வியாழன், 13 டிசம்பர், 2012
சமுகத் தலைவர் ஜான்பாண்டியன்
இந்த பொது விசாரணையில் தென் மண்டல அய்.ஜி. ராஜேஷ்தாசைப் பற்றி நான் இங்கு நீதிபதிகளிடம் கூற வேண்டும். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த போது தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ -வான இராஜமன்னார் என்பவரின் வீட்டைச் சூறையாடி கொள்ளையடித்தவர். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவதாக பெரியகுளத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவும்போது தலித்துகளை அடித்துத் துன்புறுத்தி பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார். முன்றவதாக இவரும் இவரின் துணைவியாரும் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் இவரின் மனைவியைத் திரும்பிப் பார்த்தார் என்பதாகக் கூறி அந்த கான்ஸ்டபிளை நடுரோட்டில் வைத்து அடித்து காயப்படுத்தினார். இதன் காரணமாக அங்குள்ள காவலர்கள் போராட்டம் செய்து பிரச்சனையில் ஈடுபடவே அவரை அங்கிருந்து சென்னைக்கு பணிமாற்றம் செய்தனர். சென்னையிலும் அவர் ஒழுங்காக இல்லை. ஒரு பெண் காவலரிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்பதால் அன்றைய தி.மு.க. அரசால் 4 வருடம் பணிநீக்கம் செய்யப்பட்ட அயோக்கிய அதிகாரிதான் இந்த தென்மண்டல அய்.ஜி. ராஜேஷ்தாஸ். இந்த ஆட்சி வந்தவுடன் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் கலவரத்துக்காக தென்மண்டல அய்.ஜி. –யாகப் பணிமாற்றம் செய்துள்ளார்கள். இவரின் தலைமையில்தான் உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து, இதை சீர்குலைக்க வேண்டும் என்றும், இதனை அரசு விழாவாக அறிவித்து விடக்கூடாது என்றும் துப்பாக்கிச் சூடு பிரயோகம் செய்திருக்கின்றனர். இவர்களுக்கு டைனமைட் பிஸ்டலில் சுட அதிகாரம் அளித்த்து யார்? நான் மருத்துவமனையில் பார்த்த போது யாருக்கும் காலுக்குக் கீழே குண்டு பாயவில்லை. அனைவருக்கும் தலை, மார்பு, நெஞ்சு பகுதியில்தான் குண்டு பாய்ந்திருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக