ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 12 அக்டோபர், 2016

தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றம் குறித்து மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் கருத்து ..!!!

 (19:05:2014 )ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் பட்டியலில் இருந்து விடுபடுவது குறித்து டாக்டர்
க.கிருஷ்ணசாமி அவர்கள் விரிவாக பேசி உள்ளார்.
அவர் கூறியதாவது:-
தேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வோரு சமுதாயமும் தங்களுடைய அடையாளத்திற்க்கா போராடி வருகின்றனர். அது போலவே காலாடி, பண்ணாடி, வாதிரியான், தேவேந்திர குலத்தான், பள்ளன் போன்ற பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கக் கூடிய ஒரே சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று இந்த சமூக மக்கள் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக போராடியும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்.
அது எந்த விதத்திலும் தவறு இல்லை. இதை ஒரு அரசாங்கம் ஒரு சின்ன ஒருசொட்டு மையுங்கூட செலவாகாது அதற்க்கு உத்தரவு போடுவதற்க்கு. இன்றைக்கு இருக்கும் திராவிட இயக்கங்களுக்கு மனசு வரவில்லை.
இதனால் வெறுப்புற்ற அச் சமூக மக்கள், திராவிட கட்சிகளின் அரசாங்கமும் , திராவிட இயக்கங்களும் நம்மை இன்னும் பள்ளர்/ மள்ளர் என்று கூப்பிட்டு என்று கூப்பிட்டு சிறுமைப் படுத்தி பார்ப்பதில் தான் அதிமுக , திமுக விரும்புகிறது என்பதை நினைத்து , வெறுப்புற்ற மக்கள் , அப்படியானால் இந்த பாட்டியலில் இருந்தே விடு பட வேண்டும் என்று நினைக்க துவங்கி விட்டனர்.
பட்டியலே வேண்டாம் என்றும் சொல்ல
ஆரம்பித்து விட்டனர். இதில் நியாயம் இருகின்றது.
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் அந்த மக்களுடைய பார்வை இப்போழுது ; இந்த அரசாங்கம் தங்களை ஒரு கெளரவத்தோடு அழைப்பதற்க்கு தயங்குகிற காரணத்தினால் இந்த ஒதுக்கீடு- தாழ்த்தப் பட்ட பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வுகள் தேவேந்திர குல மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.
இட ஒதுக்கிடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த இழிவோடு பட்டியலுக்குள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக தங்களை பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக படித்தவர், படிக்காதவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக