தமிழக சட்டபேரவை, கடந்த 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பேரவை மரபு, மாண்பு, சட்டத்துக்கு முரணாக செயல் படுகிறது. பேரவை தலைவர் பாரம் பரிய மிக்க சட்ட பேரவையின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிறார். சட்டபேரவை கூட்டம் தொடங்கிய நாளில் இருந்து எதிர் கட்சிகள் கொடுக்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் எடுத்து கொள்வதில்லை. மாறாக புகழ் பாடுபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு விளைவிக்க கூடிய ஊறு.
காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க் கட்சி தலைவர்களுக்கு வாய்ப்பு தரப்பட வில்லை. சட்டமன்றம் அதிமுகவின் ஆட்சி மன்ற குழு கூட்டமாக மாறியுள்ளது. 7 கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க முடிவதில்லை. இதை சுட்டி காட்டும் வகையிலும், சட்டப் பேரவையில் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப் படும். மேலும், கிராமம் தோறும் சென்று ஜனநாயகத்தை மீட்டெடுப்பது குறித்து மக்களிடம் விளக்கப்படும்.
1989ம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டம் விதிகளின் படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு வேலை மற்றும் போதிய நிவாரணங்கள் வழங்கப் பட வேண்டும் என்பது விதி. ஆனால், 2011க்கு பிறகு சாதி கலவரத் தால் இறந்தவர்களுக்கு எந்த நிதியும், அரசு வேலையும் வழங்கப்படவில்லை. சட்டப் பேரவை நடக்கும் நேரத்தில் சிபி சி ஐடி போலீசார் நடத்தும் விசாரணை வேகத்தை காட்டும். அதன் பிறகு வேகம் குறைந்து விடும். டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலையில் அரசியல் பின்னணி உள்ளது. தற்கொலை விஞ்ஞானரீதியில் நடந்துள்ளது. தற்கொலையில் கூலிப்படை பங்கு உள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. எனவே, நியாயமான விசாரணை நடைபெற உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக