரத் தொடங்கின.
இந்தப் பின்னணியிலிருந்துதான் இன்று செந்தில் மள்ளரின் நூல் ஜெயலலிதா அரசால் தடை செய்யப் பட்டுளது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படையிலேயே இந்நூலுக்கு ஜெயா அரசால் விதிக்கப்பட்ட தடையைக் கண்டிக்க வேண்டிய அவசியம் நமக்கு இன்று ஏற்பட்டது
ஏன் இந்த நூலிக் கருத்துக்களை முற்றாக மறுக்கிறோம்..
சிவாஜி கணேசன் நடித்த பி.ஆர்.பந்துலுவின் ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் ஒரு சிலருக்கு நினைவிருக்கலாம். அதில் ஜெமினி கணேசன் கட்டபொம்மனின் தளபதி வெள்ளையத் தேவனாக வருவார். தேவர் சாதியைச் சேர்ந்த வீரமிகு தளபதியாக அவர் சாதியினரால் வெள்ளையத் தேவன் மதிக்கப்படுவதை நாம் அறிவோம். சங்கரதாஸ் சுவாமிகளின் (அவரும் ஒரு தேவர்தான்) கட்டபொம்மன் நாடகத்தை நான் ஒரு முறை நண்பர் கோச்சடையுடன் காரைக்குடியில் ஒரு இரவு முழுவதும் பார்த்தேன், அதில் பொம்முவைக் காட்டிலும் தேவனே முக்கிய பாத்திரமாக வருவார்,
கட்டபொம்மனின் தளபதியாகவும் மனித வெடிகுண்டாகத் தன்னை மாற்றிக் ஒண்டு வெள்ளையர்களின் வெடி மருந்துக் கிடங்கைத் தகர்த்துத் தன்னையே தியாகம் செய்து கொண்ட மாவீரனாகவும் இன்று தேவேந்திர குல வேளாளார்களால்  போற்றப் படும் வீரன் சுந்தரலிங்கம் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.. ஆனால் திரைப் படத்தில் சுந்தரலிங்கமாக வருவது ஏ.கருணாநிதி என்கிற நகைச்சுவை நடிகர். அவரது மனைவியாக வருவது நகைச்சுவை நடிகை முத்துலட்சுமி. படத்தில் நகைச்சுவைப் பாத்திரங்களாக அவர்கள் வந்து போவர். ஒரு ஆபத்தான கட்டத்தில் உளவு பார்க்க யாரை அனுப்புவது என்கிற கேள்வி வரும்போதூ ஏ.காருணாநிதி (அதாவது சுந்தரலிங்கம்) நான் போகிறேன் என்பார். அதை ஏற்று சிவாஜி கணேசன் சொல்வார்: “பொடியன்… பொருத்தமானவன்”. ம.பொ.சியின் மேற்பார்வையில் எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
இப்படியான நிலை இன்று மாறியுள்ளது. இன்று யாரும் சுந்தரலிங்கத்தை அப்படிச் சித்திரித்துவிட இயலாது.. இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள அடையாள அரசியலின் தாக்கமும், அடித்தளச் சாதிகளின் உறுதியாக்கமும் இன்று இத்தகைய நிலைக்குக் காரணமானதை நாம் வரவேற்கலாம்.
ஆனால் அடையாள அரசியல் என்பது ஒரு இரு பக்கமும் கூரான கத்தி என அமார்த்ய சென் போன்றோர் சொல்வதை நாம் மறந்துவிட இயலாது. இத்தகைய சாதிப் பெருமைகள் தன் சாதி இழிவுக்கெதிராக நிற்பதோடு முடிந்து விடுவதில்லை. பிற சாதிகளை இழிவு செய்வதாகவும் பல நேரங்களில் வடிவெடுக்கிறது. இதுகாறும் தம்மை இழிவு செய்த சாதிகளை இன்று இவர்கள் இழிவு செய்தால் என்ன குடி முழுக்கிப் போகிறது என்று கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது புதிய ஊசல்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாகும். பூசலில்லாமல் அமைதி வழியில் இழிவைப் போக்கிக்கொள்ள வேண்டும் என நான் சொல்லவரவில்லை. அது சாத்தியமில்லை. ஆனால் அது நம் மீதான இழிவுக்கெதிராக கிளர்ந்தெழும்போதும் தமது அடையாளங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும்போதும் உருவாகும் பூசலாக இருக்க வேண்டும். மாறாகப் பிறரை இழிவு செய்து உருவாக்கும் பூசலாக இருப்பது தந்திரோபாய அடிப்படையிலும் கூடச் சரியாக இருக்க இயலாது.
இந்த நூலில்,
“வேளாண்மை என்றால் என்னவென்று தெரியாத வேளாளர், வெள்ளாளர் என்று வேடம் பூண்டு வெற்று முலாம் பூசி ஒப்பனை செய்து கொள்கின்ற பிளளைச் சாதியினர் தமிழர் வேர்களின் மூலக் குடியினர் அல்லர்…”(பக் 91)
“மறவர்கள் மாடு திருடுவதில் கை தேர்ந்தவர்கள். மதுரைப்பகுதியில் மறவர்கள் மாடுகளைத் திருடுவதற்குத் தனி நுட்பத்தையே கையாண்டனர்..” (பக் 217).
இப்படி நிறையக் காணக் கிடக்கின்றன. முன்னது நூலாசிரியரின் சொந்தக் கருத்தாகவும், பின்னது உடன்பாட்டுடன் கூடிய மேற்கோளாகவும் காட்டப்படுகிறது. முன்னதை “வேளாளர்கள்” குறித்த இவரது “ஆராய்ச்சி” முடிவு என்றும், பின்னது ஒரு வரலாற்றுண்மை எனக் கொண்டாலும் இன்று இந்நூல் தடை செய்யப்படுவதற்கு அரசால் சுட்டிக்காட்டப்படும் காரணங்களாக மாறிவிடுவதைக் கருத வேண்டும். அரசு சொல்கிறது என்பது மட்டுமல்ல பொதுப் புthதியிலும் (common sense) இது நூலுக்கெதிரான கருத்தையும் தடைக்கு ஆதரவையும் ஏற்படுத்தி விடுகிறது.
இது கூடப் பரவாயில்லை என எடுத்துக் கொண்டாலும். அடையாள அரசியலின் இன்னோரு ஆபத்தாக நாம் இந்த ‘மள்ளர் அரசியலில்” காண்பது, இவர்கள் தம்மை மேலுயர்த்திக் கொள்வது என்பது மட்டுமல்ல, பிற தலித் சாதிகளைத் தங்களுக்குக் கீழானவர்களாகவும், தீண்டத் தகாதவர்களாகவும் கூடக் கருதும் நிலை உள்ளது, ஆக, இந்து மதத்தின் சாதி, வருண முறையை இவர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை வந்து விடுகிறது. இந்ந்நூலாசிரியரின் முன்னோடியான குருசாமி சித்தர் மள்ளர்களை (அதாவது பட்டியலில் பள்ளர்கள் எனச் சுட்டபடுவோர்) பட்டியல் சாதியிலிருந்து (SC) நீக்க வேண்டுமெனச் சொல்லி வருபவர் என்பது குறிபிடத் தக்கது. அரசியல்களத்தில் இவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் டாக்டர் கிருஷ்ணசாமி, அருந்ததியர்க்கு உள் ஒதுக்கீடு அளித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளதும், இட ஒதுக்கீடே வேண்டாம் எனச் சொல்லிக் கொண்டிருப்பதும் கவனத்திற்குரியது.
இந்த நூல் இதுகாறும் ஆதிக்கம் செய்தவர்களை மட்டுமின்றி. இதுகாறும் சாதி முறையால் கொடூரமாக வஞ்சிக்கபட்ட சாதிகளையும் இழிவு செய்யத் தயங்கவில்லை. சில எடுத்துக்காட்டுகள்:
“…அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிலர் தங்களது பொட்டுக்கட்டிச் சாதியான சின்ன மேளம் என்னும் தெலுங்குச் சாதியினை ‘இசை வேளாளர்’ எனவும் இட்டுக்கட்டி எழுதி மகிழ்கின்றனர்..” (பக் 91)
“பறையர் வரம்பு மீறிப் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்..” (பக்.219)
மறுபடியும் முன்னது நூலாசிரியரின் கருத்தாகவும் பின்னது உடன்பாட்டுடன் கூடிய மேற்கோளாகவும் நூலில் இடம்பெறுகிறது.
இதை எல்லாம் என்ன சொல்வது?
காலங்காலமாகத் தேவதாசியர்களாக ஆதிக்க சாதியினரின் பாலியல் சுரண்டலுக்கு ஆட்பட்ட கோவில் பணியாளர்களான இசை வேளாளர்களையும் மாடு தின்னும் புலைய உனக்கு மார்கழித் திருநாளா என ஏசி ஒதுக்கபட்ட மக்களையும் இப்படிச்சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது? நாங்கள் பள்ளர்கள் அல்ல மள்ளர்கள் எனப் பெருமிதத்துடன் சொல்வதை நாம் ஏற்கிறோம். “பொட்டுக்கட்டிச் சாதியினர்” தம்மை ஏன் இசை வேளாளர் எனக் கூறிக் கொள்ளக் கூடாது? இசையால் எப்படி வேளாண்மை செய்ய முடியும் என்று கிண்டல் வேறு, தி.மு.க தலைவர் கருணாநிதியை “வந்தேறி வடுகராக”ச் சித்திரிக்கும் கொடு அரசியலின் ஓரங்கம் இது என்பதை நாம் கவனிக்கத் தவறலாகாது.
இப்படியானவற்றைதான் அடையாள அரசியலில் இன்னொரு விரும்பத் தகாத பக்கம் என்கிறோம். ஆனானப்பட்ட அறிஞர் அயோத்திதாசப் பண்டிதரே இதற்கு விதி விலக்காக இல்லையே. நமது சாதி முறையில் பறையர்களுக்குக் கீழாக அருந்ததியர் உள்ள நிலையை ஏற்றதோடு பறையர் அருந்ததியர் மீது கடைபிடிக்கும் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தாரே.
இதைவிட இந்த நூலின் மிக ஆபத்தான அரசியல் தமிழ்நாட்டு மக்களை தமிழ்ச் சாதிகள் எனவும் வந்தேறிச் சாதிகள் எனவும் பிளவு படுத்த முயல்வதுதான்”. வந்தேறி வடுகர்” என்பதாகப் பல நூற்றாண்டுகளாக நம்மோடு கலந்து போன நாயக்கர், அருந்ததியர் முதலான சாதியினரை எதிரிகளாக நிறுத்தும் தமிழ்ப் பாசிசத்திற்கும் இந்நூல் துணை போகிறது. தந்தைபெரியாரை மட்டுமல்ல, கலைஞர் கருணாநிதியை, வை.கோவை, பேராசிரியை சரஸ்வதியை எல்லாம் வந்தேறி வடுகர் என இவர்கள் எதிரிகளாக நிறுத்துவது குறிப்பிடத்தக்கது. இன்நூலை விதந்து முன்னுரை எழுதியுள்ள பெங்களூரு குணா தமிழக அருந்ததியர்க்கு இட ஒதுக்கீடே அளிக்கக் கூடாது எனவும், “மராட்டியராம் அம்பேத்கரை” தலித் மக்கள் வழிகாட்டியாக ஏற்கக் கூடாது எனவும் எழுதியவர்.
நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கு முன்னர் இங்கே சாதிக் கொடுமை இல்லை, பாலுந் தேனும் பெருகி ஓடிற்று என்கிற கருத்து இந்நூலின் ஏகப்பட்ட முன்னுரைகளிலிருந்து நூல் முழுக்க விரவிக் கிடக்கிறது. இன்றைய தமிழகத்தின் எல்லாப் பிரச்சினைகளும் ‘வந்தேறி வடுகர்’ ஆட்சியும் திராவிட இயக்கமுந்தான் காரணம் என்கிற கருத்து ஆபத்தானது மட்டுமல்ல மகா அபத்தமானதும் கூட. சுந்தர பாண்டியன் கல்வெட்டிலேயே “பறையர் பள்ளர்” என இழிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை நான் பல ஆண்டுகட்கு முன்பே ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளேன் (பார்க்க: எனது ‘சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்’).
இபோதும் இங்கே நாயக்கர்/ நாயுடு முதலானோரே பொருளாதார ரீதியில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதற்கும் பெரிய ஆதாரங்கள் இல்லை. தமிழகத் தொழில் முதலாளிகளில் முதல் 15 இடங்களில் எட்டு இடங்கள் பார்ப்பனர் கைவசம் உள்ளன, செட்டியார்களிடம் நான்கு இருக்கின்றன. ராம்கோ மற்ரும் லட்சுமி மில்ஸ் என இரு முதலாளியர் மட்டுமே இவர்கள் குறிப்பிடும் ‘தெலுங்கர்கள்’.
வரலாறு இப்படி இருக்க சாதிக் கொடுமைக்குக் காரணமான நமது வருணாசிரமத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும், ராஜராஜ சோழர்களையும் அவர்களது கொடூரமான நில உடைமை முறையையும், தேவதாசிக் கொடுமையையும் “தமிழர் காணியாட்சி” எனவும் தமிழ் மாண்பு எனவும் போற்ற முற்படுவது வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சி அல்ல. வரலாற்ரைப் பின்னுக்குத் தள்ளும் செயல்.
இறுதியாக ஒன்று. இந்நூலின் ஆய்வு முறை பல அபத்தங்களையும் தவறுகளையும் உள்ளடக்கியுள்ளது. வரலாற்றறிஞர்களும் புலமையாளர்களும் இதை ஏற்பதற்கு வாய்ப்பே கிடையாது. இவர் முன்வைக்கும் எடுகோளும் கூட முற்றிலும் இவரது பங்களிப்பு அல்ல. முன்னதாக தேவ ஆசீர்வாதம், குருசாமி சித்தர் முதலானோர் கூறியவற்றிலிருந்து பெரிதாக இவரொன்றும் சொல்லிவிடவில்லை.
இவரது ஆய்வு முறைக்கு ஒரே ஒரு சான்று: முதலில் இவர் ‘வேளாளர்’ என்பது பள்ளர்கள்/ மள்ளர்களையே குறிக்கிறது என ஐயத்திற்கிடமற்ற  சான்றுகள் இன்றி வைத்துக் கொள்கிறார். பின்னர், “சேர, சோழ, பாண்டிய அரசர் வேளாள மரபில் தோன்றியவரே” என வி.கனகசபைப் பிள்ளை, ந.சி.கந்தசாமிப் பிள்ளை, கா.அப்பாத்துரை ஆகியோர் கூற்றுக்களை மேற்கோள் காட்டி:, ஆக மள்ளர்களே மூவேந்தர்கள் என ‘நிறுவுகிறார்’. முதலிம் மேற்குறிப்பிட்ட மூவரின் கூற்றுக்களுமே ஆய்வுலகு ஏற்றுக் கொண்ட நிறுவப்பட்ட உண்மைகள் அல்ல. அப்படியே வைத்துக் கொண்டாலும் கூட மேற்கோளாசிரியர்கள் மூவரும் “மள்ளர்களே வெள்ளாளர்கள்” என்கிற கருத்தை ஏற்பவர்கள் அல்ல, அவர்கள் சொல்லும் வெள்ளாளர் என்போர் இன்று பிள்ளைமார்கள் / முதலியார்கள் என அழைக்கப்படுவோரே. அப்படியிருக்க தனது முடிவுகளுக்கு இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொள்வதெப்படி?
இப்படி நிறையச் சொல்லலாம்,
நாங்கள் ஆண்ட பரம்பரையினர். மூவேந்தர் வழி வந்தோர் என யாரும் சொல்லிக் கொள்லலாம். அடையாள உறுதியாக்கத்தின் தமிழ் வடிவம் என நாமும் இதை வரவேற்கலாம். ஆனால் இந்நூல் அதையும் தாண்டிச் செய்யும் முயற்சிகள் இவர்கள் சொல்லிக் கொள்வதைப்போல “தமிழ்ச் சாதிகளையும்” கூட ஒன்றிணைக்கப் போவதில்லை. ஏற்கனவே குறைந்த பட்சம் இரு “தமிழ்ச் சாதிகள்” இந்நூலின் தடையை வரவேற்றுள்ளன.
தென்மாவட்டங்களில் இம்மக்கள் மத்தியில் நின்று ஆதிக்க சாதிக் கொடுமைகளை எதிர்த்து வரும் ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ நிறுவனர் தோழர் பூ.சந்திர போசு அவர்கள் இந்த மள்ளர் அரசியலை ஏற்பதில்லை. நேற்று நான் அவருடன் பேசிய போதும், “இந்தப் புத்தகத்தின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் புத்தகத்தைத் தடை செய்தது தவறு” என்றுதான் குறிப்பிட்டார்.
நான் இக்கட்டுரையின் முதற் பகுதியில் சொல்லியிருந்தது போல ஆதிக்க சாதியினர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு “வரலாற்று உண்மைகளை” உருவாக்கிக் கொண்டபோதெல்லாம் சும்மா இருந்துவிட்டு அடித்தளச் சாதியினர் இதை செய்யும்போது ஏன் இந்தத் தடை? தேசத் துரோகச் சட்டம் எப்படி இதற்குப் பொருந்தும்?
பூலித் தேவனின் படைத் தளபதியாக அறியப்படும் ஒண்டி வீரன் எனும் அருந்ததியரை, அவர் வெறும் தளபதி அல்ல மன்னர் என எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதினார், அருந்ததியர்கள் இன்று அவரை மன்னராக முன் நிறுத்துகின்றனர். பூலித் தேவனுக்கு விழா எடுக்கும் நடராசன் (சசிகலா) இப்படிச் சொல்வதற்கெதிராக ‘தமிழக அரசியல்” பத்திரிக்கையில் இரண்டு பக்கம் பேட்டி கொடுத்தார்.  பூலித் தேவனுக்கு ஒரு தேவர் அடையாளத்துடன் விழா எடுப்பது அவர் உரிமை. ஆனால் ஒண்டி வீரனை மன்னனாக முன் நிறுத்தாதீர்கள் எனச் சொல்வது என்ன நியாயம்? நெற்கட்டுச் சேவலில் இவ்வாறு ஒண்டி வீரனை மன்னராக முன் வைத்த நினைவுச் சின்னம் ஒன்று பின்னர் அகற்றப்பட்டது. நடராசன் தமிழ்த் தேசியர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத் தக்கது,
ஒண்டி வீரன் நினைவுச் சின்னம் அகற்றப்பட்டது, இம்மானுவேல் சேகரனுக்குக் குரு பூஜை நடத்தும் முயற்சியில் ஆறு பேர் பலியானது ஆகியவற்றுன் தொடர்ச்சியாகவே இந்நூலின் மீதான தடையையும், செந்தில் மள்ளர் மற்றும் அவரது குடும்பத்தார் துன்புறுத்தப்படுவதையும் பார்க்க வேண்டியுள்ளது.
அரசின் இந்தத் தடையைக் கண்டிக்கும் அதே நேரத்தில், இந்தப் புத்தகத்தின் அரசியல் மிகவும் ஆபத்தானது என்பதைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை.

6 கருத்துகள்:

  1. நாகர்

    வட இந்தியாவில் நாக வம்சங்கள்

    ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். நாகர்களுக்கு உயர் அந்தஸ்து இருந்தது மற்றும் இந்திரனாகவும் முடியும். பல நாக வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டன. சிசுநாகா வம்சம் (கிமு 413 முதல் 345) மற்றும் நந்தா வம்சம் (கிமு 345 முதல் 322 வரை) என்பவை வட இந்தியாவை ஆண்ட கடைசி நாக வம்சங்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினர். நாகர்கள் தெற்கு ராஜ்யங்களுக்கு அடிமை வீரர்களாக விற்கப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டிலிருந்து நாகர்கள் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டது அவர்களுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கலாம்.

    பௌத்த நாகர்கள்

    புத்த நாகர்கள் நாகர்கள் இக்ஷ்வாகு வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். காசியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி மன்னர் பிரசன்னஜித் புத்த மதத்திற்கு மாறி புத்த பகவானின் சீடரானார். இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் ஆரிய நடைமுறைகளுக்கு எதிராக கலகம் செய்து தங்களை புத்த மதத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

    ஆரியர்களின் எதிர் தாக்குதல்

    புஷ்யமித்ரா சுங்கர் (கிமு 185 முதல் கிமு 149 வரை) என்ற ஒரு மௌரிய பேரரசின் பிராமண சேனாபதி மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் பிருஹத்ரத மௌரியரைக் கொன்றார். புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்ரா சுங்கர் புத்தமதத்தவர்களைத் துன்புறுத்தினார், அவர்களில் பெரும்பாலோர் நாகர்கள் ஆயிருந்தார்கள். புஷ்யமித்ர சுங்கர் புத்த நூல்களை எரித்தார் மற்றும் புத்த மடங்களை இடித்தார்இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் சீரழிக்கப்பட்டனர்.

    வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை இந்து மதத்திற்கு மாற்றுதல்

    பிராமணர்கள் சித்தியன் மற்றும் ஹூணர் போன்ற புதிய வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்கள். பிற்காலத்தில் ஜாட் குலங்களும் ராஜபுத்திரர்களும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். ஈராக்கைச் சேர்ந்த மொஹ்யால் பிராமணர்கள் முதலில் துருக்கிய மக்களாகத் தோன்றினாலும் இப்போது பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
    வட இந்தியாவில் நாகர்கள் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். நாகர்கள் தென்னிந்தியாவிற்கு பெருமளவில் குடியேறுவதற்கு நாகர்களைத் துன்புறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். கிமு 150 இல் சித்தியன்-சாகர் படையெடுப்பு மற்றொரு காரணமாகும்.

    பத்மாவதியின் நாகர்கள் (கி.பி. 170 முதல் கி.பி. 350 வரை)

    மத்திய இந்தியாவின் இந்து வம்ச நாகர்கள், குஷானரின் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் எழுச்சியடைந்தனர். விதிஷாவைச் சேர்ந்த நாகர்கள் தங்கள் ஆட்சியை மதுராபுரி வரை நீட்டித்தனர். அவர்கள் சாக ஆட்சியாளர்களின் சமகாலத்தவர்கள். இறுதியில் அவர்கள் கி.பி 350 ல் குப்த சாம்ராஜ்யத்தால் அடிபணிய வைக்கப்பட்டனர்.

    பதிலளிநீக்கு
  2. நாகர்

    இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

    இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

    சேதி இராச்சியம்

    சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

    கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

    காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

    கள்வர் கோமான் புல்லி

    ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

    களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

    கள்ளர்

    இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து கள்ளர் வந்ததாக பூவிந்திர புராணம் மற்றும் கள்ள கேசரி புராணம் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக கள்ளர் கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வேளாளர்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) கங்கை நதி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த நாக பழங்குடியினர். அவர்கள் இந்திரன் மற்றும் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    இந்திர குலம்

    இந்திரன் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவுடன் சட்டவிரோத உறவு கொண்டிருந்தார். அகல்யா இந்திரனுக்கு மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார், அவர்கள் முறையே கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற பெயர்களைப் பெற்றனர். தேவன் அல்லது இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். (திரு. எஃப். எஸ். முல்லேய்)


    ஆனால் தாய்லாந்து இராமாயணம் ராமாகியனின் கூற்றுப்படி, இந்திரன் மூலம் அஹல்யாவுக்குப் பிறந்த குழந்தை பாலி மற்றும் சூர்யனின் மூலம் பிறந்த குழந்தை சுக்ரீவன் என்பவர்கள் ஆவர்.

    கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்

    கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் மெதுவாக வெள்ளாளர்களாக மாறினர். இவ்வாறு வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் அனைவரும் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களே.

    கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய காரணம் இதுதான். ஆலா என்றால் நாகம். தளவாலா நாடு என்றால் நாக நாட்டின் தலைமை என்று பொருள் கொள்ளலாம். கள்ளர்கள் நாக பழக்கவழக்கமான பலகணவருடைமையை பின்பற்றினர்.

    கரையர்

    மட்டக்களப்பு மகான்மியம், கரையர் இலங்கையின் செழிப்பால் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு இடம்பெயரத் தொடங்கினார் என்று கூறுகிறது. கரையர் கவுரவர் மற்றும் பரதரிடமிருந்து வந்தவர் என்று தமது வம்சாவளியைக் கோருகிறார்கள். கி.மு. 300 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது சங்க காலத்தில் கரையர் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. நாகர்

    சங்க இலக்கியத்தில் நாகர்கள்

    சங்க இலக்கியம் மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர், பரதவர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு குடியேறிய பழமையான நாகர்கள் என்று குறிப்பிடுகிறது.

    பரதவர்

    பரதவர் தங்களை பர்வத ராஜகுலம் என்றும் பரதகுல க்ஷத்திரியர் என்றும் அழைக்கின்றனர். கங்கைப் பகுதியில் வேதகால குலங்களில் பர்வத குலமும் ஒன்று. கிமு ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு மற்றும் கங்கை பகுதிகளில் வசித்திருந்த பர்வத குலம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரதராஜா என்பது கி.பி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பலூசிஸ்தானை ஆண்ட ஒரு ஈரானிய வம்சமாகும். பலூசிஸ்தானில் பிராகுய் என்று அழைக்கப்படும் வடக்கு திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் பரதவர் தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் அவர்கள் சங்க கால தமிழகத்தில் தோன்றினர். பாண்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தனர் ஆனால் பாண்டியர்கள் அவர்களை தோற்கடித்து அடக்குவதில் வெற்றி பெற்றனர். கிபி 210 இல் இரண்டாம் நெடுஞ்செழியன் வரி செலுத்த மறுத்த பரதவரை தோற்கடித்தார்.

    இலங்கையின் அசல் மக்கள்.

    இலங்கையின் பூர்வீக மக்கள் இயக்கர் ஆவர். இயக்கர் திராவிட வில்லவர்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்ட ஒரு சிறிய இனத்தினர் ஆவர். ஆனால் அவர்கள் அசுர-திராவிட மக்களுடன் கலந்தார்கள், மேலும் அவர்கள் தமிழ் பேசினார்கள். இலங்கையின் பிற குடியிருப்பாளர்கள் திராவிடர்கள்-அசுர மக்கள். இந்த தீவு வில்லவர் வம்சங்களின் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின் செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அகஸ்திய முனிவர் தமிழ்நாட்டில் உள்ள அகஸ்திய மலையில் தங்கியிருந்தார். முனிவர் அகஸ்தியர் இயக்கர் மன்னர் இராவணனின் சிற்றப்பா ஆவார்.

    தென்கிழக்கு இலங்கையில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா என்ற இடம் தெற்கு மத்திய பகுதியில் உள்ளது, அதில் இருந்து மதுரா ஓயா (ஆறு) என்று ஒரு ஆறு ஓடத் தொடங்குகிறது. குமரி மற்றும் மதுரா ஆகிய இடங்கள் பிரளயத்தால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இலங்கையின் மிகப்பெரிய நதி மகாவெலி கங்கை என்று அழைக்கப்பட்டது. மகாபலி இந்தியாவின் வில்லவர் மற்றும் பாண மக்களின் மூதாதையர் ஆவார். ஆனால் கங்கை நாகர்கள் வந்தவுடன் அவர்கள் கங்கா என்ற பெயரையும் அதனுடன் சேர்த்துள்ளனர்.

    இலங்கையின் பழைய பெயர் தாம்பபாணி, இது தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியின் பெயரின் மாறுபாடாகும். கிமு 543 இல் சிங்கள இளவரசர் சிங்கபாஹு இலங்கையை ஆக்கிரமித்தபோது இயக்கர் தலைநகரம் தாம்பபாணியில் இருந்தது. இலங்கையை செரன்தீப் என்றும் அழைத்தனர், இது சேரன்தீவின் மாறுபாடாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் சேர மன்னரின் இறையாண்மையைக் குறிக்கிறது . செரன்தீப் என்பது இப்போதும் இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். கிமு 543 இல் முதல் சிங்கள அரசர் விஜய பாகுவின் வருகைக்கு முன்பே, பல நாகர்கள் இயக்கருடன் சேர்ந்து இலங்கையில் வசித்து வந்தனர்.

    நாகத்தீவு

    மூன்றாவது தமிழ் சங்க காலத்தில், இலங்கை நாகநாடு அல்லது நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால நாகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கு எதிராக இயக்கருடன் கைகோர்த்தனர். கங்கை நதிப் படுகையில் தோன்றிய புத்த மத நாகர்களின் நாடு இலங்கை ஆகும்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் சந்ததிகள் மகேந்திரா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    இயக்கர் நாகப் போர்கள்

    பழங்குடி இயக்கர் மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். திமிலர் என்று அழைக்கப்படும் இயக்கர் வம்ச மீனவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக கி.பி 12 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் திமிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    பல இயக்கர்கள் பண்டைய காலத்தில் கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். ஈழ இயக்கர் வில்லவர் குலங்களால் நிறுவப்பட்ட சேர வம்சத்தின் துணை குலமாக ஆனார்கள். காக்கநாடு, குமாரநல்லூர் மற்றும் புனலூர் பகுதிகளை இயக்கர்-யக்கர் பிரபுகள் ஆண்டனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் ஈழ இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  4. நாகர்

    நாகர்களின் எழுச்சி

    12 ஆம் நூற்றாண்டு வரை துளுநாட்டில் அஹிச்சத்திரம் நாகர்கள், அதாவது நாயர்கள் தங்களுடைய துளு மன்னர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர். இதேபோல தமிழ்நாட்டில் வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் ஆகிய கங்கை நாகர்கள் சோழர் மற்றும் பாண்டிய அரசர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர்.

    ஆனால் 12 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வருகை நாகர்களை கணிசமாக மாற்றியது. வட இந்தியாவில் நாக வேர்கள் கொண்ட பலர் துருக்கிய சுல்தானின் படைகளில் சேர்ந்தனர்.

    துளு படையெடுப்பு

    கி.பி 1102 இல் கேரளாவின் இந்து வில்லவர் மன்னர்கள் பாணப்பெருமாள் என்ற துளு புத்த இளவரசரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். கேரளாவில் ஒரு கடல் தளம், துறைமுகம் மற்றும் ஒரு குடியேற்றத்தை நிறுவ விரும்பிய அரேபியர்களால் பாணப்பெருமாள் ஆதரிக்கப்பட்டார். உடனடி துளு படையெடுப்பை எதிர்கொண்ட, கொடுங்கலூரில் ஆட்சி செய்து வந்த சேர வம்சம் அதன் தலைநகரை கி.பி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றியது. கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தின் அரசர் கவி ஆலுப்பேந்திராவின் சகோதரர் பாணப்பெருமாள் 350000 எண்ணமுள்ள வலுவான நாயர் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்தார். உண்மையில் இது துளுநாட்டிலிருந்து கேரளாவிற்கு நாயர்களின் ஒரு பெரிய இடம்பெயர்வு ஆகும்.

    பாணப்பெருமாள் மலபார் மீது படையெடுத்து, வட கேரளாவை போரில்லாமல் ஆக்கிரமித்தார்.

    சேர வம்சம் சக்திவாய்ந்த கடற்படையுள்ள அராபியர்களுடனும் மற்றும் அவர்களின் தோழர்களான துளு-நேபாள நாகர்களுடனும் போர் செய்ய விரும்பவில்லை.

    பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தனது தலைநகரை நிறுவினார். அதன்பிறகு அவர் கி.பி 1102 இல் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாள் மற்றும் அவரது மருமகன்கள் சிலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பல நாயன்மார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர் மற்றும் மலபாரில் ஒரு தாய்வழி முஸ்லீம் சமூகம் நிறுவப்பட்டது. கி.பி 1156 இல் மலபாரைப் பிரித்து தனது மகன் உதயவர்மன் கோலத்திரி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த அவரது மூன்று மருமகன்களுக்கும் கொடுத்துவிட்டு பாணப்பெருமாள் அரேபியாவுக்குச் சென்றார். இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரேபிய ஆதரவுடன் ஒரு பெரிய நாயர் மக்கள் கேரளாவுக்குள் நுழைந்தனர். பதினாறாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.

    நாயர்கள்

    நாயர்கள் அஹிச்சத்திரம் நாகர்கள் ஆவர், அவர்கள் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பலகணவருடைமை போன்ற பல நாக பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். நாயர்களுக்கு சர்ப்பக்காவு என்று அழைக்கப்படும் ஏராளமான பாம்பு கோவில்கள் இருந்தன, அங்கு அவர்கள் உயிருள்ள பாம்புகளை வழிபட்டனர்.
    நாயர்கள் துளுநாட்டின் பண்ட் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் ஆனால் இன ரீதியாக மற்ற மலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லர். கேரளாவில் அவர்கள் வேளாளர் மற்றும் பணிக்கர் போன்ற தமிழ் குலங்களுடன் கலந்தனர்.

    நாயர் பிரபுக்கள் மாடம்பி (மாட + நம்பி) என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் இமயமலையில் அஹிச்சத்ரா மாடஸ்தானா (உயர்ந்த இடம்) அவர்கள் பிறந்த இடம் ஆதலால்.

    பதிலளிநீக்கு
  5. நாகர்

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல், மாலிக் காஃபூர் தலைமையிலான இரண்டு லட்சம் வீரர்களுடன் டெல்லியின் படைகள் பாண்டிய இராச்சியத்தைத் தாக்கியது. திருச்செங்கோட்டைச் சுற்றி பாண்டியப் படைகள் நிலைகொண்டிருந்த சாணாரப் பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகியவை உள்ளன. ஐம்பதாயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை மட்டுமே கொண்ட பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்வரும் காலகட்டங்களில், டெல்லியின் படைகள் வில்லவர்களை வேட்டையாடி அவர்களை கொன்று குவித்தன. பல வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர், மற்றவர்கள் இலங்கைக்குச் சென்றனர்.

    டெல்லி சுல்தானகத்துடன் நாகர்களின் கூட்டணி

    களப்பிரர் பரம்பரை கொண்ட பல நாகர்கள் அந்த காலத்தில் இஸ்லாமிய மதத்தவராக மாற்றப்பட்டனர். இதன் மூலம் வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்கள் சோழர் குல மற்றும் பாண்டிய குல நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது.

    கி.பி 1310 இல் பாண்டிய வம்சம் மாலிக் காஃபூரால் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாகர்கள், உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டனர். சூத்திரர்களான நாகர் பூர்வீக வில்லவர் மக்களை விடவும் உயர்த்தப்பட்டனர். அதுவரை கேரளா மற்றும் தமிழ்நாடு வில்லவர் குலங்களால் ஆளப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பெரும்பாலான நாகர்கள் டெல்லியில் இருந்து வந்த படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர் மற்றும் பல நாகர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் ஆட்சி அமைத்த பிறகு பல கள்ளர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கள்ளர்கள் விருத்தசேதனம் போன்ற சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்தனர்.

    மதுரை சுல்தானகம் (கி.பி 1335 முதல் கி.பி 1377 வரை)

    மதுரை சுல்தானகம் 1335 இல் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா-நம்பூதிரி வம்சங்களுக்கு வழங்கப்பட்டது. இது போரில்லாமல் மீண்டும் கேரளா முழுவதும் நாயர்களுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் நாயர்கள் அரேபியர்கள், டெல்லி சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகங்களின் கூட்டாளிகளாக மாறி, எந்தப் போரிலும் ஈடுபடாமல் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.

    தமிழகத்தில் கள்ளர்களும் வெள்ளாளர்களும் மதுரை சுல்தானகத்தின் கூட்டாளிகளாக இணைந்தனர் மற்றும் பலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகம்படியார் மற்றும் வெள்ளாளர் ஆகியோர் வில்லவர் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பரசுராமன்

    நம்பூதிரிகள் பரசுராமன் தனது கோடரியை வீசி கேரளாவை கடலில் இருந்து உருவாக்கி தங்களுக்கு கொடுத்ததாக கூறினார்கள். முந்தைய தமிழ் சேர வம்ச காலத்தில் பரசுராமனைப்பற்றி புத்தகங்கள் அல்லது கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. இது வில்லவர் மக்களின் திராவிட நிலங்களைக் கோருவதற்கான நம்பூதிரிகளின் சூழ்ச்சி ஆகும். திரேதா யுகத்தில் கிமு 2,163,102 முதல் கிமு 867,102 வரை வாழ்ந்த பரசுராமன் ஹைஹயா ராஜ்யத்திற்கு தெற்கேயோ அல்லது நர்மதா நதிக்கு தெற்கேயோ செல்லவில்லை.

    உண்மையில் கேரளா நம்பூதிரிகளுக்கு மாலிக் காஃபூரால்தான் வழங்கப்பட்டது. கி.பி 1120 இல் துளு-நேபாள பிராமணர்களை அரேபியர்கள் கேரளாவிற்குள் அழைத்து வந்தனர். கி.பி 1310 இல் பாண்டிய வம்சத்தை தோற்கடித்த மாலிக் காஃபூர் கேரளாவை நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களின் துளு-நேபாள வம்சங்களின் ஆட்சிக்கு வழங்கினார். இது கேரளாவில் அஹிச்சத்திரம் நாகர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.


    நான்கு துளு-நேபாள அரசுகள் (1335)

    நான்கு துளு சாமந்த ராஜ்யங்கள் நிறுவப்பட்டன, நம்பூதிரிகளுக்கு இளவரசிகளுடன் சம்பந்தம் செய்வதற்கான உரிமை இருந்தது. இவ்வாறு இந்த வம்சங்கள் துளு சாமந்தா+நம்பூதிரி வம்சங்கள் ஆகின்றன.

    1. கோலத்திரி வம்சம்
    2. சாமுத்திரி வம்சம்
    3. கொச்சி வம்சம்
    4. ஆற்றிங்கல் ராணி வம்சம்

    சிறிய நாயர் ராஜ்ஜியங்கள்

    வள்ளுவநாடு, பாலக்காடு மற்றும் தெக்கும்கூர் அரசர்கள் நாயர்கள் ஆவர்.

    வள்ளுவ கோனாத்திரி

    வள்ளுவ கோனாத்திரி மூப்பில் நாயர் வள்ளுவநாடு மன்னர். ஒவ்வொரு 12 வருடங்களிலும் மாமாங்கம் திருவிழாவின் போது வள்ளுவநாடு நாயர்கள் பட்டாம்பி அருகே உள்ள உற்சவபரம்பில் சாமுத்திரி மன்னரைக் கொல்ல முயன்றனர்.

    தரூர் ஸ்வரூபம்

    தரூர் ஸ்வரூபம் சேகரி வர்மா என்றழைக்கப்படும் நாயர் மன்னர்களால் ஆளப்பட்ட பாலக்காடு இராச்சியம் ஆகும். கி.பி 1335 -க்கு முன்பு அவர்கள் மலப்புறம் மாவட்டத்தின் பொன்னானி தாலுக்கில் உள்ள ஆதவநாட்டில் இருந்தனர்.

    பதிலளிநீக்கு
  6. நாகர்

    சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்

    கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளித்துவ நாகர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களை பாட்டாளி வர்க்கமாக அறிவித்தனர். இந்த உத்தி மூலமே கோலத்திரி மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் கேரளாவின் முதல்வரானார். கேரளாவின் மக்கள் தொகையில் நாயர்கள் சுமார் 14 சதவிகிதம் உள்ளனர். திருவனந்தபுரம் கொல்லம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் அவர்களின் கோட்டைகள். ஆனால், திருவனந்தபுரத்தில் நாடார்கள் நாயர்களை விட அதிகமாக உள்ளனர். கண்ணூரில் தீயர்களும், கொல்லத்தில் ஈழவரும் மற்றும் கோழிக்கோட்டில் முஸ்லிம்களும் நாயர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு, பல பணக்கார நாயர்கள் வட மைய இந்தி பேசும் மக்களாக மாறினர். அவர்கள் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த லாபியைக் கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தம் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக மாறுகிறார்கள்.

    தற்போது பல நாயர்கள் குறிப்பாக மேனன்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கிறிஸ்தவ நாயர் சுவிசேஷகர்கள், ரெவரெண்ட் போதகர்கள், ஆயர்கள் தோன்றத் தொடங்கினர். இப்போது பல நாயர் கிறிஸ்தவ பாதிரியார்கள் துபாய், கத்தார், இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த தேவாலயங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் நாகர்கள் திராவிடர்களாக வேடமிடுகிறார்கள், உண்மையான திராவிடர்களாகிய வில்லவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (10%) வெள்ளாளர் (3%) முதலியார் (2%) ஆகியோர் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்தவர்கள். பெரும்பாலான முக்கிய துறைகளுள்ள அமைச்சர்களும் நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திராவிட ஆதரவு கட்சிகள் உண்மையில் நாகர் மேம்பாட்டு கட்சிகளாகும்.


    நாக மேம்பாட்டு கட்சிகள்

    திராவிடர்களை ஊக்குவிப்பதாகக் கூறும் பல திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால் அனைத்து திராவிட கட்சிகளும் மாறுவேடத்தில் இருக்கும் நாக மேம்பாட்டு கட்சிகள் ஆகும். அவர்கள் உண்மையில் கங்கை பகுதியில் இருந்து குடியேறிய நாகர்களைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.

    ______________________________________________

    பதிலளிநீக்கு