ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 12 அக்டோபர், 2016

எமக்கான பிரதிநிதித்துவம் எங்கே ..?.....

தேவேந்திர குல , மற்றும் பட்டியலின மக்களின் அரசியல் அறியாமைதான் பலருக்கு இங்கு அரசியல் மூலதனமா இருக்கு. கன்னட பூர்வீகம் கொண்ட ஜெயலலிதா ஆட்சியில் 8 தமிழ் கவுண்டர்களும், 7 தமிழ் தேவர்களும், 5 தமிழ் வன்னியரும் அமைச்சராய் இருக்க எங்களுக்கான பிரத்திநிதித்துவம் எங்கேன்னு கேக்க வேண்டிய பட்டியல் இனத்தவரை இல்லாத தெலுங்கு ஆதிக்கத்தை எதிர்த்து பேச வைப்பதே இந்த அறியாமைதான். இதே போல் தான் திமுகவும் , மேலே குறிப்பிட்ட சாதி ஆதிக்கங்கள் , அதற்க்கு மேலும் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட திராவிடர் {சின்ன மேளம் }. ஆட்சியிலும் இதே நிலைதான் .... தமிழ் தேசியம் பேசும் சில கும்பல்களின் நிலையம் இதுதான் ... DSP விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து கருத்து சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தேசியம் , சாதி ஆதிக்கத்தை எதிர்க்க தைரியம் இல்லாத தமிழ் தேசியம் , நம்மை திராவிட , வடுக எதிர்ப்பு என்று திசை மாற்றுகிறது... கோகுல்ராஜ் படுகொலையில் இவர்களின் நிலை என்ன ..?... 69% இடஒதுக்கீடு பற்றி வாய் கிழிய பேசும் திராவிட கட்சிகள் , தங்கள் கட்சியில் , ஆட்சியில் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்தினார்களா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக