ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 12 அக்டோபர், 2016

தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!....

.1881ல் பரமக்குடியில் தேவேந்திரர் மாநாடு .. அதன்பிறகு பூவைசிய இந்திர குல சங்கம் , தியாகி இம்மானுவேல் சேகரன் வருகை , தேவேந்திரர்கள் எழுச்சி , 1957ல் தியகியார் படுகொலை , இதற்க்கு முன் தேவேந்திர குல வேளாளர் மகா சன சபை , அதன் தலைவர் தேக்கம்பட்டியார் அவர்களின் சமுக அரசியல் ,மதுரையில் ரீகல் திரையரங்கில் அண்ணல் அம்பேத்கார் வருகை , தியாகி இம்மனுவேல்சேகரன் , அண்ணல் சந்திப்பு ...வெண்மணியில் தொடங்கி இன்று பரமக்குடி வரை எத்தனை அடக்குமுறைகள் , படுகொலைகள் , எதிர் தாக்குதல்கள் , சமுகத்தின் களபோராளிகள் படுகொலைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .. அரசியல் அதிகாரம் தான் நமது இறுதி இலக்கு . அதை நோக்கி நாம் நகர்ந்து இருக்கிறோமா ..?... ஆட்சிகள் மாறுகின்றன , காட்சிகள் மாறவில்லை , நமது அவலங்கள் தொடர்கின்றன ... தேவேந்திரர் மற்றும் பிற பட்டியலின மக்களின் பாதுகாவலராக , சமுக உ ரிமை மீட்பு போராளி . டாக்டர் . க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A அவர்களின் வருகைதான் கொடியங்குளத்தில் தொடங்கிய அரசியல் பயணம் இன்று கொம்பனை வரை தொடர்கிறது .. வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தொடர் கட்டுரைகள் வெளியிட இருக்கிறேன் .. வழக்கம் போல உ றவுகளின் ஆதரவு தேவை ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக