ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

வியாழன், 6 டிசம்பர், 2012

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைக்கவேண்டும்


 தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைக்கவேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னை ரித்தர்ட்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் மெழுகுவர்த்தி சுடர் ஏந்தி மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மாநில துணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் ஏழுமலை, புதிய தமிழகம் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சட்டமன்றத்தில் தீர்மானம்
லண்டனில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மன்ற கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை உலக நாடுகள் கொண்டுவரவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஏதுவாக இந்திய அரசு நடந்துகொள்ளவேண்டும் என்றும், இது குறித்து உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மத்தியில் ஒரு கருத்துப்பிரசாரத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உலக தமிழ் அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.தமிழ்நாடு சட்டமன்றத்தின் வைர விழா வருகிற 30–ந் தேதி நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச சுதந்திரமான விசாரணை ஆணையத்தை அமைக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழ் மக்கள் மத்தியில் இது மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்லப்படும்.இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக