ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: காவல்துறை அதிகாரிகளை மாற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஆக 24- தமிழக மக்கள் உரிமை கழக ஒருங்கிணைப்பாளர் வக்கீல் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிலர் சென்றபோது கலவரம் ஏற்பட்டது.

அப்போது காவல்துறையினர்  நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது மனித உரிமையை மீறிய செயலாகும். தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சந்தீப்மிட்டல், ராமநாதபுரம் காவல்துறை  சூப்பிரண்டு மகேஸ்வர் காளிராஜ் பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகிய அதிகாரிகள் சட்டம்-ஒழுங்கை முறையாக பராமரிக்காததே இந்த பிரச்சினை பெரிதாக காரணமாக அமைந்தது.

மதுரை உயர்நீதிமன்ற  கிளையின் உத்தரவின் பேரில், சி.பி.அய் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இமானுவேல் சேகரனின் நினைவு தினம் வருகிற 11-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அந்த சமயத்தில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் அங்கு இருந்தால், மீண்டும் பதட்டமான சூழ்நிலை ஏற்படக்கூடும்.

எனவே மேற்கண்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் sep 11

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்


தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்


தேவேந்திர குல வேளாளர் மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன்

தேவேந்திர குல வேளாளர் மக்களின் தலைவரான தியாகி இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.

அடக்கு முறைக்குட்பட்ட சமூகத்தில் உதித்த காரணத்தினால் சிறுவயதிலேயே இன விடுதலை வேள்வியால் வளர்ந்த இவர் இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் மீது, கோபமும், கொந்தளிப்பும் கொண்டார்.. அதன் எதிரொலியாக 1942ம் ஆண்டு தனது தந்தை வேதநாயகத்தோடு விடுதலை வேள்வி வெறியோடும், வெள்ளையனே வெளியேறு போராட்ட களத்தில் குதித்தார்.

இம்மானுவேல் சேகரன் எதிர்காலத்தில் தேசம் திரும்பி பார்க்கும் தலைவராக திருப்பு முனையை ஏற்படுத்தப்போகும் களம் அது என்று அறியவில்லை. இருந்தும் இந்திய தேசத்திற்காக களத்தில் குதித்தவர் 3 மாதம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சோதனைகளை சந்தித்தார். நாட்கள் உருண்டோடின. அடக்குமுறை சமூகத்தின் அவலத்தை அகற்றிட வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வலம் வந்தார். தனது 19வது வயதில் அருப்புக்கோட்டையில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட இரட்டை டம்பளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தமுறையை சமூகத்திலிருந்து அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

1954ம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு ஒன்றினையும் நடத்திய அவர் தனது சமுதாய மக்கள் மத்தியில் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக வலம் வரத்தொடங்கினார். இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், அம்மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியும் பிற சமூகத்தை லேசாக உசுப்பிப் பார்க்க தொடங்கியது.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் ராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான இன்னொரு சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது ராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட்பதைக் காட்டிலும் பெரிதல்லவா! அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்" என்ற அமைப்பைத் தொடங்கினார்.

1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் ஆதிக்க சக்திகளிடமிருந்து தனது சமூகம் வெற்றிபெற கடுமையாக உழைத்து தனது பலத்தை நிரூபித்தார். நாட்கள் உருண்டோட இம்மானுவேல் சேகரனின் வளர்ச்சியும், தேர்தல் மூலம் ஏற்பட்ட பகையும் அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தி தரப்போவதை அவரும் அறியவில்லை, அவரை சார்ந்தவர்களும் அறியவில்லை.

1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறக்கிறார். இடுகாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமெனில் சில தடைகளால் முக்கிய பாதைக்கு எதிர்ப்பு ஏற்படுகிறது. பெருமாள் பீட்டர் என்பவரும், இம்மானுவேல் சேகரனு்ம் கமுதி காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மூதாட்டி உடல் சுமூகமாய் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இதில் இருந்து இமானுவேல் சேகரனுக்கும், எதிர்ப்பு உள்ளூரில் ஏற்படுகிறது. அதன் விளைவாக 5-9-57ல் லாவி என்ற கிராமத்திலுள்ள குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது.

பிரச்சனை உருவாகிறது. பணிக்கர் என்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10.9-57ல் சமாதானக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டம் ஒரு சாரருக்கு எதிராக அமையவே அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வாய்தகராறு ஏற்படுகிறது. அதிகாரிகள் சமரசத்தால் அம்மக்களிடையே உடன்படிக்கையில் அரை மனதோடு கையொழுத்து இடப்படுகிறது. யாரும் எதிர்பாராத கொடுமையாக, எதிர்காலத்தையே புரட்டி போடும்ஒரு சம்பவம் 11ம் தேதி அரங்கேறுகிறது. சமாதான கூட்டத்தினால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இம்மானுவேல் சேகரன் அவரது தந்தையின் நண்பர் வீட்டில் தங்கி விட்டு மாலையில் பரக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்ட விட்டு இரவு 9 மணி அளவில் வீடு நோக்கி திரும்புகிறார்.

அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சராமரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்புகிறது. விஷயம் காட்டு தீ போல பல்வேறு பகுதிகளில் பரவுகிறது.

12-9-1957 அன்று அவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. 33வது இளைஞனின் எழுச்சி பயணம் மர்ம கும்பலால் தடுக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டதால் 13-9-57ல் ராமநாதபுரம் மாவட்டம் சட்டம் ஓழுங்க சீர்குலைந்தது. இருதரப்பும் மோதியதில் 85 பேர் பலியாகினர்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

வரும் செப்டம்பரில் பரமக்குடி படுகொலைக்கு அரசியல் பதிலடி கொடுப்போம்!

கடந்த செப்டம்பர் 11 (2011) அன்று தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளில் பரமக்குடியிலும் மதுரையிலும் ஒன்றுதிரண்ட மக்கள்  மீது துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டது. தியாகி இம்மானுவேலின் நினைவு நாள் அரசியல் எழுச்சி நாளாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து வந்த ஒரு கால கட்டத்தில் தான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதையே காரணம் காட்டி இனி வரும் ஆண்டுகளில் அந்த நாளை அரசியல் முதன்மைத்துவமற்றதாக மாற்றவும் ஒரு கலவர நாளாக ஆக்கவும் அரசு முயலும். இந்த ஆண்டு பலத்த காவல்துறை கெடுபிடி, செக்போஸ்ட்கள், இன்னும் அதிகமான துப்பாக்கிகள் என்று மக்களைப் பீதியூட்டுவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கலாம். இதற்கெல்லாம் முன்னோட்டம் போல 10 நாட்களுக்கு முன் மதுரையில் அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சேகரனின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.
காலம் காலமாக அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் மக்களுக்கு அவ்வப்போது வரலாற்றில் கிடைக்கும் தலைவர்கள் அடிமை விலங்கொடிக்க வந்த விடுதலை மீட்பராக அமைகின்றார்கள். அவர்கள் அத்தலைவர்களைத் தலைமேல் வைத்து கொண்டாடுகின்றார்கள். வரலாறு தோறும் கைவிடப்பட்டவர்களாக உணரும் மக்களுக்கு தம்முடைய எழுச்சிக்கான அடையாளங்களும் குறியீடுகளும் இன்றியமையாததாகின்றது. இப்படித் தான் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக தென் தமிழகத்தில் மிகுதியாகவும் ஏனைய பிற பகுதிகளில் விரவியும் வாழும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எழுச்சிக்கான குறியீடாக உருவாகியுள்ளது. முதுகுளத்தூர் கலவரம் நடந்த நாட்களில் இம்மானுவேல் சேகரன் அந்த வட்டாரத்தில் மட்டும் அறியப்பட்டவராக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்படி அல்ல. தமிழகம் எங்கும் விரவி வாழும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு வரலாற்று நாயகனாக விளங்குகிறார். அவருடைய நினைவு நாளில் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் மக்கள் பரமக்குடி நோக்கிப் பயணிக்கின்றனர்.
அவர்களின் இந்த எழுச்சி தான் சாதிய சமூகத்தால் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கின்றது. அடக்கப்பட்ட மக்களின் எழுச்சியானது அராஜகமாக, அத்துமீறலாக, சட்டத்துக்கு புறம்பானதாக சித்தரிக்கப்படுகின்றது. இந்தக் காழ்ப்புணர்ச்சிதான், வன்முறைகளாகவும் கலவரங்களாகவும் அரசே நடத்தும் தடியடி, துப்பாக்கிச் சூடுகளாகவும் வெளிப்படுகின்றது. அது மட்டுமின்றி, எழுச்சியின் முகமாக வரும் தலைவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதும் தொடர்கின்றது. இந்த ஆண்டில் தான் பசுபதி பாண்டியனும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார் என்பது இங்கே கவனிக்க வேண்டியது.
50 ஆண்டுகளுக்கு முன்பாகவே இம்மானுவேல் சேகரன் போல் ஒரு தலைவரைப் பிரசவித்துக் கொண்ட ஒரு சமூகம் இயல்பாகவே தன்னை அணி திரட்டிக் கொண்டு ஒரு பாய்ச்சலில் முன்னகர்ந்திருக்க வேண்டும்.  ஆனால், வரலாற்றின் கெடுவாய்ப்பாக அது முழுமை அடையவில்லை. இன்னொருபுறம், முரண்பட்ட சமூகங்களில் மற்றொன்றான முக்குலத்தோர் தரப்பு, தம்மை அரசியல் கோரிக்கைக்காக அணி திரட்டி கொள்ளாமல் சாதிப் பெருமைவாதமாக மட்டுமே அணி திரட்டிய நிகழ்ச்சிப் போக்கும், தென் தமிழகத்தில் போதிய தொழில் துறை வளர்ச்சி ஏற்படாததும் ஆதிக்க சாதியின் அடக்குமுறை என்பது இன்னும் பழைய பாணியிலேயே வன்முறையாக வெளிப்படுவதற்குக் காரணிகளாக அமைகின்றன.  இத்தகைய சூழலே தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ’ஆண்ட பரம்பரை’ அரசியல்  கருத்துருவாக்கத்திற்கான அரசியல் வெளியைக் கொடுத்திருக்கின்றது. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் நேரடி வன்முறை கட்டத்தைக் கடந்து நகரும் வட தமிழகத்து அரசியல் வளர்ச்சிப் பாதை இதை நமக்கு உணர்த்துகின்றது.
இந்தப் பின்னணியிலிருந்துதான் நாம் பரமக்குடி படுகொலைக்கான எதிர்வினையைத் திட்டமிட வேண்டும். சாதிய அடக்குமுறைக்கு எதிரான எழுச்சிக்கு பல தடைகளைப் போடுகின்றது இந்தச் சாதிய சமூகம். போதாக்குறைக்கு அதைப் பிரதிநித்துவப்படுத்தும் பார்ப்பனிய அரசு துப்பாக்கிக்களைத் திருப்புகின்றது. எப்போதும் போல, ஆதிக்க சாதி உளவியல்,  இம்மானுமேல் சேகரனை குறிப்பிட்ட ஒரு சாதியின் தலைவராக சுருக்குவதன் மூலம் சாதி ஒழிப்புக்கான போராட்டமாக அது வளர்த்தெடுக்கப்படுவதற்கு முட்டுக் கட்டை போடுகின்றது.
ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக்கான குறியீட்டு நாள்; சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் குருதி சிந்திய நாள்; இதனாலேயே சாதி ஒழிப்புக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாற்றில் இருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு நாள்; சாதி ஒழிப்பைக் கருத்தியலாகக் கொண்ட அத்தனை ஜனநாயக ஆற்றல்களும் போற்றும் நாள் என்று செயல் பூர்வமாக நிறுவ வேண்டும். இதன் ஊடாக, சாதி அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டத்திற்கு புது வேகம் ஊட்ட வேண்டும்.
இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளில் பரமக்குடி நோக்கி மக்கள் அணி திரள்வது சாதி தமிழர்களுக்கு தாங்க முடியாததாக இருக்கின்றது. அப்படி எனில், பரமக்குடியையும் தாண்டி, இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை, பொதுக்கூட்டங்கள் வாயிலாக ஆதிக்க சாதித் திமிருக்கு எதிரான குறியீட்டு நாளாகப் போற்றுவோம். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இதை அரசியல் நிகழ்வாக முன்னெடுக்கும் போது, ஆதிக்க சாதி மனநிலையைக் கேள்விக்குள்ளாக்க முடியும். மறைக்கப்பட்ட வரலாறு மக்களுக்குப் போய்ச் சேரும். எல்லாவற்றுக்கும் மேலாக, வரலாற்றை மாற்றி எழுதி மார் தட்டிக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதி வெறியர்களைத் தனிமைப்படுத்தும்.
வழக்கமாக ஒரு ஒடுக்குமுறை நிகழ்த்தப்படும் பொழுது சில நாள் கண்டனங்களோடு அதை மறந்து விடுகின்றோம். நாம் எதிர்வினை ஆற்றுவது கூட மிக மென்மையாகவே அமைகின்றது. இம்முறையாவது அரசியல் ரீதியிலான ஒரு தாக்குதலைத் தொடுப்போம். சுருக்கமாகக் கூறின், சாதி ஒழிப்பு அரசியலை இலக்காகக் கொண்ட தேசிய, புரட்சிகர, முற்போக்கு இயக்கங்கள் பல்வேறு மாவட்டங்களிலும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையே இது. சாதி ஒடுக்குமுறையின் ஆறாத வடுக்களைச் சுமந்து கொண்டிருக்கும் நாம் தரும் அரசியல் பதிலடியாக இது அமையும்.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

தேவேந்திர குல வேளாளர் உறவுகளே... !

 தேவேந்திர குல வேளாளர் உறவுகளே... !

ஈகையார் அய்யா,


சமூக நீதி போராளி,

தேவேந்திரர்களின் தெய்வம்,

தியாகி இம்மானுவேல் செகரனரின் நினைவு தினம் அனுசரிப்பதற்கும்,

அய்யாவின் ஆசி பெறவும்...,

மேலும் நம் சமுக ஒற்றுமைக்காகவும் ..,

நமது வீரத்தை காட்டவும்...,

பரமக்குடி நோக்கி படையெடுப்போம் அணி திரண்டு வாரீர் வாரீர்

இப்படிக்கு உங்களின் உறவு..பி.எஸ்.ஆர்

தேவேந்திரர் குரல்  http://devendrarkural.blogspot.in/



இடம் : பரமக்குடி

நாள் : செப்டம்பர் 11

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பசுபதிபாண்டியன் கொலை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

நெல்லை, : பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி 8 மாதங்களாகியும் கைது செய்யப்படாததை கண்டித்து தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர்  நெல்லையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆத்தூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுசெயலாளர் ராஜதேவேந்திரன், பொரு ளாளர் பொன்.ராஜேந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் யாக்கோபு வரவேற்றார். மாநகர செயலாளர் வண்ணை முருகன், மாநகர பொருளாளர் முத்துக்குமார், மள்ளர் சங்க ஜெயப்பிரகாஷ், பகுஜன் சமாஜ் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கார்த்திக், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் செல்லப்பா, எஸ்சிஎஸ்டி நலச்சங்க கோபாலன், பாஜ முருகதாஸ், தியாகி இம்மானுவேல் பேரவை தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆத்தூர் ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் 7 மாதங்களாகியும் முக்கிய குற்ற வாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. தேடப் பட்டு வரும் அவருக்கு காவல்துறையும் உடந்தையாக இருக்கிறதோ என சந்தேகம் உள்ளது. திருச்செந்தூர், குரும்பூர் உள் ளிட்ட சில பகுதிகளில் மறைமுகமாக அவர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவரை கைது செய்யக் கோரி இனி மாவட்டங்கள் தோறும் நாங்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்.
நெல்லையில் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் வீட்டுமனைகளை உரு வாக்கி விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்படியே சென்றால் தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்படும். இவ்வாறு அவர்  கூறினார்.

தியாகி இம்மானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்

தென்காசி:"தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்' என மள்ளர் நாடு நிறுவன தலைவர் சுப. அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது:""மள்ளர் நாடு மாநில செயற்குழு கூட்டம் குற்றாலம் ஹரிட்டேஜ் ஓட்டலில் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் செப்.11ம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அன்று பரமக்குடியில் நடக்கும் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளோம்.பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்யும் சி.பி.ஐ., வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கோர்ட்டில் தண்டனை பெற்றுத்தர வேண்டும். வழக்கு இழுத்தடிக்கப்பட்டால் மள்ளர் நாடு சுப்ரீம் கோர்ட்டை அணுகி எங்களின் உரிமையை வென்றிடுவோம்.

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் பரமக்குடி வரும் அனைவருக்கும் உரிய வாகன வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசும் போலீசாரும் முன் கூட்டியே திட்டமிட்டு நெறிப்படுத்திட வேண்டும்.தேவேந்திரர்களை தனி இனமாக அறிவிக்க வேண்டும். தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும். தென்காசி ரயில்வே மேம்பாலத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம் பெயர் சூட்டப்பட வேண்டும். நெல்லை-தென்காசி ரயில் சேவையை உடனடியாக துவக்க வேண்டும். இக்கோரிக்கைகளை செப்.11க்குள் அரசு நிறைவேற்றாவிட்டால் மள்ளர் நாடு ஜனநாயக போராட்டங்களை நடத்தும்'' என மள்ளர் நாடு நிறுவன தலைவர் சுப.அண்ணாமலை கூறினார்.பேட்டியின் போது மாநில பொது செயலாளர் சோலை பழனிவேல்ராஜன், மாநில பொருளாளர் தண்டாயுதபாணி, நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட தலைவர் சுப்பையா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், தென்காசி ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உடனிருந்தனர்

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்: போலீஸ் அதிகாரிகளை இடம் மாற்ற மனு தாக்கல்

சென்னை: வரும் செப்டம்பர் 11ம் தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளதால், அங்கு துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் பணியில் இருந்தால் மீண்டும் கலவரம் ஏற்படும். எனவே அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினமான செப்டம்பர் 11ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலித் அமைப்புகளை சேர்ந்த மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அன்று, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை போலீசார் வழி மறித்து கைது செய்துதாக பரவிய தகவலை அடுத்து தென் மாவட்டம் முழுவதும் கலவரம் வெடித்தது.
இதில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அரசு பஸ் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டது. இதனால் கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கலவரத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களின் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்வேல் ராஜன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மள்ளர் கழகம் தலைவர் சுபா. அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அரசு நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது. இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அரசியல் சார்பு இல்லாத சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனறு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் விசாரணை நடத்துவார் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இந்த கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, வக்கீல் முருகன், பகுஜன் சமாஜ் நிர்வாகி குரு விஜயன் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் தாமுவேல்ராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் புகழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கு மனுவில், "கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சிலர் சென்ற போது கலவரம் ஏற்பட்டு, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது மனித உரிமையை மீறிய செயலாகும்.
தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. சந்தீப்மிட்டல், ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வர் காளிராஜ் பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகிய அதிகாரிகள் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்காததே இப் பிரச்சனைக்கு காரணமாகும்.
இந்த சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில், சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் வரும் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இந்த சமயத்தில் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் அங்கு பணியில் இருந்தால், மீண்டும் பதட்டம், கலவரம் சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மேற்கண்ட அதிகாரிகளை அங்கிருந்து இடமாற்றம் செய்ய தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

புதன், 22 ஆகஸ்ட், 2012

தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை

என் அன்பு சஹோதர்கள் அனைவருக்கும் வரக்கூடிய செப்டம்பர் மாதத்தில் நம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் வன்முறைக்கு வாய்ப்பு தர வேண்டாம் அவசரபடாமல் விவேகத்துடன் செயல் படவேண்டும்

தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை

தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை

தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை

தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை

தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை

நாகை,திருவாரூர்,திருத்துறைப்பூண்டி பகுதிகளில் எமது உறவுகளால் நல்ல முறையில் சுவர் விளம்பரங்கள் பேரளவில் நடைபெற்று வருகிறது. மள்ளர்மீட்புக்களம்,தேவேந்திரர் விழிப்புணர்வு பேரவை, தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை

இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு

:
 அமைச்சர் சுந்தரராஜன் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மேலும் தகவல் பெற கீழே உள்ள பத்திரிகையாளர்கள் நகலினைப் பார்க்கவும்






நன்றி



வயிற்று  எரிச்சல்     (தேவர் தொலைக்காட்சி )

 

இம்மானுவேல் சேகரன்





 மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார். மேலாதிக்க வாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்  தென் மாவட்டங்களில் வசிக்கும்  மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.





வாழ்க்கைச் சுருக்கம்


இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.

சாதி ஒழிப்பு போராளி இம்மானுவேல் சேகரனின் ஈகத்திலிருந்து பாடம் படிப்போம்!



குடிநீர்க் கிணறுகளில் மலத்தை வீசினார்கள்; குடியிருக்கும் வீடுகளை எரித்தார்கள்; ஒருவர்கூட வெளியில் வரமுடியவில்லை; வெளியில் வந்தவர் ஒருவர்கூட உயிருடன் திரும்பவில்லை; வெட்டி சாலையில் போட்டார்கள்; பெண்கள் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை; மரண ஓலங்களும் ஒப்பாரிகளும் வீதிகளை முற்றுகையிட்டன; மாடுகளும் ஆடுகளும் ஆங்காங்கே செத்துக் கிடந்தன; குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் காட்டிலும் மேட்டிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள்; போலீசும் இராணுவமும் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இக்கொடுமைகள் எல்லாம் எங்கு நடந்தன?


ஈழத்திலா, அல்லது தற்போது புரட்சி நடைபெறும் லிபிய தேசத்திலா...

அங்கெல்லாம் இல்லை.

நம் தாய்த் திருநாடான தமிழகத்தில்தான் இத்தனைக் கொடுமைகளும் நடந்தன!

1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தின் தென்திசையிலுள்ள முதுகுளத்தூரில் நடந்த கொடுமைகள்தான் இவை.

இக்கொடுமைகள் யார் மீது அவிழ்த்துவிடப்பட்டன?

இன்றும் சமூக விடுதலைக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிற தாழ்த்தப்பட்டோர் மீதுதான் இத்தனை கொடூரங்களும்.

காலங்காலமாய் அடக்குமுறை செய்து வந்த தேவர்களின் கொட்டத்தை அடக்குவதற்காகக் கொதித்தெழுந்த எரிமலைதான் இம்மானுவேல் சேகரன். இராணுவத்தில் களமாடிய அந்த மாவீரன் தம் சொந்த ஊரான செல்லூர் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நடக்கும் தம் மக்கள் மீதான கொடுமைகளைக் கண்டு வேதனைப்பட்டார். முத்துராமலிங்கத் தேவர் என்பவரின் தலைமையில்தான் இத்தகைய சாதிவெறியாட்டங்கள் நடைபெறுவதை அறிந்த மாவீரன் இம்மானுவேல் சேகரன் நேரடியாகவே முத்துராமலிங்கத்தை எதிர்க்கத் துணிந்தார். ""பள்ளப் பயலுகளுக்கு இவ்வளவு துணிச்சலா?'' என்று வெளிப்படையாகவே தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளர்கள் மீது வன்முறையைத் திணித்தனர். தலித்துகள் பலர் ஊரைக் காலி செய்து கிளம்ப ஆரம்பித்தனர்.

இந்நிலையில் 1956 செப்டம்பர் 10ஆம் நாள் இராமநாதபுரம் ஆட்சியர் சி.வி.ஆர். பணிக்கர் அவர்கள் சமாதானக் கூட்டம் ஒன்றை முதுகுளத்தூரில் கூட்டினார். இக்கூட்டத்திற்கு ஃபார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகள், அப்போது எம்.பி.யாக இருந்த முத்துராமலிங்கத் தேவர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டனர். அழைக்கப்பட்டவர்களில் இம்மானுவேல் சேகரன் முக்கியமானவர். அனைத்துச் சமுதாயத் தலைவர்களுடனும் ஆட்சியர் கலந்து பேசியபின், கலவரத்தைத் தடுக்க கூட்டறிக்கை தயார் செய்து அனைத்துத் தலைவர்களும் கையயாப்பமிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டது. முத்துராமலிங்கத் தேவர் மட்டும் சேர்ந்து கையயாப்பமிட முடியாது என்றார். அதாவது ஒரு தாளில் கூட பள்ளர்களுடன் கையயாப்பமிட விருப்பமில்லை என்று தெரிவித்தார். இதனால் கோபமடைந்த ஆட்சியர் பணிக்கர், தேவரை எச்சரித்தார். வேறு வழியில்லாமல் தேவர் கையயாப்பமிட்டார். தலித்துகள் சார்பில் இம்மானுவேல் சேகரனும், காங்கிரஸ் சார்பில் நாடார்களும் அக்கூட்டறிக்கையில் கையயாப்பமிட்டனர். இது தொடர்பாகத்தான் இம்மானுவேல் சேகரனுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தமக்கு ஏற்பட்ட அவமானச் செயல் என்று முத்துராமலிங்கத் தேவர் வேதனைப்பட்டார். விளைவு மறுநாள் செப்டம்பர் 11 இரவு 9.30 மணிக்கு பரமக்குடியில் உள்ள பேருந்து நிலையத்தில் இம்மானுவேல் சேகரன் நின்றுகொண்டிருக்கும்போது தேவருடைய ஆட்கள் அவரை வெட்டிப் படுகொலை செய்தனர். முத்துராமலிங்கத் தேவர் உட்பட 12 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இ.பி.கோ. 302, 34, 109, 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்காகத்தான் தலித்துகளின் மீது அத்தனை வன்முறைகளும். காட்டுமிராண்டிகளின் செயல்போல முத்துராமலிங்கத் தேவரின் விசுவாசிகள் அன்றைக்குச் செய்தார்கள்.

தோழர்களே! இன்றைக்கு (செப். 11 ) சாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல்சேகரனின் நினைவு நாள். 1956ஆம் ஆண்டு அந்த மாவீரன் சிந்திய இரத்தம் தென் மாவட்டங்களில் தலித்துகளைத் தலை நிமிர வைத்தது என்றால் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் போன்ற சமரசமில்லாப் போராளியாகவே அன்றைக்கு இம்மானுவேல் சேகரன் இருந்திருக்கிறார் என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இன்னும் சாதிய இறுக்கம் உடைந்தபாடில்லை. தீண்டாமை நெறி குறைந்தபாடில்லை. சேரிகளை எரிக்கும் கொடூரங்கள் நின்றபாடில்லை. தமிழர்கள், சாதித் தமிழர்களாகவே இன்னமும் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் அரசியல் இலாபங்களுக்கு தாழ்த்தப்பட்டோரைப் பயன்படுத்தத் துடிக்கிறார்கள். திராவிட ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி; தமிழ்த் தேசியவாதிகளாக இருந்தாலும் சரி; இதில் வித்தியாசம் எதுவும் இல்லை. உதட்டளவில் சாதி ஒழிக என்றுகூட தமிழ்த் தேசியவாதிகள் முழக்கமிடத் தயங்குகிறார்கள். அடிமை நிலையிலிருக்கிற, சாதிக்கொடுமைகளுக்குள்ளாகிற தலித்துகளின் உணர்வை, விடுதலை வேட்கையை இப்போதுள்ள சாதியŠஇந்துத்துவத் தலைவர்கள் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால் தாழ்த்தப்பட்டோர் தலைமையை ஏற்று சமூக மாற்றத்தை நிகழ்த்த யாரும் தயாராக முன்வரவில்லை. இங்கே தமிழ்த் தேசியம் பேசுகிற தலைவர்கள் அனைவருமே போலித் தமிழ்த் தேசியவாதிகள்தான். ஒடுக்குமுறைக்குள்ளாகும் தமிழர்களை விடுதலை செய்யாத தமிழ்த்தேசியம் என்ன செய்துவிடப் போகிறது?

தியாகி இம்மானுவேல் சேகரன் போன்ற சமரசமற்ற போராளியாக, தலித்துகளுக்குக் கிடைத்திருக்கின்ற எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்குப் பின்னால் அணி வகுப்பது ஒன்றே அந்த மாவீரன் இம்மானுவேல் சேகரனுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

இதிலிருந்து பாடம் படிப்போம்! வரலாறு படைப்போம்! வாருங்கள் தோழர்களே!

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

மதுரை அருகே அம்பேத்கார்-இம்மானுவேல் சேகரன் சிலைகள் உடைப்பு: பல இடங்களில் மறியல்


மதுரை அவனியாபுரம் அருகே, அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதைக் கண்டித்து, சாலை மறியல் நடந்தது. நேற்று முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். 

அவனியாபுரம் பெருங்குடியில் அம்பேத்கர் சிலை, சின்ன உடைப்பில் அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் சிலைகளின் தலைகளை, சிலர் நேற்று முன்தினம் இரவு உடைத்தனர். எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அப்பகுதிக்குச் சென்றனர். பெருங்குடியில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலர் பாண்டியம்மாள் தலைமையில் முட்களை போட்டு ரோட்டை மறித்தனர். சின்ன உடைப்பில், புதிய தமிழகம் எம்.எல்.ஏ., ராமசாமி, நிர்வாகிகள் தெய்வம், பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலர் இன்குலாப் தலைமையில், மறியலில் சிலர் ஈடுபட்டனர்.

  மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கம் சீலை முன் களமிறங்கிய மள்ளர்நாடு தோழர்கள் 

போக்குவரத்து நிறுத்தப்பட்டது : தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாகத் திருப்பிவிடப்பட்டன. பின், கலெக்டர் அன்சுல் மிஸ்ரா சின்ன உடைப்பில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சிலைகள் சீரமைக்கவும், வெண்கல சிலைகளை, 15 நாட்களில் அமைக்கவும், மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். கலெக்டர், ""சிலைகள் சீரமைக்கப்படும். உடைத்தவர்களை கைது செய்ய, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. உடைத்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். சிலைகளுக்கு இரும்பு கிரில் கேட் அமைக்கப்படும்,'' என்றார். இருப்பினும் மறியலை கைவிட, அங்கிருந்தவர்கள் மறுத்து விட்டனர். சம்பவத்தைக் கண்டித்து, பெருங்குடியில் ஒரு பிரிவினர் சாலையில் சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். நேற்று மாலை வரை அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மக்கள் அவதி : நேற்று இப்பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பெருங்குடியிருந்து சின்ன உடைப்பு வரை முற்றிலும் போக்குவரத்து தடைபட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.

மதுரையில் 60 பேர் கைது : மதுரை தல்லாகுளம் பெருமாள்கோவில் அருகே, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி தாமரைவளவன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற, 14 பேரை, போலீசார் கைது செய்தனர். பந்தல்குடி அருகே இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை நிர்வாகி ராஜா தலைமையில், மறியலில் ஈடுபட முயன்ற, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். மகபூப்பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலர் எல்லாளன் உட்பட, 20 பேர், கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அருகே, மறியலில் ஈடுபட்ட மள்ளர்நாடு மள்ளர் கழக மாநில பொதுச் செயலர் பழனிவேல்ராஜ் உட்பட, 18 பேர், ஆகிய 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணசாமி கோரிக்கை : ""மதுரையில் அம்பேத்கர் மற்றும் இமானுவேலின் சிலைகளை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜாதித் தலைவர்கள் சிலை கூண்டு அமைத்த, ஜாங்கிட்! : கடந்த, 1995ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், திருநெல்வேலியில் நடந்த ஜாதிக் கலவரத்தை ஒடுக்குவதற்காக, எஸ்.பி.,யாக ஜாங்கிட் நியமிக்கப்பட்டார்.
டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்ற ஜாங்கிட், 2001ம் ஆண்டு அ.திமு.க., ஆட்சியில், திருநெல்வேலி சரக, டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டார். ஆங்காங்கே ஜாதிக் கலவரம் துவங்கியதை, ஆரம்பக் கட்டத்திலேயே கட்டுப்படுத்தியவர், ஜாதித் தலைவர்களின் சிலைகளை விஷமிகள் சேதப்படுத்தாமல் இருக்க, புதிய திட்டத்தை வகுத்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏறக்குறைய, 1,000க்கும் மேற்பட்ட ஜாதித் தலைவர்களின் சிலைகளுக்கு, இரும்புக் கம்பிகளால் கூண்டு அமைத்து பூட்டினார்.
பூட்டின் ஒரு சாவியை ஜாதித் தலைவரிடமும், மற்றொரு சாவி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டார். அத்திட்டத்தை மதுரை போலீஸ் கமிஷனராக, ஜாங்கிட் நியமிக்கப்பட்டதும், மதுரை நகர் மற்றும் புறநகர் மாவட்டப் பகுதியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த போது, அங்கிருந்து மாறுதல் செய்யப்பட்டார்.
அவரையடுத்து வந்த போலீஸ் கமிஷனர்கள், ஜாதித் தலைவர்கள் விஷயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. அப்படி செய்திருந்தால், தற்போது மதுரையில் ஏற்பட்டுள்ள, ஜாதித் தலைவர்களின் சிலை உடைப்பு கலவரத்திற்கு, முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

சிலை உடைப்பு குறித்து துப்பு கொடுத்தால் பரிசு : ""மதுரை அவனியாபுரம் மற்றும் சின்னஉடைப்பில் நடந்த சிலை உடைப்பு குறித்து தகவல் கொடுத்தால், ரூ.10ஆயிரம் வழங்கப்படும்,'' என, போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: பெருங்குடியில் சிலை உடைப்பு நடந்த பகுதியில், ஒரு சாவி கிடைத்துள்ளது. வீட்டுக்கு பயன்படுத்துவது போன்ற சாவியும், சாவி வளையத்துடன் இணைந்த எவர்சில்வர் பட்டை வடிவ "கீ செயினும்' கிடைத்துள்ளது. "கீ செயினில்' ஒரு பக்கம் பாலம் எனவும், மற்றொரு பக்கம் ஏ786006 மற்றும் 230.ஐ என எழுதப்பட்டுள்ளது. இந்த சாவி ஓட்டல் அல்லது மேன்ஷனில் பயன்படுத்துவதைப் போல் உள்ளது. சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களைப் பற்றியும், சாவி குறித்தும் தகவல் தெரிந்தால், உடனடியாக தெரிவிக்கலாம். துப்பு கொடுப்பவர்களுக்கு, ரூ.10ஆயிரம் வழங்கப்படும்,

திருப்புல்லாணி அருகே சுதந்திரதினத்தை புறக்கணித்து கறுப்புகொடி ஏற்ற முடிவு

திருப்புல்லாணி அருகே சுதந்திரதினத்தை புறக்கணித்து கறுப்புகொடி ஏற்ற முடிவு

 
மதுரையில் அம்பேத்கார், இமானுவேல் சேகரன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து திருப்புல்லாணி வட்டார கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
 
இந்தநிலையில் அந்த சுவரொட்டிகளை அவமதித்து வாசகங்கள் எழுதப்பட்டதால் அந்த பகுதி மக்களிடையே பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளபச்சேரி கிராம தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கிராம தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர்கள் புல்லாணி, தி.மு.க.துணை செயலாளர் ஆனந்தன், புதிய தமிழகம் கட்சி மாடசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டனர்.
 
கூட்டத்தில் திருப்புல்லாணி, யூனியனுக்கு உட்பட்ட சின்னமாயாகுளம், வள்ளிமாடன்வலசை, வீரன்வலசை, பொக்காரனேந்தல், மல்லல், பனையடியேந்தல், ஆனைகுடி, குளபதம், களரி, ஆலங்குளம் உள்பட 30 கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
 
அதில் கிராம தலைவர் ராஜேந்திரன், ஊராட்சிதலைவர் புல்லாணி ஆகியோர் கூறியதாவது:-
 
சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்கு பின்னரும் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது, அவமரியாதை செய்வது போன்ற விரும்பதகாத நிகழச்சிகள் தொடர்ந்து நடந்து வருவது வேதனை அளிக்கிறது.
 
இந்த செயலில் ஈடுபட்டவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு தண்டிக்க வேண்டும். சுவரொட்டிகளை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும். இந்த செயலை கண்டித்து வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ள சுதந்திரதினவிழாவை புறக்கணிப்பது என்றும், 30 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புகொடி ஏற்றி கண்டனம் தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.   

வேலுச்சாமி நாடாரைத் தெரியுமா?

PDF அச்சிடுக மின்-அஞ்சல்

velsamy_nadarமுத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகரன் இவர்களைத் தெரிந்த அளவுக்கு உங்களுக்கு வேலுச்சாமி நாடாரைத் தெரியுமா?
இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் ராமநாதபுரம் மாவட்ட அரசியலிலும், தமிழ்நாடு அரசியலிலும் இந்த வேலுச்சாமி நாடார் என்ற கேரக்டர் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது.
ஆனால்... முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் ஆகியோருக்கு கிடைக்கப்பெற்ற கவனம் வேலுச்சாமி நாடாருக்குக் கிடைக்கப் பெறவில்லையோ என்ற சந்தேகமும் ஊடகங்களைப் பார்த்தால் நமக்குக் கிடைக்கும்.
ஆகஸ்டு 14-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூரில் (இதுதான் வேலுச்சாமி நாடாரின் சொந்த ஊர்) அவருக்கு நினைவிடம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது நினைவுநாள் ஆகஸ்டு 14.
வேலுச்சாமி நாடாருக்கு நினைவுமண்டபம் என்றவுடனே...  கடைசி நேரத்தில் அனுமதி கொடுக்க மறுத்தது போலீஸ்.  வேலுச்சாமி நாடாரின் மகன் போஸ் உடனடியாக எஸ்.ஐ. அணுக, அவர் உடனே ஏ.எஸ்.பி.யை அணுகச் சொல்லியிருக்கிறார்.
ஏ.எஸ்.பி., ‘யார் இந்த வேலுச்சாமி நாடார்?’ என்று கேள்வி கேட்க...
‘முதுகுளத்தூர் தாலுகா ஆபீஸில் 1957-ல் நடந்த அமைதி கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்’ என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு நாடார் மகாஜன சங்கத் தலைவர் கரிக்கோல்ராஜ் இந்த வேலுச்சாமி நாடார் நினைவிடத்தைத் திறந்துவைத்தார்.
ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.யைப் போலவே பலரும் கேட்கும் கேள்வி,
யார் இந்த வேலுச்சாமி நாடார்?
1907-ம் ஆண்டு அப்போதைய ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, பேரையூர் கிராமத்தில் பிறந்தவர் வ.மூ.சி.வேலுச்சாமி நாடார். இவர் பிறக்கும்போது அவர்களின் குடும்பத்துக்கு அவர் பாட்டி காலத்தில் கட்டிய மாடிவீடு இருந்தது என்றால் அவரது பொருளாதார நிலையை யோசித்துக் கொள்ளுங்கள்!
1936-ல் காங்கிரஸில் தீவிரமாக  இயங்கத் தொடங்குகிறார் வேலுச்சாமி. அந்த காலகட்டங்களில் முத்துராமலிங்கத்தேவரும் காங்கிரஸில் தீவிரமாக இருந்தார். தேவரையும், நாடாரையும் இணைத்தது காங்கிரஸ் கட்சி.
முத்துராமலிங்கத் தேவரோடு மிகவும் நெருக்கமானார் வேலுச்சாமி நாடார். அதற்கு அடையாளமாக 1936-ம் ஆண்டு பேரையூரில் முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பில் நடந்தது.
குற்ற பரம்பரை சட்டத்தை எதிர்த்துதான் இந்தக் கூட்டம். இக்கூட்டத்தில் பேசியதற்காக முத்துராமலிங்கத்  தேவர், வேலுச்சாமி நாடார் உள்ளிட்டோர்  மீது வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது.
இந்நிலையில் 1936-ல் கமுதியிலிருந்து காங்கிரஸ் ஜில்லா போர்டு மெம்பர் ஆனார் வேலுச்சாமி நாடார்.  அதே ஆண்டில் காமராஜர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிறார்.
இந்தத் தகவல் கேள்விப்பட்டதும், காமராஜரைப் பற்றி கிண்டலடித்துவிட்டார் முத்துராமலிங்கத் தேவர். இதை அருகிருந்து கேட்ட வேலுச்சாமி நாடார், அப்படிப் பேசவேண்டாமே என்று தேவரிடம் கூறியிருக்கிறார். தேவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரையும் நெருங்க வைத்த காங்கிரஸே இருவருக்கும் இடையில் உரசலை உண்டுபண்ணியது.
devar-feb-16-20081939-ல் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவா, நேதாஜியா என்ற போட்டியில் சீதாராமையாவை ஆதரித்தார் காந்தி.  நேதாஜிக்கும் காந்திக்கும் ஏற்பட்ட உரசல் இந்தியா முழுவதும் நேதாஜி ஆதரவாளர்களுக்கும் காந்தி ஆதரவாளர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது.
வேலுச்சாமி நாடார் காந்தி பக்கம். முத்துராமலிங்கத் தேவர் நேதாஜி பக்கம் என்று ஆனார்கள். இந்நிலையில் 1940-ம் ஆண்டு தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வாங்குகிறார் வேலுச்சாமி நாடார். டபுள் பேரல்  ரைபிளும் வாங்குகிறார்.
காமராஜர் விவகாரத்தில், வேலுச்சாமி நாடார்- முத்துராமலிங்கத் தேவர் உறவில் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில்.... வேலுச்சாமி நாடார் வாங்கிய துப்பாக்கி முத்துராமலிங்கத் தேவருக்கு சந்தேகத்தை அதிகரித்தது. இருவருக்குமான இடைவெளி அதிகமானது.
19410-ம் ஆண்டில் பிரிட்டிஷார் இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்துவதைக் கண்டித்து காந்தி இந்தியா முழுதும் தனி நபர் சத்தியாக்கிரகத்துக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பேரையூரில் சத்தியாக்கிரகம் நடத்த வேலுச்சாமி நாடாருக்கு காந்தியிடமிருந்து கடிதம் வந்தது மாவட்ட கமிட்டி மூலமாக. இதில் பங்கேற்று வேலுச்சாமி நாடார் அலிப்பூர் மூன்றரை மாதங்கள் சிறைவாசமும் அனுபவித்தார்.
சிறை சென்று வந்தபின் காங்கிரஸின் மாவட்ட துணைத்தலைவர் ஆகிறார் வேலுச்சாமி நாடார். காமராஜரோடு நெருங்க நெருங்க முத்துராமலிங்க தேவரிடமிருந்து விலகுகிறார்!
இந்த நிலையில்தான் தேவரின் வைத்தியரான பெருமாள் பீட்டர் மூலம் வேலுச்சாமி நாடாருக்கு அறிமுகமாகிறார் இமானுவேல் சேகரன். துடிப்பான இளைஞரான இமானுவேலை காங்கிரஸ் கட்சிக்காக பட்டை தீட்டுகிறார் வேலுச்சாமி நாடார். இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான அரசியல் சக்தியாக மாறுகின்றனர் வேலுச்சாமி நாடாரும், இமானுவேல் சேகரனும்!
வரலாறு திரும்புகிறது எதிர்த்திசையில்!
1936-ல் பேரையூரில் கூட்டம் போட்டு வேலுச்சாமி நாடாரைப் புகழ்ந்த முத்துராமலிங்கத் தேவர்...
1957-ம் ஆண்டு மீண்டும் அதே பேரையூரில் கூட்டம் போட்டார் வேலுச்சாமி நாடாருக்கு எதிராக. ஜூன் 28-ம் தேதி 8 ஆயிரம் பேர் கொண்ட கூட்டம்.
வேலுச்சாமி நாடாரின் சொந்த ஊரில் நடந்த கூட்டத்தில் அவரைப் பற்றிக் கடுமையாகப் பேசுகிறார் முத்துராமலிங்கத் தேவர்!
imanuel-sekaranமுதுகுளத்தூர் கலவரம் தொடர்பாக 1957 செப்டம்பர் 10&ம் தேதி முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பணிக்கர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில் முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் ஆகியோரோடு கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர் வேலுச்சாமி நாடார். அந்த கூட்டத்தில் இமானுவேலுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் தடித்த வாக்குவாதங்கள் நடைபெற்றபோது... இமானுவேலுக்கு ஆதரவாகப் பேசினார் வேலுச்சாமி நாடார்!
அந்தக் கூட்டத்தை தொடர்ந்து இமானுவேலுக்கும், வேலுச்சாமி நாடாருக்கும் கொலைமிரட்டல்கள் விடப்பட்டன.
இமானுவேலுவின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை அறிந்த வேலுச்சாமி நாடார் அன்று இரவு இமானுவேலை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். தலைக்குக் குறிவைக்கப்பட்டிருந்த இருவரும் பேரையூரில் பாதுகாப்பாக இருந்தனர். அதற்கு முக்கியக் காரணம் வேலுச்சாமி நாடாரிடம் இருந்த துப்பாக்கி!
மறுநாள் செப்டம்பர் 11 காலை... பாரதி விழா ஒன்றில் பேசவேண்டியிருப்பதாகச் சொல்லிக் கிளம்பினார் இமானுவேல் சேகரன்.
இப்போது வேண்டாம். சூழல் சரியில்லை என்று வேலுச்சாமி நாடார் தடுத்தும் இமானுவேல் கேட்காமல் புறப்பட்டார். அன்று இரவுதான் இமானுவேல் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இமானுவேலைத் தொடர்ந்து வேலுச்சாமி நாடாருக்கு கொலைமிரட்டல்கள் தொடர்ந்தன. அப்போது வேலுச்சாமி நாடாருக்கு ஐம்பது வயது! ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள் என ஏழு பிள்ளைகளின் தகப்பன். பிள்ளைகளுக்காக உயிர்வாழவேண்டுமே என்ற எண்ணத்தில் பேரையூரிலிருந்து மூன்று மாதங்களில் காலி செய்து, மதுரைக்குச் சென்றார். அங்கேயும் கொலை நிழல்கள் துரத்தவே மணப்பாறைக்கு வந்தார்.
தனது எழுபத்து நான்காம் வயதில் 1981-ம் ஆண்டு மறைந்தார்.
காங்கிரஸூக்கு மிகத் தீவிரமாகக் களப்பணியாற்றி, வகுப்பு நல்லிணத்துக்காக பாடுபட்ட வேலுச்சாமி நாடாரை... இமானுவேலை கைவிட்டது போலவே விட்டுவிட்டது காங்கிரஸ்! வேலுச்சாமி நாடார் பற்றி இது சுருக்கமான பதிவுதான்... விரிவாக பதிவு எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் மூலமாக புத்தமாகத் தயாராகிறது!

வன்கொடுமைகளை விரைந்து விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும்

பரமக்குடி-பத்தானிதோலாவுக்கு நீதிகோரும் இயக்கம் [இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி] சார்பில் 18-08-2012 அன்று மதுரையில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். கருத்தரங்கிற்கு ஒடுக்கப்பட்ட விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் அ.சிம்சன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில், தியாகி இமானுவேல் சேகரன் பேரவை பொதுச்செயலாளர் பூ.சந்திரபோஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்தியக்கமிட்டி உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், மாநிலச்செயலாளர் பாலசுந்தரம், எஅய்சிசிடியு மாநிலச்செயலாளர் (டாக்டர் அம்பேத்கர் மின்வாரிய பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம்) பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் இளம்பரிதி பேசினர். இகக மாலெ மதுரை மாவட்டச் செயலாளர் மதிவாணன் வரவேற்புரை ஆற்றினர். வழக்கறிஞர் வேல்முருகன் நன்றி கூறினார்.
2011 செப்டம்பர் 11ல் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறிபிடித்த போலீஸ்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி ஆறு பேரை கொன்று ஓராண்டு ஆகப்போகிறது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட சம்பத் கமிஷன் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தியாகி இமானுவேல் சேகரன் பேரவை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ), இடதுசாரி அமைப்புகள், முற்போக்கு வழக்கறிஞர்கள், ஜனநாயகசக்திகள் பெருமுயற்சியால் மத்திய புலனாய்வு விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் விசாரணை துரிதமாக நடைபெறவில்லை. எனவே விசாரணையை துரிதப்படுத்தி, அன்றாட அடிப்படையில் கண்காணித்து, குற்றவாளிகளை தண்டிக்க உயர்நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. போராடும் ஒடுக்கப்பட்ட அமைப்புகள், இடதுசாரிகள், சாதி ஆதிக்கம் மற்றும் அநீதியை எதிர்க்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவேண்டுமென கருத்தரங்கம் அழைப்பு விடுக்கிறது.
பரமக்குடியில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்களை ‘கலவரக்காரர்கள்’, ‘வன்முறையாளர்கள்’ என்று சித்தரித்து துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி பேசிய முதல்வரின் ஆபத்தான பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்று கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
1. 06-08-2012 அன்று மதுரை, சின்ன உடைப்பு பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு, கவுரவத்தை சிதைக்கும் நோக்கத்துடனும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளில் திரளும் பட்டியல் இன மக்களை தடுத்து அவர்களது கோரிக்கையை எழ விடாமல் செய்யும் திட்டத்துடனும் டாக்டர் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளை சிதைத்த சாதிவெறி விஷமிகளைக் கருத்தரங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக்குரல் எழுப்பிய பிறகும் இதுவரைக் குற்றவாளிகளைக் கைது செய்யாத காவல்துறையையும் அதிமுக அரசையும் கருத்தரங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
2. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு நிகழ்வாக அறிவிக்க வேண்டும், மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டுமென்ற ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமென்றும் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
3. 1996 ஜூலை 11ல் பீகார் பத்தானிதோலாவில் 23 பேர்களை படுகொலை செய்த ரன்வீர் சேனா குற்றவாளிகளை பீகார் உயர்நீதி மன்றம் விடுதலைசெய்ததை கருத்தரங்கம் நிராகரிக்கிறது. உச்சநீதிமன்றம் வழக்கை விரைந்து மறு விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிப்பதோடு பீகார், தமிழ்நாட்டில் கொடியங்குளம், தாமிரபரணி உள்ளிட்டு நாடு முழுவதும் பட்டியலின, பழங்குடி மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை மறு விசாரணை செய்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்று கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
4. காரைக்குடி பர.அழகனுக்கு மன்னர் சேதுபதி காலத்தில் வழங்கப்பட்ட நில உரிமையை உயர்நீதிமன்றமும் அரசாங்கமும் உறுதிசெய்தபிறகும் மேல்சாதி ஆதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து வருகின்றனர். சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை உரியவர்களுக்கு ஒப்படைக்கவேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
5. மதுரை கச்சைகட்டியில் நரபலி கொடுக்கப்பட்ட ராஜலட்சுமி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரை கைது செய்து வழக்கை விரைவாக நேர்மையாக விசாரித்து தண்டிப்பதோடு அயூப்கான், கூட்டாளிகளுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
6. தமிழ் நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை, விசாரிக்கப்படுவதில்லை, தண்டிக்கப்படுவதில்லை. அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலையீட்டில் வழக்குகள் கைவிடப்படுகின்றன. விரைவு தனி நீதிமன்றம் அமைத்து அனைத்து வழக்குகளையும் ஓராண்டுக்குள் விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
7. தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தொட்டில் முதல் சுடுகாடுவரை பல்வேறுவிதமான பாரபட்சங்களுக்கும் அநீதிகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். தீண்டாமைச்சுவர்கள், கோவில் நுழைய மறுப்பு, பொதுச்சொத்துகளிலிருந்து விரட்டப்படுவது, பஞ்சமர் நிலங்கள் அபகரிக்கப்படுவது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பணிசெய்யப்படவிடாமல் அச்சுறுத்தப்படுவது, பெண்கள் பாலியல்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது, கவுரவக்கொலைகள் செய்யப்படுவது போன்ற கடுங்குற்றங்களை தடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, சமத்துவம், கவுரவம் காக்கப்பட உயரதிகாரம் கொண்ட சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
8. ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பஞ்சமர் நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட பஞ்சமர் நில மீட்பு ஆணையம் ஏற்படுத்திட வேண்டும். கோவில், மடம்,அறக்கட்டளை நிலங்களை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு வழங்கிட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டுமென்றும் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
9. மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தொடர் இயக்கங்கள், போராட்டங்கள் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இயக்கங்களுக்கு இடது, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள், சக்திகள் ஆதரவு தரவேண்டுமென கருத்தரங்கம் அழைப்பு விடுக்கிறது.

(மதுரை, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி-விருதுநகர், கரூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 250 பேர் கலந்து கொண்டனர்.)

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நிலத்தடி நீர் உறிஞ்சுவதை உடனடியாக தடுக்காவிடில்போராட்டம்; எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அறிவிப்பு

திருநெல்வேலி, நிலத்தடி நீர் உறிஞ்சுவதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஒன்றியங்களிலும் நிலத்தடி நீர் அபாயகரமான கட்டத்தை தாண்டி கீழே சென்றுவிட்டது. மாவட்ட மக்கள் பெரும்பாலும் குடிநீர், வீட்டு உபயோகம், விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கு நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் ஆழ்துளை கிணறுகளில் நீரை உறிஞ்சி கடத்தி செல்வதால் தினமும் குடிநீர் மற்றும் விவசாய கிணறுகள் வற்றிவருகின்றன. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட வேளையில் தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. இச்சூழலில் தூத்துக்குடி மாவட்டமே மிகப்பெரிய அளவில் குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. நிலத்தடி நீர் கடத்தி செல்லப்படுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பலமுறை மாவட்ட அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் எடுத்துச் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்துள்ளனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீர் அபகரிப்பை தடுத்திட தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இன்னும் ஒரு வார காலத்திற்குள் முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெறும். போராட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.க.கிருஷ்ணசாமி



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி விவசாயிகளுக்கு புதுக்கோட்டையில் விவசாய வளர்ச்சி கருத்தரங்கு நடைபெறுகின்றது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் வேளாண் உதவி இயக்குனர் மோகன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராஜன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கனகராஜ், கருங்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அல்பிரட், விவசாய பொருட்கள் விற்பனை உதவி இயக்குனர் ராஜா, வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் சங்கர்ராஜ், இளநிலை பொறியாளர் சிதம்பரம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அலாய்சியஸ் மேரி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராமனுஜம், கள மேலாளர் அமிர்தலிங்கம், , கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனரக வல்லுநர் டாக்டர்.அசோகன் உள்ளிட்ட விவசாயத் துறை அதிகாரிகளும், பிள்ளைமுத்து, அயிரவன்பட்டி முருகேசன், நிக்கோலஸ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாய மேம்பாடு குறித்து பேசினார்கள்.

கருத்தரங்கில் தலைமையேற்றுப் பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி, விவசாயதஹி விட உலகில் உன்னதமான தொழில் ஒன்றும் கிடையாது. இன்று மெல்ல, மெல்ல நசிந்து போய்க் கொண்டு இருக்கின்றது விவசாயம். உழுபவருக்கு பின்தான் மற்றவர்கள் எல்லாம் செல்வார்கள் என இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். பல்வேறு காரணத்தினால் இன்று நிலைமை மாறிவிட்டது. ஆயிரம் முதல் ஐயாயிரம் ஏக்கர் வரை நில மோசடி நடந்துள்ளது. விவசாயம் சாராத, உபயோகமில்லாத தொழிற்சாலைகள்தான் இங்கு அமைந்துள்ளது. காற்றை மாசுபடுத்தி, நிலத்தடி நீரை மாசுபடுத்தி, மண்ணை மாசுபடுத்தி, மூச்சை முடமாக்கும், மனிதர்களே வாழ முடியாத அளவில்தான் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. காரணம் விவசாயத்திற்கு முன்னிரிமை கொடுக்காமல் முக்கியத்துவபடுத்தாமல் விட்டு விட்டதுதான். இல்லையென்றால் உயிரைவிட அதிகம் நேசித்த மண்ணை மக்கள் இழந்திருக்க மாட்டார்கள். 1996ல் நான் வெற்றி பெற்றபோது ஸ்டெர்லைட் தொழிற்சாலை வரக்கூடாது என மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தினோம். பின்னர் பத்தாண்டுகளில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இப்போது மீண்டும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்துள்ளீர்கள். ஒரு மாத காலத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துள்ளேன். தூத்துக்குடி திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்து கிராமத்திலும் நின்று செல்கின்றது. அறுபதுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தொழிற்சாலைகளுக்கும், பல கிலோ மீட்டர் தூரத்தில் சென்று நெடுஞ்சாலை பணிகளுக்கும் பயன்படுத்தினார்கள். இங்கே குடிநீர் ஆறு ரூபாய் விற்றது. இப்போது புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை பகுதிகளில் விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வியாபாரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து தினங்களுக்குள் முற்றிலும் அவை நிறுத்தப்பட்டு விவசாயிகளின் நலன் காக்கப்படும். நள்ளிரவில், அதிகாலையில் திருட்டுத் தனமாக எடுத்து செல்வது தடுக்கப்படும். இல்லையென்றால் கிணறுகள் முழுவதும் வற்றி விடும். விவசாயம் பாழ்பட்டு விடும். விவசாயம் வளர, நிலத்தடி நீர் காக்கப்பட விவசாயிகள் விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும்.
ஒரு சொட்டு நீர் கூட குடிக்க இல்லாமல், விவசாயத்திற்கு இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு அனுமதிக்க கூடாது. அதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் நேரில் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சில்லாநத்தம் கிராம மக்கள் மோசடியாக நிலம் பட்டா போடப்பட்டதாக புகார் தெரிவித்தனர். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இனி ஒரு சென்ட் நிலம் கூட போலி பட்டா போட ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனுமதிக்க கூடாது. சட்டசபையில் பதினைந்து நிமிடம் ஒதுக்கினார்கள் அதில் கன்னடியன் கால்வாய் குறித்து பேசினேன். ஒரு பகுதி மக்களின் கண்ணீரை எடுத்து இன்னொரு பகுதி மக்களுக்கு பன்னீரை தெளிப்பதா என்று கூறினேன். கன்னடியன் கால்வாய் உயரத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதிகாரிகள் முழு மனதோடு, நல்லெண்ணத்தோடு உங்களுக்கு உதவ வந்துள்ளார்கள் எனவே விவசாயத்திற்கான உரம் சரியாக வந்து சேரும். உர மூட்டைகள் வேறு எங்கும் மொத்தமாக செல்லாது. கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இன்னும் ஒரு வருடத்திற்குள் பத்தாயிரம் ஏக்கர் அதிகமாக விவசாயம் செய்ய வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயம் இரு மடங்காக உயர வேண்டும். சொட்டு நீர் பாசனம் மானியம் பயன்படுத்த வேண்டும்.
குலையன்கரிசல், கூட்டாம்புளி, அத்திமரப்பட்டி பகுதியில் வாழை மட்டும் போடாமல் மஞ்சள், கரும்பு, நெல் என மாற்றுப் பயிர்கள் பயிரிட வேண்டும். ஒருங்கிணைந்த விவசாயம் செய்வதில் ஈடுபட வேண்டும். தண்ணீர் வறட்சியான பகுதியான கோவை, நாமக்கல், ராசிபுரம் பகுதகளில் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். ஒரு வீட்டில் ஐம்பது நாட்டுக் கோழி வளர்த்தால் முட்டை ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். பெண்கள் வீட்டில் இருந்து இதை செய்யலாம். ஐந்து ஏக்கரில் கோழி பண்ணை வைக்கலாம். ஓட்டப்பிடாரம் பூமி நல்ல வளமான பூமியாக மாற்ற என்றும் உறுதுணையாக இருப்பேன். வரும் புதன்கிழமைக்கு பிறகு மண் பரிசோதனை செய்கின்றார்கள். நாளை பொதுப்பணித்துறை, யூனியன் குளங்கள் சுற்றிப் பார்க்க உள்ளேன்" என்று பேசினார். தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மழைப் பயிர்கள் துறை மத்திய அரசின் உதவியுடன் கூடிய நுண்ணிர்ப் பாசன திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வேளாண்மை விற்பனை மையத்தின் சார்பில் மானிய விலையில் உளுந்து விதைகள் வழங்கப்பட்டது.

Bala Mallar


வ.புதுபட்டியைத் தொடர்ந்து சின்ன உடைப்பிலும் சதிராட்டம்.


பதிவிட்டது:தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு

மதுரையில் பதற்றம்: அம்பேத்கர், இமானுவேல் சிலைகள் விஷமிகளால் உடைப்பு


அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீட்டுக்கான சட்டம் எதிர்த்து புதிய தமிழகம் கட்சி ஐகோர்ட்டில் மனு


சென்னை : அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனு: கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 19 சதவீத இடஒதுக்கீடு வகை செய்வதற்கான சட்டம் உள்ளது. இடஒதுக்கீட்டு விதிகளை அமல்படுத்துவதில் பல குறைபாடுகள் உள்ளன. அருந்ததியினர் சமூகத்தில் உள்ள ஏழு பிரிவுகளுக்கு, முதல் இடம் ஒதுக்கப்படுவதன் மூலம், ஆதிதிராவிட சமூகத்தில் உள்ள, 69 பிரிவினருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இச்சட்டத்தால், ஆதிதிராவிட பிரிவுகளில் பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே, அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கல்வி உதவித் தொகை திட்டம்: புதிய தமிழகம் கட்சி கோரிக்கை

சென்னை, ஆக. 5: உயர்கல்வி பெற விரும்பும் ஏழை மாணவ, மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள உதவித் தொகை திட்டத்தை கல்லூரி நிர்வாகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: சமூக நீதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவ, மாணவர்களுக்கு அரசு உதவிபெறும் தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அக் கல்லூரிகளில் நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்த முடியாததால் ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
இப் பிரச்னை குறித்து நான் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். எனவே, அந்த கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்து இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 115 கோடியை முதல்வர் ஒதுக்கினார்.
மேலும், 1985-ம் ஆண்டு அரசு ஆணையின்படி, பட்டியலின மாணவ, மாணவர்களிடமிருந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது. அதையும் கல்லூரி நிர்வாகங்கள் செயல்படுத்துவதில்லை.
இந் நிலையில், முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தை எந்த கல்வி நிறுவனமும் அமல்படுத்துவதாகத் தெரியவில்லை.
எனவே, கல்லூரி நிர்வாகங்கள் அந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பட்டியலின மக்களிடம் கட்டணம் வசூலிப்பதையும் கைவிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்

சிலைகள் உடைப்பு: பஸ்கள் நிறுத்தம்



மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள சின்னஉடைப்பு பகுதியில் தலைவர்கள் சிலைகளை மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவு சேதப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. 
மதுரையிலிருந்து அவனியாபுரம், பெருங்குடி, காரியாபட்டி, ரிங் ரோடு தடங்களில் இயக்கப்படும் அரசு மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் வெளியூர் பஸ்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. 

எட்டப்பர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு.



எட்டப்பர்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு. குஷ்பு அவர்கள் கரகம் ஏந்தி "ஓத்த ரூபா தாரேன்" பாடலுடன் ஆரம்பம். தமிழீழம் பற்றி பேச அனுமதி இல்லை.

மதுரையில் பதற்றம்: அம்பேத்கர், இமானுவேல் சிலைகள் விஷமிகளால் உடைப்பு




அவனியாபுரம்: மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே டா‌க்ட‌ர் அ‌ம்பே‌‌த்க‌ர் ‌சிலை‌யு‌ம், இமானுவே‌ல் சேகர‌ன் ‌சிலை‌யி‌ல் உடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் அ‌ங்கு பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது. இதனா‌‌ல் நூ‌ற்று‌க்கண‌க்கான போ‌லீசா‌ர் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

அவ‌னியாபுர‌ம் அருகே பெருங்குடியில் விமான நிலையம் செல்லும் வழியில் உ‌‌ள்ள அம்பேத்கார் சிலையை நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர். அதேபோல பெருங்குடி அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள இமானுவேல்சேகரன், அம்பேத்கர் சிலைகளையும் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி விட்டு தப்பி விட்டனர்.

இர‌ண்டு இடங்களில் அம்பேத்கர் சிலை, இமானுவேல்சேகரன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இ‌ந்த ச‌ம்பவ‌ம் அவனியாபுரம், பெருங்குடி, சுற்று வட்டார பகுதிகளில் காட்டு தீ போல பரவியது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் ‌தலைவ‌ர்க‌ளி‌ன் ‌சிலைகளை சேத‌ப்படு‌த்‌தியவ‌ர்களை உடனடியாக கைது செ‌ய்ய‌க் கோ‌ரி விடுதலை சிறுத்தை கட்சி‌யி‌ல் பெருங்குடி ரிங் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, சாத்தூர், விருதுநகர் ஆகிய ஊர்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பல கிலோ மீட்டர் தூரம் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டதா‌ல் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

அதேபோல சின்ன உடைப்பு கிராமத்திலும் 500-கும் மேற்பட்ட பொதுமக்கள் சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனா‌ல் மதுரையில் இருந்து அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.

சிலை உடைப்பு மற்றும் பஸ் மறியல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 இடங்களில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வரு‌கி‌ன்றன‌ர்.

போராட்டக்காரர்கள் நடுரோட்டில் முட்கள், மரங்களை போட்டு தடை ஏற்படுத்தி உள்ளனர். சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.

தலைவர்களின் சிலைகள் உடைப்பு: 60 பேர் கைது: மதுரையில் பதட்டம்

மதுரையில் சிந்தாமணி, சின்னஉடைப்பு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலை இரண்டும், இமானுவேல் சேகரன் சிலையையும் நேற்று இரவு சேதப்படுத்தப்பட்டிருந்தது. 

அதிகாலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறிய-ல் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முயன்றனர். பின்னர் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.